Ronaldo Ballon d'or: பாலன் டி ஆர் விருது பரிந்துரை பட்டியலில் இல்லாத ரொனால்டோ பெயர்..! 20 ஆண்டுகளில் முதன்முறை: காரணம் என்ன?
கால்பந்தாட்ட வீரர்களுக்கு வழங்கப்படும் பாலன் டி ஆர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில், கிறிஸ்டியானோ ரொனால்டோவின் பெயர் இல்லாதது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கால்பந்தாட்ட வீரர்களுக்கு வழங்கப்படும் பாலன் டி ஆர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில், கிறிஸ்டியானோ ரொனால்டோவின் பெயர் இல்லாதது 20 ஆண்டுகளில் இதுவே முதன்முறையாகும்.
பாலன் டி ஆர் விருது:
ஒவ்வொரு ஆண்டும் கால்பந்தாட்ட உலகில் சிறந்து விளங்கும் வீரருக்கு பாலன் டி ஒர் விருது வழங்கப்டுகிறது. அதிகபட்சமாக கால்பந்தாட்ட உலகின் ஜாம்பவன்களான லயோனல் மெஸ்ஸி 7 முறையும், கிறிஸ்டியானோ ரொனால்டோ 5 முறையும் இந்த விருதை வென்றுள்ளளார். இந்நிலையில் நடப்பாண்டிற்கான பாலன் டி ஒர் விருதிற்கான பரிந்துரை பட்டியலை சர்வேத கால்பந்தாட்ட சம்மேளனம் வெளியிட்டுள்ளது. 30 பேர் கொண்ட அந்த பட்டியலில் ரொனால்டோவின் பெயர் இல்லாதது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்த விருதுக்கான பரிந்துரை பட்டியலில் ரொனால்டோவின் பெயர் இல்லாமல் போவது கடந்த 20 ஆண்டுகளில் இதுவே முதன்முறையாகும். இந்த பட்டியலில் கடந்த 2003ம் ஆண்டு முதல் ரொனால்டோவின் பெயர் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.
நீக்கம் ஏன்?
2023-24 ம் ஆண்டு சீசனில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில் ஓல்ட் டிராஃபோர்டில் எரிக் டென் ஹாக் அமைப்பிலிருந்து வியத்தகு முறையில் வெளியேறிய பின்னர் சவுதி புரோ லீக்கிற்கான அணியில் இணைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரிலும் போர்ச்சுகல் அணியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில், ரொனால்டோவின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.
அல்நாசர் அணியில் ரொனால்டோ:
38 வயதான ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விலகிய அவர், சவுதி அரேபியாவை சேர்ந்த அல் நாசர் அணியில் இணைந்தார். அந்த கிளப்பிற்காக இதுவரை 33 போட்டிகளில் களம் கண்டு 26 கோல்களை அடித்துள்ளார். இருப்பினும் அவரது பெயர் பாலன் ட் ஆர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இல்லாதது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ரொனால்டோ பெயர் திட்டமிட்டு நிராகரிக்கப்பட்டு உள்ளதாகவும் சிலர் விமர்சித்துள்ளனர்.
HERE ARE ALL THE BALLON D'OR NOMINEES! 🌕✨#ballondor pic.twitter.com/hg1ZByzhDV
— Ballon d'Or #ballondor (@ballondor) September 6, 2023
30 பேர் கொண்ட பட்டியல்:
கடந்த ஆண்டு பிரான்சு வீரர் கரிம் பென்சேமா பாலன் டி ஆர் விருதை வென்று இருந்தார். நடப்பாண்டு உலக்கோப்பையை வென்ற அர்ஜெண்டினா அணியின் கேப்டன் லயோனல் மெஸ்ஸி, கைலன் எம்பாபே மற்றும் நார்வேயை சேர்ந்த எர்லிங் ஹாலண்ட் ஆகியோர் பாலன் டி ஆர் விருதை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதேபோன்று, மகளிர் பிரிவிலும் 30 பேர் கொண்ட பரிந்துரை பட்டியலில் வெளியாகியுள்ளது.
ஆடவர் பட்டியல்:
ஜூலியன் அல்வாரெஸ் நிக்கோலோ பரெல்லா, ஜூட் பெல்லிங்ஹாம் கரீம் பென்செமா, Yassine BOUNOOU கெவின் டி BRUYNE, ரூபன் DIAS, அன்டோயின் கிரீஸ்மேன், இல்கே குண்டோகன் ஜோஸ்கோ க்வார்டியோல், எர்லிங் ஹாலண்ட், ஹாரி கேன், ராண்டல் கோலோ முவானி, க்விச்சா குவரட்ஸ்கெலியா ராபர்ட் லெவாண்டோவ்ஸ்கி, எமிலியானோ மார்டினெஸ், லாட்டாரோ மார்டினெஸ், கைலன் MBAPPÉ, லியோனல் மெஸ்ஸி, கிம் மின்-ஜே, லூகா மோட்ரிக், ஜமால் MUSIALA மார்ட்டின் ØDEGAARD, ஆண்ட்ரே ஓனானா விக்டர் ஓசிம்ஹென், ரோட்ரி, புகாயோ சகா முகமது சலா, பெர்னார்டோ சில்வா, வினிசியஸ் ஜூனியர்.