DC vs CSK LIVE: 9வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னை : மாஸ் காட்டிய தோனி
IPL 2021 DC vs CSK, Qualifier 1 LIVE: ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டிக்கு வெல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் போட்டி இன்று துபாயில் நடக்கிறது.
LIVE
Background
ஐ.பி.எல். தொடரில் இன்று துபாயில் நடைபெறும் இறுதிப்போட்டிக்கு முன்னேறப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் போட்டியில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த டெல்லி கேபிடல்ஸ் அணியும், சென்னை சூப்பர்கிங்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்படி, டெல்லி அணி பேட்டிங்கை தொடங்க உள்ளது.
9வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னை
சென்னை அணியின் கேப்டன் தோனி 6 பந்தில் 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் 18 ரன்கள் குவித்து 9வது முறையாக சென்னை சூப்பர்கிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
6 பந்தில் 13 ரன்கள் - வெல்லப்போது யார்?
சென்னை அணியின் வெற்றிக்கு கடைசி 6 பந்தில் 13 ரன்கள் தேவைப்படுகிறது.
18 பந்தில் 35 ரன்கள் - வெல்லப்போவது யார்?
சென்னை அணியின் வெற்றிக்கு 18 பந்தில் 35 ரன்கள் தேவைப்படுகிறது. களத்தில் ருதுராஜ் கெய்க்வாட்டும், மொயின் அலியும் களத்தில் உள்ளனர்.
இரண்டு ஓவரில் 4 விக்கெட்டுகள் - சென்னை தடுமாற்றம்
சென்னை அணி கடந்த இரண்டு ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 15 ஓவர்களில் 120 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகள் - டாம் கரன் அசத்தல் பந்துவீச்சு
டெல்லி அணிக்காக 14வது ஓவரை வீச வந்த டாம் கரனின் பந்துவீச்சில் 3வது விக்கெட்டாக ஷர்துல் தாக்கூர் தான் சந்தித்த முதல் பந்திலே ஸ்ரேயஸ் அய்யரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.