GT vs KKR Playing XI: ஹர்திக் பாண்டியா இல்லாத குஜராத் என்ன செய்ய போகிறது? ப்ளேயிங் லெவன் இதோ..!
GT vs KKR Match Playing 11: குஜராத் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியில் களமிறங்கும் வீரர்கள் யார். இம்பேக்ட் ப்ளேயர் யார் எனபதை விவரிக்கிறது இந்த தொகுப்பு.
GT vs KKR Match Playing 11:
ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கடந்த மார்ச் மாதம் 31 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இதில் சென்னை, டெல்லி, மும்பை,கொல்கத்தா, பஞ்சாப், ராஜஸ்தான்,குஜராத், லக்னோ, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய 10 அணிகள் கோப்பைக்காக களமிறங்கியுள்ளன. கொரோனா காலமாக உள்ளூர் மைதானங்களில் போட்டிகள் நடத்தப்படவில்லை. இந்நிலையில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஒவ்வொரு அணியும் தங்களது உள்ளூர் மைதானத்தில் களமிறங்குவதால் ரசிகர்கள் இந்த ஐபிஎல் திருவிழாவை கோலகலமாக்கி வருகின்றனர்.
இன்று நடைபெறும் லீக் தொடரின் 13வது போட்டியில் நடப்புச் சாம்பியன் குஜராத் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதிக் கொள்கின்றன. இதில் நடப்புச் சாம்பியனான குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா இன்று களமிறங்கவில்லை. மேலும் இன்று குஜராத் அணியை அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர்ன் ரஷித் கான் வழிநடத்தவுள்ளார்.
இன்றைய போட்டி குஜராத் அணிக்கு மிகவும் முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது. இந்த போட்டியில் வென்றால் குஜராத் அணியின் ஹாட்ரிக் வெற்றியாக பதிவாகும். மேலும், இது குஜராத் அணிக்கு உள்ளூர் போட்டியாகும்.
குஜராத் டைட்டன்ஸ் பிளேயிங் லெவன்
விருத்திமான் சாஹா(விக்கெட் கீப்பர்), ஷுப்மன் கில், சாய் சுதர்சன், விஜய் சங்கர், டேவிட் மில்லர், ராகுல் டெவாடியா, அபினவ் மனோகர், ரஷித் கான்(கேப்டன்), முகமது ஷமி, அல்சாரி ஜோசப், யாஷ் தயாள்
குஜராத் டைட்டன்ஸ் அணியின் இம்பேக்ட் ப்ளேயர்கள்:
ஜெயந்த் யாதவ், ஸ்ரீகர் பாரத், மோஹித் சர்மா, மேத்யூ வேட், ஜோசுவா லிட்டில்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பிளேயிங் லெவன்
ரஹ்மானுல்லா குர்பாஸ்(விக்கெட் கீப்பர்), என் ஜெகதீசன், நிதிஷ் ராணா(கேபட்ன்), ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், ஷர்துல் தாக்கூர், சுயாஷ் சர்மா, லாக்கி பெர்குசன், உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இம்பேக்ட் ப்ளேயர்கள்:
அனுகுல் ராய், வைபவ் அரோரா, டேவிட் வைஸ், மந்தீப் சிங், வெங்கடேஷ் ஐயர்