Rashid Latif on Arjun Tendulkar: ”இந்த வேகம் எல்லாம் பத்தாது’’ சச்சின் மகனுக்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர் அட்வைஸ்..!
இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஜூன் டெண்டுல்கரின் பந்து வீச்சு குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரஷித் லத்திஃப் கூறியுள்ளது மிகுந்த கவனத்தினைப் பெற்றுள்ளது.
Rashid Latif on Arjun Tendulkar: மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரர் கிரிகெட் ஜாம்பவான் சச்சினின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர். 23 வயதான அர்ஜுன் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். இந்த போட்டியில் 2 ஓவர்கள் வீசிய அர்ஜுன் தெண்டுல்கர் விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை. அதன் பின்னர் ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில், பவர்ப்ளேவில் இரண்டு ஓவர்கள் வீசினார். அதன் பின்னர் அர்ஜுனுக்கு பந்து வீச வாய்ப்பு வழங்கப்படவில்லை.
அதன் பின்னர், 20வது ஓவரில் ஹைர்தராபாத் அணியின் வெற்றிக்கு 21 ரன்கள் தேவை என இருந்தது. அப்போது அர்ஜூனிடம் பந்தை வழங்கி அணியின் கடைசி ஓவரை வீசச் சொன்னார் கேப்டன் ரோகித் சர்மா. இந்த ஓவரில் 5 பந்துகள் மட்டுமே வீசிய அவர் ஹைதரபாத் அணியின் புவனேஷ்வர்குமாரின் விக்கெட்டை வீழ்த்தினார். இது அர்ஜுன் டெண்டுல்கரின் முதல் விக்கெட் என்பதால் அணியினர் வெற்றியுடன் இதனையும் கொண்டாடினர். இதனால் அர்ஜுன் டெண்டுல்கருக்கு பல இடங்களில் இருந்து வாழ்த்து வந்த வண்ணம் இருந்தது.
பாகிஸ்தான் வீரர் அட்வைஸ்:
இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஜூனின் பந்துவீச்சு குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரஷித் லத்திஃப் கூறியுள்ளது மிகுந்த கவனத்தினைப் பெற்றுள்ளது. அதாவது, அர்ஜுன் தனது பந்து வீச்சின் போது உள்ள உடல் மொழியை மாற்றிக் கொள்ள வேண்டும். இதற்காக அவர் அதிகம் பயிற்சி பெறவேண்டும் என கூறியுள்ளார். மேலும் அவர், அர்ஜுன் தற்போது தான் தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கியுள்ளார். அவர் உழைக்க வேண்டியது அதிகம் உள்ளது.
இந்த வேகம் போதாது:
மேலும், அவரது தற்போதைய உடல் மொழியைக் கொண்டு அதிக வேகத்தினை உண்டு பண்ண முடியாது. சிறந்த பயோமெக்கானிக்கல் பயிற்சியாளரைக் கொண்டு பயிற்சியில் ஈடுபடவேண்டும். சச்சினே இதை செய்திருக்க முடியும். ஆனால் அவரும் உள்நாட்டு கிரிக்கெட் தொடருக்காக காத்திருந்துள்ளார். மேலும் பந்தை வீசிவிட்டு ஆடுகளத்திற்கு முற்றிலும் வெளியில் செல்கிறார். அவர் கொஞ்சமாவது ஆடுகளத்திற்கு உள்ளே வரவேண்டும். அவரது உடல் மொழியைக் கொண்டு 135 கிலோ மீட்டர் வேகத்தினை உண்டு செய்ய முடியும். சிறந்த பேடஸ்மேனாகவும் அவர் வலம் வருவார். இன்னும் சிறப்பான பயிற்சிகளைப் பெற்றால் இரண்டில் இருந்து மூன்று ஆண்டுகளுக்குள் சிறந்த வீரராக அவரால் உருவாக முடியும் எனவும் ரஷி தனது யூடூப் சேனலான Caught Behind சேனலில் கூறியுள்ளார்.
மேலும் அவர், அர்ஜுன் தற்போது தனது தந்தை விளையாடிய மும்பை அணிக்காக விளையாடுகிறார். இதுவே இவர் வேறு அணிக்காக விளையாடி இருந்தால் அர்ஜுன் மற்றும் சச்சின் என இருவரின் மனநிலையும் வேறு மாதிரி இருந்து இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.