GT vs DC IPL 2023: புள்ளி விவரத்தில் போட்டுதாக்கும் குஜராத்.. தாங்குமா டெல்லி..? நேருக்கு நேர் ஒரு பார்வை!
ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் 2 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. இந்த இரு போட்டிகளிலும் குஜராத் அணியே வெற்றிபெற்றுள்ளது.
ஐபிஎல் தொடரின் 44வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் இன்று மோத இருக்கின்றன. இந்த போட்டியானது இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்டியாவும், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு டேவிட் வார்னரும் தலைமை தாங்குகின்றனர். இரு அணிகளும் இந்த சீசனில் இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில், குஜராத் அணி 6 போட்டிகளில் வெற்றியும், டெல்லி வெறும் 2 வெற்றியும் பெற்றுள்ளன.
இந்த சீசனில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதியதில், குஜராத் அணி அந்த போட்டியில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
நேருக்கு நேர்:
ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் 2 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. இந்த இரு போட்டிகளிலும் குஜராத் அணியே வெற்றிபெற்றுள்ளது.
புள்ளி விவரங்கள்:
புள்ளி விவரங்கள் | குஜராத் | டெல்லி |
அதிகபட்ச ஸ்கோர் | 171 | 162 |
குறைந்த ஸ்கோர் | 163 | 157 |
முதல் பேட்டிங் வெற்றி | 1 | 0 |
சேஸிங் வெற்றி | 1 | 0 |
அதிக ரன்கள் | சுப்மன் கில் (98 ரன்கள்) | அக்ஸர் பட்டேல் (44 ரன்கள்) |
அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் | சுப்மன் கில் (84) | ரிஷப் பண்ட் (43 ரன்கள்) |
அதிக விக்கெட்கள் | முகமது ஷமி - 5 | முஸ்தாபிசுர் ரஹ்மான் - 3 |
சிறந்த பந்துவீச்சு | லாக்கி பெர்குசன் (4/28) | முஸ்தாபிசுர் ரஹ்மான் (3/23) |
கணிக்கப்பட்ட அணி விவரம்:
குஜராத் டைட்டன்ஸ்:
விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), ஷுப்மான் கில், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), விஜய் சங்கர், டேவிட் மில்லர், அபினவ் மனோகர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், நூர் அகமது, முகமது ஷமி, ஜோஷ் லிட்டில்
டெல்லி கேபிடல்ஸ்:
டேவிட் வார்னர் (கேப்டன்), பில் சால்ட் (விக்கெட் கீப்பர்), மிட்செல் மார்ஷ், மணீஷ் பாண்டே, பிரியம் கார்க், சர்ஃபராஸ் கான், அக்சர் படேல், ரிபால் பட்டேல், குல்தீப் யாதவ், அன்ரிச் நார்ட்ஜே, முகேஷ் குமார்
முழு அணி விவரம்:
குஜராத் டைட்டன்ஸ்: ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ஷுப்மன் கில், டேவிட் மில்லர், அபினவ் மனோகர், சாய் சுதர்சன், விருத்திமான் சாஹா, மேத்யூ வேட், ரஷித் கான், ராகுல் தெவாடியா, விஜய் சங்கர், முகமது ஷமி, அல்சாரி ஜோசப், யாஷ் தயாள், பிரதீப் சங்வான், தர்ஷன் நல்கண்டே, ஜெயந்த் யாதவ், ஆர். சாய் கிஷோர், நூர் அகமது, கேன் வில்லியம்சன், ஒடியன் ஸ்மித், கே.எஸ்.பாரத், சிவம் மாவி, உர்வில் படேல், ஜோசுவா லிட்டில், மோஹித் ஷர்மா
டெல்லி கேபிடல்ஸ்:
டேவிட் வார்னர் (கேப்டன்), பில் சால்ட், மனிஷ் பாண்டே, சர்ஃபராஸ் கான், அபிஷேக் போரல், பிரித்வி ஷா, ரிலீ ரோசோவ், ரோவ்மன் பவல், யாஷ் துல், மிட்செல் மார்ஷ், அக்சர் படேல், லலித் யாதவ், அமன் கான், அன்ரிச் நார்ட்ஜே, முஸ்தபிசுர் ரஹ்மான், லுங்கி என்கிடி , இஷாந்த் சர்மா, குல்தீப் யாதவ், கலீல் அகமது, முகேஷ் குமார், சேத்தன் சகாரியா, கமலேஷ் நாகர்கோடி, பிரவின் துபே, விக்கி ஓஸ்ட்வால்