IND vs CAN LIVE Score: ஒரு பந்துகூட வீசப்படாமல் இந்தியா - கனடா போட்டி ரத்து! ரசிகர்கள் ஏமாற்றம்!
IND vs CAN LIVE Score, T20 World Cup 2024: டி20 உலகக் கோப்பையில் இந்தியா - கனடா அணிகளுக்கு இடையேயான போட்டி குறித்த அப்டேட்களை இங்கு உடனுக்குடன் தெரிந்துக்கொள்ளுங்கள்.
LIVE
Background
டி20 உலகக் கோப்பை 2024:
ஐசிசி டி-20 உலகக் கோப்பை தொடங்கி, மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் உற்சாகமாக நடைபெற்று வருகிறது. மொத்தமாக 20 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், அவை குரூப் - ஏ, குரூப் - பி, குரூப் - சி மற்றும் குரூப் - டி என நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் சுற்றுக்கு முன்னேறும். அந்த வகையில் இந்திய அணி தனது கடைசி லீக் போட்டியில், இன்று கனடாவை எதிர்கொள்கிறது.
இந்தியா - கனடா மோதல்:
இந்தியா மற்றும் கனடா அணிகள் மோதும் போட்டி, ஃபுளோரிடாவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.
இந்திய அணி ஏற்கனவே விளையாடிய 3 லீக் போட்டிகளிலும் வென்று, சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளதால் இன்றைய போட்டி வெறும் சம்பிரதாயமாகவே கருதப்படுகிறது. இருப்பினும், லீக் சுற்றை வெற்றியுடன் முடிக்க இந்தியா தீவிரம் காட்டுகிறது. கனடா அணி ஏற்கனவே தொடரிலிருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
உத்தேச இந்திய அணி:
ரோஹித் ஷர்மா, ஜெய்ஷ்வால், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ்
ஒரு பந்துகூட வீசப்படாமல் இந்தியா - கனடா போட்டி ரத்து! ரசிகர்கள் ஏமாற்றம்!
மழை காரணமாக இந்தியா - கனடா அணிகள் மோதும் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
IND vs CAN LIVE Score: மழையால் போட்டி தாமதம்!
இந்தியா - கனடா அணிகளுக்கு இடையேயான போட்டியில் மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.