Murali Sreeshankar Wins Gold: சர்வதேச நீளம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்.. முரளி ஸ்ரீஷங்கர் அதிரடி..
சமீபத்தில் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் பங்கேற்றிருந்த அவர், இப்போது சர்வதேச போட்டி ஒன்றில் தங்கம் வென்று அசத்தி இருக்கிறார்.

கிரீஸ் நாட்டில் நடைபெற்று வரும் 12வது சர்வதேச நீளம் தாண்டுதல் தொடர் போட்டியில் இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர் தங்கப்பதக்கம் வென்றிருக்கிறார். சமீபத்தில் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் பங்கேற்றிருந்த அவர், இப்போது சர்வதேச போட்டி ஒன்றில் தங்கம் வென்று அசத்தி இருக்கிறார்.
கிரீஸில் நடைபெற்ற போட்டியில் 8.31 மீட்டர் தூரம் தாண்டிய இவர், முதல் இடத்தைப் பிடித்தார். தேசிய அளவில் 8.36 மீட்டர் தூரம் தாண்டி ரெக்கார்டு படைத்திருக்கும் அவர், கிரீஸில் தங்கப் பதக்கம் வென்று அசத்தி இருக்கிறார். மற்றொரு இந்திய வீரரான தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜெஸ்வின் ஆல்ட்ரின் 7.69 மீட்டர் தூரம் தாண்டி 17வது இடத்தைப் பிடித்தார்.
News Flash:
— India_AllSports (@India_AllSports) May 25, 2022
Murali Sreeshankar wins GOLD medal in Long Jump event of International Jumps meet at Greece with whopping attempt of 8.31m. pic.twitter.com/MBeV7VnFGZ
ஸ்வீடனைச் சேர்ந்த தோபியாஸ் 8.27 தூரம் தாண்டி இரண்டாவது இடத்தையும், பிரான்சு நாட்டைச் சேர்ந்த ஜூல்ஸ் 8.17 மீட்டர் தூரம் தாண்டி மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
முரளி ஸ்ரீசங்கர் நீளம் தாண்டிய வீடியோவைக் காண:
Murali Sreeshankar jumped to 8.31m in his 3rd attempt of mens long jump in the 12th International Jumps meeting at Kallithea, Greece pic.twitter.com/wYZIWXK0Zc
— Rahul PAWAR (@rahuldpawar) May 25, 2022
தங்கப்பதக்கம் வென்ற முரளி ஸ்ரீசங்கருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
பிற முக்கியச் செய்திகள்:
‘நாடோடு பேசு’ விவாதத்தில் நடந்தது என்ன? உள்ளது உள்ளபடி..!
— ABP Nadu (@abpnadu) May 25, 2022
வரும் ஞாயிறு மாலை 6 மணிக்கு – ABP நாடு YouTube பக்கத்தில் காணத்தவறாதீர்கள்https://t.co/wupaoCzH82 | #நாடோடுபேசு #NadoduPeasu #ABPநாடு #ABPNews #ABPNadu pic.twitter.com/4kHVQDaOkD
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

