மேலும் அறிய

IND vs ENG, 2nd Innings Highlights: முன்னிலையில் இந்தியா... வெற்றியை நோக்கி ஆட்டம்; முடிவை தரும் நாளைய ஆட்டம்!

மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், இந்தியா 171 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.  இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி ஸ்கோர்: 270/3

இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் இந்தியாவுக்கு சாதகமாக நகர்ந்தது. இந்த போட்டியில், ஓப்பனிங் பேட்ஸ்மேன் ரோஹித் ஷர்மா சதம் கடந்து அசத்தியுள்ளார். இதன் மூலம், ஓவர்சீஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்துள்ளார். 1 சிக்சர், 12 பவுண்டரிகள் என 205 பந்துகளில் சதம் கடந்து அசத்தியுள்ளார் ஹிட்-மேன் ரோஹித். மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், இந்தியா 171 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.  இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி ஸ்கோர்: 270/3

முன்னதாக, இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸில், ஓப்பனிங் களமிறங்கிய ராகுல் - ரோஹித் இணை நிதானமாக ரன் சேர்த்தது. 46 ரன்கள் எடுத்திருந்தபோது ஆண்டர்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து களமிறங்கிய புஜாரா ரோஹித்தோடு பார்ட்னர்ஷிப் அமைத்து ரன் சேர்த்தார். இந்த இணை 153 ரன்களுக்கு களத்தில் நின்றது.

இதுவரை, டெஸ்ட் கிரிக்கெட்டில் உள்ளூர் மைதானங்களில் மட்டும் 7 சதங்களை அடித்துள்ள ரோஹித், முதல் முறையாக ஓவர்சீஸ் சதத்தை இன்று பதிவு செய்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில், அதிகபட்சமாக கடந்த 2019-ம் ஆண்டு ராஞ்சியில் நடைபெற்ற தென்னாப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் ரோஹித் 212 ரன்கள் எடுத்திருந்தார். 

இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகளைப் பொருத்தவரை, இந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக சதம் அடித்துள்ளார் ரோஹித். இந்த தொடரில் அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து மூன்று அரை சதம் கடந்த ரோஹித் ஷர்மா, இந்த போட்டியில் அடித்த அரை சதத்தை சதமாக மாற்றி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி இரண்டாம் நாள் ஆட்டத்தின்போது, ரோஹித் ஷர்மா சர்வதேச கிரிக்கெட்டில் 15,000 ரன்களை கடந்தார். 

போட்டியின் 81வது ஓவரில், ரோஹித் 127 ரன்கள் எடுத்திருந்தபோது ராபின்சன் பந்துவீச்சில் ரோஹித் கேட்ச் கொடுத்து அவுட்டானார். நியூ பால் எடுத்தது இங்கிலாந்துக்கு பலன் அளித்தது. அவரைத் தொடர்ந்து, அதே ஓவரில் அரை சதம் கடந்திருந்த புஜாராவும் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். இங்கிலாந்துக்கு ஒரே ஓவரில் ப்ரேக்-த்ரூ கொடுத்து இந்தியாவின் நிதான ஆட்டத்துக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளார் ராபின்சன். இப்போது கேப்டன் கோலியும் - ஜடேஜாவும் களத்தில் இருக்கின்றனர்.

தலைப்பு செய்திகள்

ஆஸ்திரேலியாவுக்கே ஆப்படிச்ச வங்கதேசம்! டெஸ்டில் வரலாற்று வெற்றி! கங்காரு பாய்சை கொத்துக்கறி போட்ட நாகின் படை!
ஆஸ்திரேலியாவுக்கே ஆப்படிச்ச வங்கதேசம்! டெஸ்டில் வரலாற்று வெற்றி! கங்காரு பாய்சை கொத்துக்கறி போட்ட நாகின் படை!
Devdutt Padikkal: 4 வருட இடைவெளி.. வந்த வேகத்தில் செஞ்சுரி! தடைக்கல்லை உடைத்த படிக்கல்! மிடில் ஆர்டரை சுமப்பாரா?
Devdutt Padikkal: 4 வருட இடைவெளி.. வந்த வேகத்தில் செஞ்சுரி! தடைக்கல்லை உடைத்த படிக்கல்! மிடில் ஆர்டரை சுமப்பாரா?
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
Hyundai SUV: அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
Online Property Registration : பத்திர பதிவிற்கு இன்று முதல் நேரில் வர வேண்டாம்.! புது ரூல்ஸ்- என்னென்ன ஆவணங்கள் தேவை.? லிஸ்ட் இதோ..
பத்திர பதிவிற்கு இன்று முதல் நேரில் வர வேண்டாம்.! புது ரூல்ஸ்- என்னென்ன ஆவணங்கள் தேவை.? லிஸ்ட் இதோ..
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
Embed widget