கிரிக்கெட் வீரர் கிளென் ஃபிலிப்ஸ் சொன்ன சீக்ரட் விசயம்!
நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் கிளன் பிலிப்ஸ். அவரது ஃபீல்டிங் திறமை அனைவரையும் பிரம்மிக்க வைக்கும்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கூட அவரின் பறந்து கேட்ச் பிடிக்கும் திறமை ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
சூப்பர் மேன் போல ஃபீல்டிங் செய்வதால் அவர், ஏலியான என்பது போன்ற கமெண்ட் செய்தனர் சிலர்,
உலகின் மொத்த பணமும் இருந்திருந்தால் விமானியாக மாறியிருப்பேன் என நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் கிளன் பிலிப்ஸ் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் மைதானத்தில் அவர் பறந்து பிடிக்கும் கேட்ச்சுகள் சமூக வலைதளத்தில் வைரலாகும்.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடுகிறார்.
குஜராத் டைட்டன்ஸ் அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், ”விமானியாக வேண்டும் என்பது என்னுடைய மிகப் பெரிய கனவு. நிறைய பணம் இருந்திருந்தால் நான் விமானியாகியிருப்பேன்.” என்று தெரிவித்தார்.