மேலும் அறிய

மதுரையில் 90% பணிகள் முடிந்தது, உலக தர ஹாக்கி மைதானம்.. தென் மாவட்ட ஹாக்கி வீரர்களுக்கு கிடைத்த பெருமை!

மதுரையில் ஹாக்கி உலகக் கோப்பை: 30 கோடி மதிப்பிலான மைதானம் தயார். தென் மாவட்ட ஹாக்கி வீரர்களுக்கு கிடைத்த பெருமையாக அமையும்.

மதுரையில் கிட்டத்தட்ட 90% ஹாக்கி மைதான பணிகள் முடிவுற்ற நிலையில் கடைசி கட்ட பணிகள் சென்று கொண்டிருகிறது.

மதுரையில் 14- ஆவது ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலகப்கோப்பை 
 
மதுரை மாவட்ட விளையாட்டு அரங்க வளாகத்தில் வரும் 28-11-2025 முதல் 10-12-2025 வரை 14வது ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலகப்கோப்பை நடைபெற உள்ளது. இந்த ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலக கோப்பை போட்டியில், மொத்தம் 24 அணிகள் 6 பிரிவுகளில் மோதவுள்ளன. நவம்பர் மாதம் 28 ஆம் தேதி முதல் டிசம்பர் மாதம் 10 ஆம் தேதி வரை மொத்தம் 72 போட்டிகள், மதுரை மற்றும் சென்னை என இரண்டு நகரங்களில் நடைபெறவுள்ளன. இந்த தொடரில் உலகம் முழுவதிலும் இருந்து 24 அணிகள் பங்கேற்க உள்ளன.
 
30 கோடி செலவில் இந்த மைதானம் தாயார்
 
இந்நிலையில் இந்த ஹாக்கி போட்டிக்கான மைதனாம் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் தயாராகி வருகிறது. இந்த மைதனாம் தென்மாவட்ட மக்களுக்கு மிகப்பெரிய வரப் பிரசாதம் எனவும் சொல்லப்படுகிறது. மேலும் இது குறித்து மதுரை மாவட்ட ஹாக்கி சங்கத் தலைவர் ஏ.ஜி.கண்ணன் நம்மிடம் பேசுகையில்...,” தமிழகத்தில் முன்னணி வீரர்களாக, தற்போது 75% ஹாக்கி விளையாட்டு வீரர்கள் தென் மாவட்டத்தில் இருந்து தான் வருகின்றனர். மதுரை, விருதுநகர், பரமக்குடி, ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி என ஏகப்பட்ட இடங்களில் இருந்து சிறந்த வீரர்கள் உருவாகியுள்ளனர். ஹாக்கி குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. தற்போது நடைபெறவுள்ள ஆடவர் ஜூனியர் ஹாக்கி போட்டி மதுரைக்கு பெருமையான ஒன்று.
 
மதுரையில் உலக தரத்தில் ஹாக்கி மைதனாம் 
 
இந்த ஜூனியர் போட்டியில் விளையாடும் நபர்கள் தான் சீனியர் போட்டிகளிலும் கலந்துகொள்வார்கள். இந்நிலையில் மதுரையில் உலக தரத்தில் ஹாக்கி மைதனாம் நடைபெற்று வருகிறது. 30 கோடி செலவில் இந்த மைதானம் தாயார் ஆகிறது. இந்த நீள டர்ஃப்  ஒலிம்பிக் போட்டியில் பயன்படுத்தக் கூடிய ஒன்று. அந்த டர்ஃப் தான் இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இரவு நேரங்களில் கூட ஹாக்கி விளையாடுவது சிறப்பாக இருக்கும். இந்நிலையில் ஹாக்கி போட்டிக்கான விழிப்புணர்வு வாகனம் மதுரை வருகிறது. 2 நாட்களில் மதுரையில் பல இடங்களுக்கு செல்கிறது. இதன் மூலம் ஹாக்கி முக்கியதுவம் குறித்து மதுரையில் ஈர்ப்பு ஏற்படும். அமைச்சர்கள், பொதுமக்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் வரவேற்பு அளிப்பார்கள். இந்த விழிப்புணர்வு வாகனம் தமிழகம் முழுவதும் பல இடங்களுக்கு சென்று வருகிறது”. எனவும் தெரிவித்தார்.
 
90% பணிகள் ஹாக்கி மைதானத்தில் நிறைவு பெற்றுள்ளது.
 
மதுரையில் கிட்டத்தட்ட 90% ஹாக்கி மைதான பணிகள் முடிவுற்ற நிலையில் கடைசி கட்ட பணிகள் சென்று கொண்டிருகிறது. போட்டிகள் நடைபெறும் மைதானத்தின் தரம், இருக்கை அமைப்புகள், ஒளி மற்றும் ஒலி அமைப்புகள், குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள், அவசர கால மருத்துவ சேவை மையம், பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு கேமராக்கள், வீரர்கள் ஓய்வு அறைகள், வீரர்கள் உடற்பயிற்சி செய்யும் பகுதிகள், போக்குவரத்து மற்றும் வாகன நிறுத்தம் உள்ளிட்ட அனைத்து பணிகளும் சர்வதேச தர நிலைக்கேற்ப விரைவில் செய்து முடிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளுக்கும் ஒப்பந்த நிறுவனங்களுக்கும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, சமீபத்தில் அறிவுரை வழங்கினார், என்பது குறிப்பிடதக்கது.

தலைப்பு செய்திகள்

பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
Embed widget