P.V.Sindhu in Korean Open: தொடர் தோல்விகள்..கொரியா ஓபனில் இருந்து வெளியேறிய பி.வி.சிந்து.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
P.V.Sindhu in Korean Open: இந்திய பேட்மிண்டன் நட்சத்திரமும், ஒலிம்பிக்கில் பதக்கமும் வென்ற பி.வி.சிந்து, கொரியா ஓபன் தொடரின் இரண்டாம் சுற்றிலே தோல்வியுற்று தொடரில் இருந்து வெளியேறினார்.
இந்திய பேட்மிண்டன் நட்சத்திரமும், ஒலிம்பிக்கில் பதக்கமும் வென்ற பி.வி.சிந்து, கொரியா ஓபன் சூப்பர் 500 போட்டியின் இரண்டாம் சுற்றிலே தோல்வியுற்று தொடரில் இருந்து வெளியேறினார்.
கொரியா ஓபன் பேட்மிண்டன்:
கொரியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி நேற்று யோசு நகரில் தொடங்கியது. இந்த போட்டியில் 20 நாடுகளை சேர்ந்த 80 வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் பி.வி.சிந்து, எச்.எஸ்.பிரணாய், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் கலந்து கொண்டு இந்த போட்டியில் கலந்து இந்தியாவுக்காக களமிறங்கினர். கனடா ஓபனில் வெற்றி பெற்ற இந்திய இளம்வீரரான லக்ஷயா சென்-னும் இந்த போட்டியில் பெயரை பதிவு செய்துவிட்டு தனிப்பட்ட காரணத்திற்காக தொடரில் இருந்து விலகினார்.
சிந்து vs யூ போ பை:
இந்நிலையில் இன்று நடைப்பெற்ற இப்போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாம் சுற்றில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான சிந்துவும், சீன தைபேவின் யூ போ பையும் மோதினர். ஆரம்பத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்திய ,யூ போ பை 18-21, 21-10, 13-21 என்ற செட் கணக்கில் இந்தியாவின் ஸ்டார் வீராங்கனையான சிந்துவை வீழ்த்தினார். இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றுள்ள பி.வி.சிந்து, இவ்வாறு மூன்று ஆட்டங்களிலும் தோல்வியடைந்து வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிந்துவின் தொடர் தோல்விகள்:
முன்னதாக சிந்து, தனது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக 5 மாத காலம் ஓய்வில் இருந்தார். அதன்பிறகு நடைப்பெற்ற இந்தோனேசிய ஓபனிலும் தோல்வியுற்று வெளியேறிய சிந்து, சமீபத்தில் நடைப்பெற்ற கனடா ஓபனிலும் காலிறுதி சுற்றோடு வெளியேறினார். அதை தொடர்ந்து, இந்த தோல்வி அவரை பெரிதும் பாதித்ததாக சிந்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
My US Open journey came to an end in the quarterfinals, where I faced the talented Gao Fang Jie. Despite having previously defeated her in Canada, she outplayed me in straight sets this time, making effective use of my weaknesses. I must commend her for being fully prepared and… pic.twitter.com/VzCqIX9OAr
— Pvsindhu (@Pvsindhu1) July 16, 2023
இதனை அடுத்து கொரியன் ஓபனில் சிந்து நிச்சயம் வெற்றி பெறுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் அவரது தோல்வி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இந்த வருடம் ஆரம்பித்து ஆறு மாதங்கள் கடந்த நிலையில் ஒலிம்பிக்கில் இரண்டு முறை பதக்கம் வென்ற நட்சத்திர வீராங்கனையான சிந்துவின் வெற்றிக்கான தேடல் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.