DC vs RCB, 1st innings: காயம்பட்ட சிங்கத்தோட மூச்சு.... களத்தில் கர்ஜித்த தினேஷ் கார்த்திக்
கடைசியாக களத்தில் நின்ற சபாஸ் அகமது 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர் ஒரு புறம் களத்தில் நிற்க, ஏழாவது பேட்டராக களமிறங்கிய தினேஷ் கார்த்திக் அதிரடி காட்டினார்.

ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது. அதனை அடுத்து, இரவு தொடங்கிய போட்டியில், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி, ஃபீல்டிங் தேர்வு செய்திருக்கிறது.
முதலில் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு, டுப்ளிசி, அனுஜ் ராவாத் ஓப்பனிங் களமிறங்கினர். ஆரம்பத்திலேயே அனுஜ் டக் அவுட்டாக, டுப்ளிசி 8 ரன்களுக்கு வெளியேறினார். அவரை அடுத்து களமிறங்கிய விராட் கோலி 12 ரன்களுக்கு வெளியேற, மேக்ஸ்வெல் களத்தில் நின்று அரை சதம் கடந்தார். இதனால், அணியின் ஸ்கோர் உயர்ந்தது. மேக்ஸ்வெல் வெளியேறிய பிறகு, சுயாஷ் 6 ரன்களுக்கு வெளியேறினார். கடைசியாக களத்தில் நின்ற சபாஸ் அகமது 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர் ஒரு புறம் களத்தில் நிற்க, ஏழாவது பேட்டராக களமிறங்கிய தினேஷ் கார்த்திக் அதிரடி காட்டினார்.
Innings Break!@DineshKarthik & @Gmaxi_32 scored stunning half-centuries and Shahbaz Ahmed scored a handy 32* as @RCBTweets posted 189/5 on the board. 👏 👏
— IndianPremierLeague (@IPL) April 16, 2022
The @DelhiCapitals chase to commence shortly. 👍 👍
Scorecard 👉 https://t.co/Kp3DueRxD0#TATAIPL | #DCvRCB pic.twitter.com/qDAmQ48CWT
5 சிக்சர், 5 பவுண்டர்கள் என 34 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து கடைசி வரை நாட்-அவுட்டாக இருந்தார். தினேஷ் கார்த்திக்கின் இந்த மீட்பர் இன்னிங்ஸால் பெங்களூரு அணியின் ஸ்கோர் 150-ஐ தாண்டியது. இதனால், 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்திருக்கிறது. சவாலான இலக்கை நோக்கி களமிறங்கும் டெல்லி அணி இந்த போட்டியில் வெற்றி பெறுவது முக்கியம் என்பதால், சேஸிங்கில் அதிரடி காட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

