IPL 2021 Suspended: வீரர்களுக்கு கொரோனா - ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைப்பு
கொரோனா தொற்றால் வீரர்கள் பாதிக்கப்பட்டு வருவதால், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தற்காலிகமாக ஒத்திவைப்பு.
வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் நடப்பு ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
14-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 9-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் லீக் போட்டிகள் சென்னை மற்றும் மும்பையில் நடைபெற்ற நிலையில், இரண்டாவது லீக் போட்டிகள் அகமதாபாத் மற்றும் டெல்லியில் நடைபெற்று வந்தன. இதுவரை 29 லீக் போட்டிகள் முடிந்துள்ளன. இந்நிலையில், கொல்கத்தா அணி வீரர்கள் வருண் சக்கர வர்த்தி, சந்தீப் வாரியாருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால், நேற்று நடைபெறவிருந்த கொல்கத்தா - பெங்களூர் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் லட்சுமிபதி பாலாஜி,
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் லட்சுமிபதி பாலாஜி, சிஇஓ காசி விஸ்வநாதன், பேருந்து கிளீனர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, ஒட்டுமொத்த சென்னை அணியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால், நாளை நடைபெற இருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ரத்து செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இன்று நடைபெற உள்ள மும்பை இந்தியன்ஸ் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெறுவதில் எந்த சிக்கலும் இல்லை என கூறப்பட்டது. கடுமையான பயோ பபுள் பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் வீரர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருப்பது ஐபிஎல் நிர்வாகத்தை கவலை அடையச் செய்தது.
<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">IPL suspended for this season: Vice-President BCCI Rajeev Shukla to ANI<a href="https://twitter.com/hashtag/COVID19?src=hash&ref_src=twsrc%5Etfw" rel='nofollow'>#COVID19</a> <a href="https://t.co/K6VBK0W0WA" rel='nofollow'>pic.twitter.com/K6VBK0W0WA</a></p>— ANI (@ANI) <a href="https://twitter.com/ANI/status/1389483311978876932?ref_src=twsrc%5Etfw" rel='nofollow'>May 4, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
இந்நிலையில், நடப்பு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது என்று பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா அறிவித்துள்ளார். புதிய தேதிகள் அறிவிக்கப்பட்டு எஞ்சிய போட்டிகள் நடத்தப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.