IPL 2024: ஐ.பி.எல். கேப்டன்களின் சம்பள பட்டியல்! தல தோனிக்கு எத்தனையாவது இடம்?
ஐ.பி.எல் தொடரில் பங்கேற்கும் 10 அணிகளின் சம்பளம் சம்பளம் தொடர்பான தகவல்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்.
சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல் போட்டிகளில் சுவரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது.
ஐ.பி.எல் 2024:
அந்த வகையில் இந்த ஆண்டு 17 -வது சீசன் தொடங்க இருக்கிறது. அதன்படி, மார்ச் 22 ஆம் தேதி நடைபெற உள்ள முதல் போட்டியில் சி.எஸ்.கே. மற்றும் ஆர்.சி.பி அணிகள் மோத உள்ளன. முன்னதாக 2023 ஐபிஎல் தொடரில் இருந்த கேப்டனை மாற்றி விட்டு புதிய கேப்டனோடு 2024 ஐ.பி.எல். தொடரை சந்திக்க இரண்டு அணிகள் முடிவு செய்துள்ளன.
அதில் முக்கியமான அணி மும்பை இந்தியன்ஸ். தங்கள் அணிக்கு ஐந்து ஐ.பி.எல். கோப்பைகள் வென்று கொடுத்த ரோகித் சர்மாவை நீக்கி விட்டு, புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமித்து இருக்கிறது. அந்த வகையில் குஜராத் அணியை சுப்மன் கில் வழிநடத்த இருக்கிறார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை பொறுத்தவரை தங்கள் அணியின் கேப்டனாக இருந்த எய்டன் மார்க்ரமை நீக்கி விட்டு ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸை நியமித்துள்ளது. டெல்லி அணியை பொறுத்தவரை கடந்த ஆண்டு விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட் உடல் நலம் தேறி பயிற்சிகள் மேற்கொண்டு வரவாதால் அவர் தான் டெல்லி அணியை வழிநடத்துவார் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். இந்நிலையில், இந்த சீசனில் கேப்டன்கள் பெறும் சம்பளம் தொடர்பான தகவல்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்:
கேப்டன்களின் சம்பளப்பட்டியல்:
கேப்டன்கள் |
அணிகள் |
சம்பளம் |
பேட் கம்மின்ஸ் | சன் ரைசர்ஸ் ஹைதராபாத் | 20.50 கோடி |
கே.எல்.ராகுல் | லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் | 17 கோடி |
ரிஷப் பண்ட் | டெல்லி கேப்பிடல்ஸ் | 16 கோடி |
ஹர்திக் பாண்டியா | மும்பை இந்தியன்ஸ் | 15 கோடி |
சஞ்சு சம்சன் | ராஜஸ்தான் ராயல்ஸ் | 14 கோடி |
ஸ்ரேயாஸ் ஐயர் | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | 12.25 கோடி |
எம்.எஸ்.தோனி | சென்னை சூப்பர் கிங்ஸ் | 12 கோடி |
ஷிகர் தவான் | பஞ்சாப் கிங்ஸ் | 8.25 கோடி |
சுப்மன் கில் | குஜராத் டைட்டன்ஸ் | 8 கோடி |
பாப் டூ பிளசிஸ் | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 7 கோடி |