DC vs CSK Live Updates:3 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி : புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது
IPL 2021, Match 50, DC vs CSK: துபாயில் இன்று நடைபெறும் ஐ.பி.எல். போட்டியில் முதலிடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இரண்டாவது இடத்தில் உள்ள டெல்லி அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன.
LIVE
![DC vs CSK Live Updates:3 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி : புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது DC vs CSK Live Updates:3 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி : புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/04/b7be2950ed0463b79f27f57966e111f8_original.jpg)
Background
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
3 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி : புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது
கடைசி ஓவரில் 6 பந்தில் 6 ரன்கள் தேவை என்ற நிலையில் ஒரு விக்கெட்டை இழந்தாலும் டெல்லி அணி 2 பந்து மீதம் வைத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹெட்மயர் ஆட்டமிழக்காமல் 28 ரன்களை எடுத்தார்.
வெல்லப்போவது யார்? - 6 பந்தில் 6 ரன்கள்..!
டெல்லி அணியின் வெற்றிக்கு 6 பந்தில் 6 ரன்கள் தேவை என்ற விறுவிறுப்பான சூழல் உருவாகியுள்ளது.
ஹெட்மயரின் விக்கெட்டை தவறவிட்ட கிருஷ்ணப்ப கவுதம்..!
ஆட்டத்தின் முக்கியமான விக்கெட்டான ஷிம்ரன் ஹெட்மயர் கைக்கே அளித்த கேட்ச்சை சென்னை வீரர் கிருஷ்ணப்ப கவுதம் கோட்டை விட்டதுடன் பந்தை பவுண்டரிக்கும் தவறவிட்டார்.
5வது விக்கெட்டை இழந்த டெல்லி - வெற்றி பெறப்போவது யார்?
டெல்லி அணியின் நட்சத்திர வீரர் அஸ்வின் ஷர்துல் தாக்கூர் வீசிய 15வது ஓவரில் போல்டாகி வெளிறேினார். அவர் 2 ரன்கள் எடுத்தார்.
500 ரன்களை கடந்த ஷிகர் தவான்..!
நடப்பு ஐ.பி.எல். தொடரில் ஷிகர் தவான் இன்றைய ஆட்டத்தில் 500 ரன்களை கடந்தார். ஏற்கனவே ருதுராஜ், கே.எல்.ராகுல் 500 ரன்களை கடந்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)