மேலும் அறிய

MS Dhoni Retirement: யார் சொன்னது இதுதான் தோனிக்கு கடைசி ஐபிஎல்ன்னு... சுரேஷ் ரெய்னா கொடுத்த சூப்பர் அப்டேட்..!

பிளே ஆஃப் சுற்றுக்கு சென்னை அணி சென்றால் எப்படியும் தோனி தனது கடைசி தொடரில் கோப்பையை வென்று கொடுத்து ஓய்வு பெறுவார் என்றும் கூறப்படுகிறது.

கடந்த மார்ச் 31ம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடரானது கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. எந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் என்று இன்றளவும் கணிக்க முடியவில்லை. எப்படியாவது பிளே ஆஃப்க்கு சுற்றுக்கு தகுதிபெற வேண்டும் என ஒவ்வொரு அணியும் கடுமையாக போராடி வருகிறது. இப்படி ஒருபுறம் இருக்க, தோனி இந்தாண்டு கண்டிப்பாக ஓய்வுபெற்று விடுவார் என்றும் கூறப்பட்டு வருகிறது.

எம்.எஸ். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 11 போட்டிகளில் விளையாடி 13 புள்ளிகளுடன் பிளே ஆப் சுற்றை நெருங்கி விட்டது. இன்னும் மீதமுள்ள 3 போட்டிகளில் 2 ல் வெற்றிபெற்றால் கூட பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்று விடும். அப்படி, பிளே ஆஃப் சுற்றுக்கு சென்னை அணி சென்றால் எப்படியும் தோனி தனது கடைசி தொடரில் கோப்பையை வென்று கொடுத்து ஓய்வு பெறுவார் என்றும் கூறப்படுகிறது. எங்கே சர்வதேச போட்டிகளை போன்று தோனி இந்த ஐபிஎல் லீக் தொடரிலும் ஓய்வுபெற்றுவிடுவாரோ என்ற அச்சத்தில் அவரது ரசிகர்கள் சென்னை அணி எங்கெல்லாம் விளையாடுகிறதோ.. அங்கெல்லாம் சென்று மஞ்சள் ராஜ்ஜியத்தை மைதானம் முழுக்க பரவ விடுகின்றனர். தொடர்ந்து, தோனி மைதானத்திற்குள் அடியெடுத்து வைத்தால் ’தோனி’ ’தோனி’ என்ற முழக்கம் வானத்தை முட்டுகிறது. அரங்கம் அதிர்கிறது. 

இந்தநிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் இந்திய வீரருமான சுரேஷ் ரெய்னா, எம்.எஸ்.தோனி இன்னும் ஓராண்டு காலம் விளையாடுவார் என தெரிவித்துள்ளார். இந்த தகவலானது ரசிகர்களுக்கு மேலும் உற்சாகத்தை அளித்துள்ளது. 

ஐபிஎல் தொடரில் ஓய்வுபெற்ற சுரேஷ் ரெய்னா ரெய்னா ஜியோசினிமாவின் நிபுணர்கள் குழுவில் ஒரு பகுதியாக உள்ளார். இவர் கமெண்ட்ரி ஒன்றில் பேசியபோது, “சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இந்தாண்டு கோப்பையை வென்று கொடுத்துவிட்டு, இன்னும் ஒரு ஆண்டு விளையாட திட்டுமிட்டுள்ளேன் என்று தோனி என்னிடம் கூறினார்” என தெரிவித்தார். 

தோனியின் ஓய்வு குறித்து சுரேஷ் ரெய்னா பேசிய தகவல் தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. 

முன்னதாக கடந்த வாரம் , லக்னோவில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இடையேயான போட்டியிம்போது தொகுப்பாளர் டேனி மோரிசன், எம்.எஸ். தோனியிடம் “உங்களது கடைசி தொடரை எப்படி அனுபவித்து வருகிறீர்கள்” என்று கேட்டார். அதற்கு தோனி புன்னகையுடன், “ சரி, இதுதான் எனது கடைசி ஐபிஎல் தொடர் என்று நீங்கள் முடிவு செய்துவிட்டீர்களா? என கேட்டார். இதைகேட்டு ஒரு கணம் ஆச்சரியமான டேனி மேரிசன் அதிர்ச்சியில் உறைந்தார். அப்போது லக்னோ மைதானமே ஆர்ப்பரித்தது. 

தொடர்ந்து டேனி மேரிசன் லக்னோவில் உள்ள கூட்டத்தை சுட்டிக்காட்டி, "நீங்கள் அதைக் கேட்கிறீர்கள் தானே! எம்.எஸ். தோனி அடுத்த ஆண்டு மீண்டும் வரப் போகிறார்" என்றார்.

கடந்த சீசனில் மோசமான ஆட்டத்தில் இருந்து மீண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்தாண்டு ஐபிஎல் சீசனில் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார். இந்தாண்டு எப்படியாவது கோப்பையை வென்றாக வேண்டும் என்ற முனைப்பிலும் விளையாடி வருகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget