மேலும் அறிய

டென்மார்க் ஓபன்: மீண்டும் வெற்றியுடன் களத்திற்கு திரும்பிய பி.வி.சிந்து : காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி !

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற பிறகு சிறிய இடைவேளைக்கு டென்மார்க் ஓபனில் மீண்டும் பி.வி.சிந்து பங்கேற்று உள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார். அத்துடன் ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் இரண்டு பதக்கங்கள் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் படைத்திருந்தார். அதன்பின்னர் உபெர் கோப்பை பேட்மிண்டன் தொடரில் பி.வி.சிந்து பங்கேற்கவில்லை. 

இந்நிலையில் ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு இன்று தொடங்கிய டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரில் பி.வி.சிந்து பங்கேற்றார். அதில் முதல் சுற்றில் பி.வி.சிந்து உலக தரவரிசையில் 29ஆவது இடத்தில் உள்ள துருக்கி வீராங்கனை யிகிட்டை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சிந்து முதல் கேமை 21-12 என்ற கணக்கில் வென்றார். அதன்பின்னர் இரண்டாவது கேமையும் 21-10 என்ற கணக்கில் எளிதில் வென்றார். இதன்மூலம் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு பி.வி.சிந்து தகுதி பெற்று அசத்தினார். 

 

டென்மார் ஓபனின் முதல் நாளான இன்று ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஶ்ரீகாந்த் சக இந்திய வீரரான சாய் பிரணீத்தை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் ஶ்ரீகாந்த் 21-14,21-11 என்ற கணக்கில் வென்றார். அதேபோல் மற்றொரு இந்திய வீரர் சமீர் வெர்மா தாய்லாந்து நாட்டின்  விதித்சாரனை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சமீர் வெர்மா 21-17,21-14 என்ற கணக்கில் வென்றார். இந்த இருவரும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினர். 

 

மேலும் எம்.ஆர்.அர்ஜூன்-துருவ் கபிலா ஜோடி முதல் சுற்றில் இங்கிலாந்து இணையை வென்றது. அதேபோல் சத்விக்சாய்ராஜ் மற்றும் சிராஜ் செட்டி இணையும் இங்கிலாந்து இரட்டையர் அணியை வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. ஆடவர் இரட்டையர் பிரிவில் மனு ஆட்ரி மற்றும் சுமித் ரெட்டி ஜோடி மலேசிய இணையிடம் தோல்வி அடைந்து முதல் சுற்றுடன் வெளியேறியது. 

மேலும் படிக்க: ஏபிடி, கோலி டூ கெயில்.. டி20 உலகக்கோப்பையில் அதிக ரன்கள் விளாசிய அதிரடி மன்னர்கள் யார்?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
"இனி பணமே தேவை இல்ல" சாலை விபத்தில் சிக்கியவர்கள் நோ டென்ஷன்!
Embed widget