Covid-19 Hits IPL 2022 : டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் மேலும் இரண்டு வீரர்களுக்கு கொரோனா... ரத்து செய்யப்படுகிறதா ஐபிஎல்?
கடந்த வாரம் டெல்லி கேப்பிடல்ஸ் அணியைச் சேர்ந்த உடற்பயிற்சி ஆலோசகர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
ஐபிஎல் 2022 தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் தற்போது வரை மும்பை இந்தியன்ஸ் அணி மட்டும் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. மற்ற அணிகள் அனைத்தும் தங்களுடைய வெற்றி கணக்கை தொடங்கியுள்ளன. மற்ற ஐபிஎல் தொடரை போல் இந்த ஐபிஎல் தொடரில் முதல் இரண்டு வாரங்களில் சுவாரஸ்யம் சற்று குறைவாக உள்ளதாக டிஆர்பி ரேட்டிங் மூலம் தெரியவந்துள்ளது.
இந்தநிலையில், கடந்த வாரம் டெல்லி கேப்பிடல்ஸ் அணியைச் சேர்ந்த உடற்பயிற்சி ஆலோசகர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. கொரோனா உறுதி செய்யப்பட்ட நபர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, தற்போது டெல்லி அணியில் குறைந்தது இரண்டு வீரர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புனேயில் வருகின்ற புதன்கிழமை (ஏப்ரல் 20) பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் கேபிடல்ஸ் விளையாட உள்ளது. போட்டிக்காக புனேவிற்கு இன்று டெல்லி அணி வீரர்கள் செல்ல இருந்தநிலையிள் டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகம் தற்போது அந்த பயணத்தை ரத்து செய்துள்ளது. வீரர்களுக்கு கொரோனா பரிசோதனையில் முடிவான நிலையில், அவர் முடிவை உறுதிப்படுத்த RT-PCR சோதனைக்கு உட்படுத்தப்படுவார் என்றும் பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Delhi Capitals has canceled today's scheduled travel to Pune for the match in #IPL2022 - a player has been tested positive and he will undergo RT-PCR test to confirm the result. (Source - Cricbuzz)
— Johns. (@CricCrazyJohns) April 18, 2022
பயோ பபிள் முறையில் நடந்து வரும் 2022 ஐபிஎல் தொடரில் அணி வீரர் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால், பாதுகாப்பான முறையில் ஐபிஎல் போட்டிகளை தொடர்ந்து நடத்த முடியுமா என்பதில் சிக்கல் எழுந்துள்ளது. கடந்த ஆண்டு ஏற்பட்ட பாதிப்பு அளவிற்கு இல்லையென்றாலும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அச்சத்தை உண்டாக்கி இருக்கிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்