DC vs LSG, 1st innings: அதிரடி காட்டிய ராகுல் - ஹூடா ஜோடி... டெல்லி வெற்றிப்பெற 196 ரன்கள் இலக்கு!
9 போட்டிகளில் ஆடி 6 வெற்றி 3 தோல்வியுடன் உள்ள லக்னோ அணி புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. டெல்லி அணி 8 போட்டிகளில் ஆடி 4 வெற்றி 4 தோல்விகளுடன் 6வது இடத்தில் உள்ளது.
ஐபிஎல் தொடர் முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. இனி வரும் போட்டிகள் ஒவ்வொன்றும் ப்ளே ஆப் வாய்ப்பு சுற்றை நிர்ணயிக்கும் என்பதால் ஒவ்வொரு அணியும் வெற்றி பெறவே முயற்சிக்கும். மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்கி இருக்கும் முதல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் அணியும் மோதி வருகின்றன.
இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் அணி, பேட்டிங் தேர்வு செய்தது. கேப்டன் ராகுலுடன் ஓப்பனிங் களமிறங்கிய டி காக், 3 பவுண்டரிகள், 1 சிக்சர் என வந்த வேகத்தில் ரன் அடித்துவிட்டு அவுட்டாகி வெளியேறினார். அவரை அடுத்து ஹூடா களமிறங்கினார். ராகுலும், ஹூடாவும் சேர்ந்து நிதானமாக அடினர். இருவரும் அரை சதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இந்த ஜோடி, 95 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் நின்றது.
52 ரன்கள் அடித்திருந்தபோது ஷர்துல் தாகூரின் பந்துவீச்சில், கேட்ச் கொடுத்து அவுட்டாகி வெளியேறினார். அவரை அடுத்து ஸ்டாய்னிஸ் களமிறங்கினார். விக்கெட் சரிந்தாலும், ராகுல் தனது அதிரடி ஆட்டத்தை தொடங்கினார். அவர் இன்றைக்கும் சதம் கடப்பார் என எதிர்ப்பார்த்தபோது, 77 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதில், 4 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் அடங்கும். ராகுலில் விக்கெட்டையும் வீழ்த்தியது தாகூர்தான். இன்றைய போட்டியில் டெல்லி அணி சார்பாக அவர் மட்டுமே 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
Innings Break!
— IndianPremierLeague (@IPL) May 1, 2022
Half-centuries from KL Rahul (77) and Deepak Hooda (52) propel #LSG to a total of 195/3 on the board.
Scorecard - https://t.co/wmwJlb9D5J #DCvLSG #TATAIPL pic.twitter.com/z8AgPkoshb
இதனால், டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்திருக்கிறது. 9 போட்டிகளில் ஆடி 6 வெற்றி 3 தோல்வியுடன் உள்ள லக்னோ அணி புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. டெல்லி அணி 8 போட்டிகளில் ஆடி 4 வெற்றி 4 தோல்விகளுடன் 6வது இடத்தில் உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு ப்ளே ஆப் வாய்ப்பு இன்னும் பிரகாசம் ஆகும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்