IPL 2021, MI vs CSK: யுஏஇயில் மீண்டும் தடுமாறும் சிஎஸ்கே.. இணையத்தில் கொதிக்கும் ரசிகர்கள்!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 4 விக்கெட் இழந்து திணறி வருகிறது.
ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதி இன்று முதல் தொடங்கியுள்ளது. முதல் போட்டியில் சென்னை-மும்பை அணிகள் மோதுகின்றன. துபாயில் நடைபெறும் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டு பிளசிஸ் காயம் குணம் அடைந்து சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் மும்பை அணியில் சிறிய காயம் காரணமாக கேப்டன் ரோகித் சர்மா இடம்பெறவில்லை. அத்துடன் ஹர்திக் பாண்ட்யாவும் காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை. மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா இன்று தன்னுடைய 100ஆவது ஐபிஎல் போட்டியில் களமிறங்கியுள்ளார்.
இந்நிலையில் டாஸை வென்று பேட்டிங்கில் களமிறங்கிய சென்னை அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. டுபிளசிஸ் ரன் எதுவும் எடுக்காமலும் பொல்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் வந்த மோயின் அலியும் ரன் எதுவும் எடுக்காமல் மில்னே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் சென்னை அணி 3 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்து தடுமாறியது. அதன்பின்பு அம்பாத்தி ராயுடு கையில் பந்து பட்டதால் காயம் அடைந்து வெளியேறினார். இதைத் தொடர்ந்து வந்த சுரேஷ் ரெய்னாவும் 4 ரன்களுடன் அவுட் ஆகி மிகப்பெரும் அதிர்ச்சியை தந்துள்ளார். பின்னர் வந்த தல தோனியும் 3 ரன்களுடன் ஆடெம் மில்னே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் 6 ஓவர்களின் முடிவில் சென்னை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 24 ரன்கள் எடுத்து திணறி வருகிறது.
The nightmare of #IPL2020 is back to haunt the #CSK team in #UAE. #MIvsCSK #MIvCSK #CSKvsMI #ChennaiSuperKings
— Kamal Joshi (@KamalJoshi108) September 19, 2021
இந்தச் சூழலில் வழக்கம் போல் சென்னை ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்து தங்களுடைய அதிருப்தியை பதிவு செய்து வருகின்றனர். அதில் பலரும் 2020 ஐபிஎல் சீசன் போல் இந்தப் போட்டி அமைந்துள்ளது என்றும் பதிவிட்டு வருகின்றனர். மேலும் இரண்டாவது பாதியில் முதல் போட்டியே இப்படி அமைந்துள்ளது என்று பதிவிட்டு வருகின்றனர். யுஏஇ சென்றவுடன் சிஎஸ்கே 2020 ஃபார்மை வெளிப்படுத்தி வருகிறதா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
CSK seems to be repeating history at UAE #MIvsCSK
— Rathnavelu (@nvenkatr) September 19, 2021
UAE = Nightmare for CSK#CSKvMI
— शिव कुमार यादवㅤ ㅤ ㅤ ㅤ ㅤㅤ ㅤ . (@shivK__) September 19, 2021
இவ்வாறு பலரும் தங்களுடைய ஆதங்கத்தை பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க:சென்னை-மும்பை ஐபிஎல் போட்டியில் தோனியும் விஜய்யும்.. கெத்துகாட்டும் ரசிகர்கள்!