Watch Video: போ.. போ.. முடியை அறுத்துடுவேன்..! மைதானத்திலே மல்லுகட்டிய அபிஷேக் - திக்வேஷ் ரதி - சண்டையை பாருங்க
ஐபிஎல் போட்டியில் நேற்று லக்னோ - சன்ரைசர்ஸ் அணி மோதிய போட்டியில் திக்வேஷ் ரதி - அபிஷேக் சர்மா மோதிக்கொண்டனர்.

ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் சூழலில் நேற்று நடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்று லக்னோ அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்பை தட்டிப்பறித்தது.
திக்வேஷ் ரதி - அபிஷேக் சர்மா மல்லுக்கட்டு:
இந்த போட்டியில் நேற்று லக்னோ வீரர் திக்வேஷ் ரதியும், ஐதரபாத் வீரர் அபிஷேக் சர்மாவும் மோதிக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. முதலில் பேட் செய்த லக்னோ அணி 205 ரன்களை குவித்தது. இதையடுத்து, 206 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணிக்கு அதர்வா டைடே 13 ரன்னில் அவுட்டானாலும், அபிஷேக் சர்மா பட்டாசாய் வெடித்தார். பவுண்டரியும், சிக்ஸருமாக விளாசி லக்னோ ஸ்கோரை உயர்த்தினார்.
Heated🥵😶#SRHvsLSG #LSGvsSRH #LSGvSRH pic.twitter.com/N4Q5wVoGHC
— 𝗩𝗿𝘂𝘀𝗵𝗰𝗵𝗶𝗸𝗮 𝗥𝗮𝘀𝗵𝗶♏️ (@lupin9848) May 19, 2025
அப்போது, அபாரமாக ஆடிக்கொண்டிருந்த அபிஷேக் சர்மாவை சுழற்பந்துவீச்சாளர் திக்வேஷ் ரதி அவுட்டாக்கினார். அவரது சுழலில் சிக்கிய அபிஷேக் சர்மா 20 பந்துகளில் 4 பவுண்டரி 6 சிக்ஸருடன் 59 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவர் அவுட்டாகி வெளியே சென்றபோது திக்வேஷ் ரதி அவரைப் பார்த்த போ போ என்பது போல சைகை காட்டினார்.
முடியை இறுக்கிப்பிடிச்சுடுவேன்:
இதனால், கோபம் அடைந்த அபிஷேக் சர்மா போய்விடு என்பது போல விரலை காட்டினார். நடுவர்களும், சக வீரர்களும் இருவரையும் சமாதானப்படுத்தினர். அப்போது திக்வேஷ் ரதியும் பதிலுக்கு போ என்பது போல சைகை காட்ட, கோபம் அடைந்த திக்வேஷ் ரதி முடியை இறுக்கிப்பிடித்துவிடுவேன் என்பது போல சைகை காட்டினார். மேலும் போட்டி முடிந்து இருவரும் கை கொடுத்துக் கொண்டபோதும் இருவரும் வாக்கவாதத்தில் ஈடுபட்டனர்.
வெறுப்பேற்றிய ரசிகர்:
Satisfaction level 📈🔥#LSGvsSRH pic.twitter.com/xFlKy4eZ9g
— Orange Papa 🧡 (@Mouni__Royal_) May 19, 2025
மேலும், இந்த போட்டியின் முக்கியமான கட்டத்தில் லக்னோ வீரர் பிஷ்னோய் பந்து ஒன்றை பவுண்டரிக்கு விட்டபோது சன்ரைசர்ஸ் ரசிகர் ஒருவர் திக்வேஷ் ரதியின் ஸ்டைலான எழுதுவது போல எழுதிக் காட்டி வெறுப்பேற்றினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. லக்னோ அணி நிர்ணயித்த 206 ரன்களை 18.2 ஓவர்களில் எட்டி சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது. சன்ரைசர்ஸ் வெற்றியால் லக்னோவின் ப்ளே ஆஃப் முற்றிலும் முடிவுக்கு வந்தது.
ஐபிஎல் தொடர் மூலம் நன்கு பிரபலமான வீரர்களாகவும், வளர்ந்து வரும் வீரர்களாகவும் இவர்கள் இருவரும் உள்ளனர். அபிஷேக் சர்மா அதிரடி பேட்ஸ்மேனாக வளர்ந்து வருகிறார். திக்வேஷ் ரதியின் கோபமும், அவரது அணுகுமுறையும் பலருக்கும் அவர் மீது விமர்சனத்தை உண்டாக்கினாலும் அவர் சிறப்பாக பந்துவீசுகிறார். எதிரணி வீரரிடம் நடந்து கொள்ளும் அவரது அணுகுமுறையை அவர் மாற்றிக் கொண்டால் அவரது எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




















