IPL 2022: ஒத்திவைக்கப்படும் உள்நாட்டு கிரிக்கெட் தொடர்கள்.. 2022 ஐபிஎல் இடம் மாற்றமா?
கொரோனா, ஒமிக்ரான் பரவல் காரணமாக உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களை பிசிசிஐ ஒத்தி வைக்க திட்டமிட்டுள்ளது. அதனால், 2022 ஐபிஎல் தொடரை இந்தியாவில் நடத்துவதில் சிக்கல் நிலவுகிறது.
ஐபிஎல் 2022ஆம் தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது. தற்போது உள்ள 8 அணிகள் தங்களுடைய தக்கவைப்பு வீரர்களின் பட்டியலை அறிவித்தனர். இதைத் தொடர்ந்து புதிதாக உள்ள இரண்டு அணிகள் ஏலத்திற்கு முன்பாக வீரர்களை எடுக்க தயாராகி வருகின்றன. மேலும் பிப்ரவரி மாதத்தில் ஐபிஎல் வீரர்களை தேர்வு செய்வதற்கான ஏலம் நடைபெறும் என தெரிகிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு தீவிரமாக பரவி வரும் சூழலில், இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா மூன்றாவது அலை பரவத் தொடங்கியதை அடுத்து அந்தந்த மாநிலங்கள் மீண்டும் ஊரடங்கை அறிவித்துள்ளது. இதனால், இந்தியாவில் நடைபெற இருக்கும் ஐபிஎல் 2022 தொடரில் சில மாற்றங்கள் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
10 அணிகள் பங்கேற்க இருக்கும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 4 கிரிக்கெட் மைதாங்களிலேயா அனைத்து போட்டிகளையும் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அல்லது, துபாய்க்கு மாற்றம் செய்யப்படும் திட்டம் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் நடைபெறுவதாக இருந்தால், ப்ரெபோர்ன் மைதானம், வான்கடே, டிஒய் பட்டில் மைதானம், மகாரஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானம் ஆகிய நான்கு இடங்களில் மட்டும் போட்டிகள் நடத்தப்படலாம் என தெரிகிறது.
மேலும், கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பாதுகாப்பான முறையில் ஐபிஎல் ஏலம் நடத்துவதிலும் சிக்கல் நீடிக்கிறது. இதனால், 2022 ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் வரும் பிப்ரவரி மாதத்தில் நடைபெற வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி வரும் பிப்ரவரி மாதம் 11 முதல் 13 தேதிகளில் பெங்களூருவில் நடைபெறும் என்ற தகவல் கிடைத்துள்ளது.
உள்ளூர் கிரிக்கெட் தொடர்கள் ஒத்திவைப்பு
அதுமட்டுமின்றி, இந்தியாவின் முதன்மையான முதல்தர போட்டியான ரஞ்சி டிராபி 2021-22 ம் ஆண்டு தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி சமீபத்தில் அறிவித்தார். அதேபோல், 2021-22 சீசனுக்கான கர்னல் சி கே நாயுடு டிராபி மற்றும் சீனியர் மகளிர் டி20 லீக் ஆகிய தொடர்களுக்கு தற்காலிமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
🚨 NEWS 🚨: BCCI postpones Ranji Trophy, Col C K Nayudu Trophy & Senior Women’s T20 League for 2021-22 season.
— BCCI (@BCCI) January 4, 2022
The ongoing Cooch Behar Trophy will continue as scheduled.
More Details ⬇️https://t.co/YRhOyk6680 pic.twitter.com/PvrlZZusSF
இந்த ஆண்டு, ரஞ்சி டிராபி 201-22 சீசன் ஜனவரி 13 ம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டது. கொரோனா, ஒமிக்ரான் பரவல் காரணமாகவும் மற்றும் மூன்றாவது அலை பயம் காரணமாக உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களை பிசிசிஐ ஒத்தி வைக்க திட்டமிட்டுள்ளது. அதனால், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை இந்தியாவில் நடத்துவதில் சிக்கல் நிலவுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்