Hockey World Cup 2023: ஹாக்கி உலகக் கோப்பையில் 200வது கோல்.. சாதனையை படைக்க தொடங்கிய இந்தியா.. முதலிடத்தில் யார்?
ஆஸ்திரேலியா, நெதர்லாந்து மற்றும் பாகிஸ்தானுக்கு அடுத்தபடியாக உலகக் கோப்பை தொடரில் 200 கோலுக்கு மேல் அடித்த நான்காவது அணியாக இந்தியா வலம் வருகிறது.

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் நேற்று ஒடிசா மாநிலத்தில் நேற்று தொடங்கியது.
நேற்று மொத்தமாக நான்கு போட்டிகள் நடைபெற்றது. அதில் நடந்த முதல் போட்டியில் அர்ஜெண்டினா அணி 1-0 என்ற கோல் கணக்கில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது. இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணி 8-0 என்ற கணக்கில் பிரான்ஸையும், இங்கிலாந்து அணி 5-0 என்ற கோல் கணக்கில் வேல்ஸை வீழ்த்தியது.
தொடர்ந்து, ஸ்பெயினை எதிர்கொண்ட இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தாண்டுக்கான உலகக் கோப்பை தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
நேற்றைய முதல் நாளில் 4வது போட்டியாக இந்தியா மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதின. இரவு 7 மணிக்கு தொடங்கிய போட்டியில், இந்திய அணியும் ஸ்பெயின் அணியும் வெற்றி பெறும் முனைப்பில் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது 12வது நிமிடத்தில் இந்திய அணியைச் சேர்ந்த அமித் ரோஹிதாசா கோல் அடித்து முதல் கோலை இந்திய அணிக்கு பதிவு செய்தார். இது இந்திய ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
அதையடுத்து 21வது நிமிடத்தில் ஹர்திக்கும் கோல் அடிக்க இந்திய அணியின் பலம் வலுப்பெற்றது. இது ஸ்பெயின் அணிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியது. அதையடுத்து எப்படியாவது கோல் அடித்து விட வேண்டும் என ஸ்பெயின் அணி முயற்சித்தும், இந்திய அணியினர், அதற்கு இடம் கொடுக்கவில்லை.
Odia boy vice Captain #AmitRohiDas draws the first blood.
— KL Siku Kumar (@KL_Siku_Kumar) January 13, 2023
Good start for #HockeyIndia#HockeyWorldCup2023 pic.twitter.com/pKf6sWXktp
போட்டி முடிவில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது. இந்தநிலையில், 12வது நிமிடத்தில் இந்திய ஹாக்கி வீரர் அமித் ரோஹிதாஸ் அடித்த முதல் கோல், உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய ஒட்டுமொத்தமாக அடித்த 200வது கோலாக பதிவானது.
இதன்மூலம் ஆஸ்திரேலியா, நெதர்லாந்து மற்றும் பாகிஸ்தானுக்கு அடுத்தபடியாக உலகக் கோப்பை தொடரில் 200 கோலுக்கு மேல் அடித்த நான்காவது அணியாக இந்தியா வலம் வருகிறது.
ஹாக்கி உலகக் கோப்பையில் ஒரு அணி அடித்த அதிக கோல்கள்:-
- 313 - ஆஸ்திரேலியா
- 267 - நெதர்லாந்து
- 235 - பாகிஸ்தான்
- 201 - இந்தியா
- 180 - இங்கிலாந்து
- 176 - ஸ்பெயின்
- 154 - அர்ஜென்டினா
இந்தியா கடைசியாக கடந்த 1975 ம் ஆண்டு மலேசியா கோலாலம்பூரில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி பட்டத்தை வென்றது. அதன்பிறகு, இந்திய ஹாக்கி அணி இதுவரை எந்தவொரு பட்டத்தை வென்றதில்லை.
இதுவரை உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி மூன்று முறை பதக்கங்களை வென்றுள்ளது. கடந்த 1971 ம் ஆண்டு வெண்கலப் பதக்கத்தையும், 1975 ம் ஆண்டு பட்டத்தையும், 1973 இல் ஆம்ஸ்டெல்வீனில் வெள்ளிப் பதக்கத்தைப் பதிவு செய்தது.
இந்நிலையில், இந்த வருடம் உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் இந்திய அணி களமிறங்கியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

