Rohit century: 100 நாட் அவுட்... ஓவர்சீஸில் முதல் சதத்தை பதிவு செய்த ரோஹித்! வலுவான நிலையில் இந்தியா!
இரண்டாம் நாள் ஆட்டத்தின்போது, ரோஹித் ஷர்மா சர்வதேச கிரிக்கெட்டில் 15,000 ரன்களை கடந்தார்
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் இந்தியாவுக்கு சாதகமாக நகர்ந்து வருகிறது. இந்த போட்டியில், ஓப்பனிங் பேட்ஸ்மேன் ரோஹித் ஷர்மா சதம் கடந்து அசத்தியுள்ளார். இதன் மூலம், ஓவர்சீஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்துள்ளார். 1 சிக்சர், 12 பவுண்டரிகள் என 205 பந்துகளில் சதம் கடந்து அசத்தியுள்ளார் ஹிட்-மேன் ரோஹித்.
இதுவரை, டெஸ்ட் கிரிக்கெட்டில் உள்ளூர் மைதானங்களில் மட்டும் 7 சதங்களை அடித்துள்ள ரோஹித், முதல் முறையாக ஓவர்சீஸ் சதத்தை இன்று பதிவு செய்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில், அதிகபட்சமாக கடந்த 2019-ம் ஆண்டு ராஞ்சியில் நடைபெற்ற தென்னாப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் ரோஹித் 212 ரன்கள் எடுத்திருந்தார்.
இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகளைப் பொருத்தவரை, இந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக சதம் அடித்துள்ளார் ரோஹித். இந்த தொடரில் அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து மூன்று அரை சதம் கடந்த ரோஹித் ஷர்மா, இந்த போட்டியில் அடித்த அரை சதத்தை சதமாக மாற்றி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி இரண்டாம் நாள் ஆட்டத்தின்போது, ரோஹித் ஷர்மா சர்வதேச கிரிக்கெட்டில் 15,000 ரன்களை கடந்தார்.
Hitman 2.0 in Test cricket since 2019. pic.twitter.com/nbDt8JAv6g
— Johns. (@CricCrazyJohns) September 4, 2021
The transformation of #RohitSharma into a world class opening batsman has been staggering. This century was inevitable given the way he has batted in this series. Privileged to see this. Class.
— Harsha Bhogle (@bhogleharsha) September 4, 2021
முதல் இன்னிங்ஸில் இந்தியா 191 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி, 99 ரன்கள் முன்னிலை பெற்று 290 ரன்கள் எடுத்தது. மூன்றாவது நாளான இன்று, இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது. இந்நிலையில், புஜாராவும், ரோஹித்தும் களத்தில் இருக்க இந்திய அணி நிதானமான ஆட்டத்தை விளையாடி வருகிறது.
‛போலியோ டூ டோக்கியோ’ உலகம் வியக்கும் இந்தியன்: உலக சாம்பியன் பிரமோத் பக்தின் கதை !