இன்று ஐசிசி கூட்டம்; டி20 உலகக்கோப்பை அறிவிப்பு வரலாம்!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டம்  இன்று நடைபெறுகிறது. இதில், அடுத்த 8 ஆண்டுகளுக்கான போட்டி அட்டவணையை தீர்மானிப்பது குறித்து ஆலோசனை செய்யப்படுகிறது.

FOLLOW US: 

காணொலி மூலம் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கலந்துகொள்கிறார். இந்தக் கூட்டத்தில், இந்த ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து  ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.

மேலும், அடுத்த 8 ஆண்டுகளுக்கான வருங்கால போட்டி அட்டவணையை தீர்மானிப்பது குறித்தும், முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் அடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை எப்போது தொடங்கி நடத்தலாம் என்பது குறித்தும் ஆலோசனை செய்யப்படுகிறது. கிரிக்கெட் போட்டியை உலகம் முழுவதும் எல்லா நாடுகளிலும் வளர்ப்பது குறித்தும், குறிப்பாக பெண்கள் கிரிக்கெட்டை மேலும் மேம்படுத்துவது மற்றும் பிரபலப்படுத்துவது பற்றியும் ஆலோசிக்கப்படுகிறது. 2028ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் இடம் பெறுவதற்கு முன்னெடுக்க வேண்டிய முயற்சிகள் குறித்தும் ஆலோசனை நடக்க உள்ளது.இன்று ஐசிசி கூட்டம்; டி20 உலகக்கோப்பை அறிவிப்பு வரலாம்!

16 அணிகள் பங்கேற்கும் 7ஆவது டி20  உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக இந்த போட்டியை இந்தியாவில் நடத்த முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தப் போட்டிக்கு மாற்று இடமாக ஐக்கிய அரபு அமீரகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. எனினும், இந்த போட்டியை இந்தியாவில் நடத்த வேண்டும் என்பதில் பிசிசிஐ ஆர்வமாக இருக்கிறது. எனவே கொரோனா சூழ்நிலை குறித்து ஆய்வு செய்து சரியான முடிவுக்கு வர ஒரு மாத காலம் அவகாசம் வழங்கும்படி பிசிசிஐ சார்பில் ஐசிசியிடம் வேண்டுகோள் வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் புதிய விதிகளை ஐசிசி அறிவித்தது. 
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் வரும் ஜூன் 18ஆம் தேதி மோத உள்ளனர். இங்கிலாந்து நாட்டில் உள்ள சவுதாம்ப்டன் நகரில் நடைபெற உள்ள இந்த போட்டியில் கடைபிடிக்கப்பட உள்ள புதிய விதிகள் குறித்து ஐசிசி அறிவித்துள்ளது. இதன்படி, இந்த போட்டி டிராவில் முடிந்தால் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு அணிகளும் வெற்றியாளர்கள் என்று அறிவிக்கப்படுவார்கள்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் புதிய விதிகளை அறிவித்தது ஐசிசி!

இந்த போட்டிக்கான ரிசர்வ் நாள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டி நடைபெறும் 5 நாட்களில் ஏதாவது ஒரு நாளில் மழை, நேர இழப்பு உள்ளிட்ட காரணத்தால் நேர இழப்பு ஏற்பட்டால், அதை ஈடு செய்வதற்காக இந்த ரிசர்வ் நாள் பயன்படுத்தப்பட உள்ளது. போட்டியில் முடிவு கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த நாள் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்படாது.

Tags: cricket bcci t20 world cup ICC Board meeting

தொடர்புடைய செய்திகள்

Steve Smith Test Ranking : முதல் இடத்துக்கு முன்னேறிய ஸ்டீவன் ஸ்மித் : 4-வது இடத்திற்கு முன்னேறிய கோலி..!

Steve Smith Test Ranking : முதல் இடத்துக்கு முன்னேறிய ஸ்டீவன் ஸ்மித் : 4-வது இடத்திற்கு முன்னேறிய கோலி..!

ரொனால்டோ செய்த சம்பவம்; கோகோ கோலாவுக்கு ரூ.29 ஆயிரம் கோடி நஷ்டம்!

ரொனால்டோ செய்த சம்பவம்;  கோகோ கோலாவுக்கு ரூ.29 ஆயிரம் கோடி நஷ்டம்!

Indian Women cricket Team: சாதனைப் படைக்குமா இந்திய மகளிர் அணி; 7 ஆண்டுகளுக்கு பின்பு முதல் டெஸ்ட் இன்று !

Indian Women cricket Team: சாதனைப் படைக்குமா இந்திய மகளிர் அணி; 7 ஆண்டுகளுக்கு பின்பு முதல் டெஸ்ட் இன்று !

Sachin on WTC: டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தைக் காண ஆர்வமாக உள்ளேன் : உற்சாகத்தில் சச்சின்..!

Sachin on WTC: டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தைக் காண ஆர்வமாக உள்ளேன் : உற்சாகத்தில் சச்சின்..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் - 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் - 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு!

டாப் நியூஸ்

கருப்புப்பூஞ்சை மருந்தில் பாகுபாடா? - நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுப்பு..!

கருப்புப்பூஞ்சை மருந்தில் பாகுபாடா? - நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுப்பு..!

BREAKING: யூடியூப் சேனல் அட்மினாக செயல்பட்டதால் நடவடிக்கை : மதனின் மனைவி கிருத்திகா கைது..!

BREAKING: யூடியூப் சேனல் அட்மினாக செயல்பட்டதால் நடவடிக்கை : மதனின் மனைவி கிருத்திகா கைது..!

மதுரை : தாய்மாமாவுடன் திருமண நிச்சயம் : படிக்கும் கனவு பறிக்கப்பட்ட சிறுமி தற்கொலை..!

மதுரை : தாய்மாமாவுடன் திருமண நிச்சயம் : படிக்கும் கனவு பறிக்கப்பட்ட சிறுமி தற்கொலை..!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயலராக உமா மகேஸ்வரி ஐ.ஏ.எஸ்., நியமனம்!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயலராக உமா மகேஸ்வரி ஐ.ஏ.எஸ்., நியமனம்!