CSK vs DC, 1st innings: கான்வேயின் அதிரடியால் வாழ்வா சாவா போட்டியில் 208 ரன்கள் எடுத்திருக்கிறது சிஎஸ்கே!
கடைசியாக ஆடிய 5 போட்டியில் டெல்லி 4 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இதனால், சவாலான இலக்கை சேஸ் செய்து வெற்றி பெறுமா அல்லது சென்னை அணி கட்டுப்படுத்துமா என்பது அடுத்த இன்னிங்ஸில் பார்ப்போம்.
ஐ.பி.எல். தொடரில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதி வருகின்றன. மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி, ஃபீல்டிங் தேர்வு செய்தது.
அதனை அடுத்து சென்னை அணிக்காக ஓப்பனிங் களமிறங்கிய டெவன் கான்வே, ருத்துராஜ் ஜோடி அதிரடியாக ரன் சேர்த்தது. நிதானமாக ஆடிய கான்வே, அரை சதம் கடந்து அசத்தினார். அவரை அடுத்து ருத்துராஜூம் அரை சதம் கடப்பார் என எதிர்ப்பார்த்தபோது, 43 ரன்களுக்கு அவுட்டாகினார்.
விக்கெட் சரிந்தாலும், தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கான்வே, 87 ரன்கள் எடுத்து அவுட்டாகினார். 7 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் என 49 பந்துகளில் 87 ரன்கள் எடுத்த அவர், சதத்தை மிஸ் செய்தார். அதனை அடுத்து, ஆட்டம் ஸ்லோவானது.
FIFTY from Conway 👏👏
— IndianPremierLeague (@IPL) May 8, 2022
Live - https://t.co/8GNsHHA0pb #CSKvDC #TATAIPL pic.twitter.com/N8f73mzuh8
ஒன் - டவுன் களமிறங்கிய தூபே 32 ரன்கள் சேர்க்க, ராயுடு 5 ரன்களுக்கு வெளியேறினார். அதனை அடுத்து பேட்டிங் களமிறங்கிய தோனி, 19 ரன்கள் எடுத்து தன் பங்கிற்கு ரன் சேர்த்தார். மொயின் அலி 9 ரன்களுக்கு அவுட்டாகி ஏமாற்றம் அளிதார். இதனால், 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்திருக்கிறது சென்னை அணி. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியைப் பொறுத்தவரை, நார்ஜே 3 விக்கெட்டுகளையும், கலீல் அகமது 2 விக்கெட்டுகளையும், மிட்சல் மார்ஷ் 1 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.
டெல்லி 10 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் 5வது இடத்திலும், சென்னை 10 போட்டிகளில் 3 வெற்றியுடன் 9வது இடத்திலும் உள்ளது. இந்த போட்டியில் தோற்றால் சென்னை அணியின் கடைசி நம்பிக்கையும் தகர்ந்து விட வாய்ப்பு உள்ளது. இரு அணிகளும் இதுவரை 26 போட்டிகளில் ஆடியுள்ளன. டெல்லி 10 போட்டியிலும் சென்னை 16 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. கடைசியாக ஆடிய 5 போட்டியில் டெல்லி 4 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இதனால், சவாலான இலக்கை சேஸ் செய்து வெற்றி பெறுமா அல்லது சென்னை அணி கட்டுப்படுத்துமா என்பது அடுத்த இன்னிங்ஸில் பார்ப்போம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்