Watch Video: ஆகாசத்த நான் பாக்குறேன்.. வைரலாகும் பேட் கம்மின்ஸ்-மாவி கேட்ச்..- வீடியோ !
Pat Cummins- Shivam Mavi Relay Catch: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா வீரர் பேட் கம்மின்ஸ் மற்றும் மாவி பிடித்த கேட்ச் வேகமாக வைரலாகி வருகிறது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பட்லர் மற்றும் படிக்கல் சிறப்பான துவகத்தை தந்தனர். இதன்காரணமாக 20 ஓவர்களின் முடிவில் ராஜஸ்தான் அணி 217 ரன்கள் எடுத்தது.
இந்நிலையில் இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணியின் பேட்டிங்கின் போது ஆட்டத்தின் 18ஆவது ஓவரை சுனில் நரேன் வீசினார். அப்போது முதல் பந்தை சிக்சருக்கு விரட்ட ரியான் பராக் முயற்சி செய்தார். அந்தப் பந்தை சூப்பராக டைவ் அடித்து பேட் கம்மின்ஸ்(Pat Cummins) பிடித்தார். எனினும் அவர் பவுண்டரி எல்லை கோட்டிற்கு அருகே இருப்பதை உணர்ந்து பந்தை லாவகமாக சிவம் மாவியிடம் தூக்கி வீசினார். சிவம் மாவி(Shivam Mavi) அந்தப் பந்தை சிறப்பாக பிடித்தார்.
What a beauty by pat cummins.#KKRvsRR pic.twitter.com/VfnVotUJCQ
— Shadab Yazdani (@Shadab_Yazdani) April 18, 2022
இந்த கேட்ச் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. இந்தக் கேட்ச் தொடர்பாக பலரும் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
Great work by Pat Cummins and Mavi.#IPL2022 #IPL #KKRvsRR #RRvsKKR
— Bibekananda Sahu (@IamBibeka) April 18, 2022
pic.twitter.com/ZkCMic86z6
What a grab by #cummins #IPL2022 #KKRHaiTaiyaar #KKRvsRR #IPL pic.twitter.com/7zv4FsNkpM
— Raj Kumar (@Raj9195) April 18, 2022
Spectacular catch 🔥 @patcummins30 #KKRvsRR
— Sachin Bisht (@ViSiON_Sachin) April 18, 2022
இவ்வாறு பலரும் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்