IPL 2022 Auction: சி.எஸ்.கே. அணிக்காக சிவகார்த்திகேயனின் சாய்ஸ் யார்? யார்? தெரியுமா...?
IPL 2022 Auction: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு யார்? யார்? விளையாட வேண்டும் என்று நடிகர் சிவகார்த்திகேயன் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டு்ம் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகள் இந்திய ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இந்த நிலையில், 2022ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டிகளில் புதியதாக 2 அணிகளுடன் மொத்தம் 10 அணிகள் களமிறங்க உள்ளன. மேலும், ஏற்கனவே ஆடி வந்த 8 அணிகளிலும் புதிய வீரர்களுடன் களமிறங்க உள்ளனர். ஐ.பி.எல் தொடரின் நடப்பு சாம்பியனும், பலம் வாய்ந்த அணியுமாகிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி, ஜடேஜா, ருதுராஜ் மற்றும் மொயின் அலி ஆகியோர் மட்டும் தக்கவைக்கப்பட்டுள்ளனர். இதனால், புதிய அணிக்கு எந்தெந்த வீரர்கள் வர வேண்டும் என்று பலரும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் அஸ்வின் நடத்தி வரும் யூ டியூப் சேனலுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு யார், யார் விளையாட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது, “ ஐ.பி.எல். ஏலம் இதுதான் இப்போது கிரிக்கெட் ரசிகர்கள் எல்லாரும் பேசிக்கிட்டு இருக்குற விஷயம். எனக்கு தனிப்பட்ட முறையில் நம்ம சென்னை அணிக்கு, நம்ம ஆட்கள் விளையாடினால் சந்தோஷமாக இருக்கும்.
மஞ்சள் ஜெர்சியில் நம்ம ஆட்கள் ஆட வேண்டும். அஸ்வின் ப்ரோ நீங்க திரும்ப சென்னைக்கு வரனும். உங்க அனுபவம் கண்டிப்பாக சி.எஸ்.கே. அணிக்கு உதவியா இருக்கும். அடுத்து நடராஜன். அவர் ஒரு லெப்ட்- ஆர்ம் பவுலர். அவர் இருந்தா சூப்பரா இருக்கும். அடுத்து ஷாரூக்கான். அவர் அடிச்சா பால் பயங்கரமா பறக்கும். இவங்க மூணு பேரும் மஞ்சள் நிற ஜெர்சியில் பாக்க வேண்டும்”
இவ்வாறு அவர் பேசினார்.
அஸ்வின் ஏற்கனவே சென்னை அணிக்காக பல ஆண்டுகள் ஆடியவர். பின்னர், அவர் பஞ்சாப் அணிக்காகவும், டெல்லி அணிக்காகவும் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.பி.எல். போட்டிகளிலே அதிக ரசிகர்களை கொண்ட அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வலம் வருகிறது. ஏற்கனவே ஏலத்தில் தோனி, ருதுராஜ், மொயின் அலி மற்றும் ஜடேஜாவை 42 கோடிக்கு தக்கவைத்துள்ளனர். கையில் 48 கோடி மட்டுமே சென்னை அணியின் வசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்