Endrick Felipe Marriage: 23 வயது காதலியை மணந்த 18 வயதான ரியல் மாட்ரிட் அணி கால்பந்து வீரர்- விஜயை மிஞ்சும் கான்ட்ராக்ட்
Endrick Felipe Marriage: ரியல் மாட்ரிட் அணியின் வளர்ந்து வரும் நட்சத்திர வீரரான என்ட்ரிக், தனது காதலியான கேப்ரிலி மிராண்டாவை திருமணம் செய்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்
Endrick Felipe Marriage: திருமணம் நடந்து முடிந்துள்ள என்ட்ரிக்கிற்கு 18 வயதும், அவரது காதலிக்கு 23வயதும் ஆவதும் குறிப்பிடத்தக்கது.
ரைசிங் ஸ்டார் என்ட்ரிக்:
ரியல் மாட்ரிட் கால்பந்து அணியின் வளர்ந்து வரும் நட்சத்திரமான, 18 வயதான என்ட்ரிக் ஃபெலிப் மோரேரா டி சோசா, மாடலும் சமூக வலைதளங்களில் இன்ப்ளூயன்சரும் ஆன தனது 23 வயது காதலி கேப்ரிலி மிராண்டாவை திருமணம் செய்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். அண்மையில் ஸ்பெயின் நாட்டின் ரியல் மாட்ரிட்டில் அணியில் இணைந்து, தனது அபார திறமையை வெளிப்படுத்தியதன் மூலம், உலகளாவிய கால்பந்தாட்ட ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். 11 சர்வதேச போட்டிகளில் 3 கோல்களை அடித்துள்ளார். இங்கிலாந்தில் உள்ள வெம்ப்லி மைதானத்தில் கோல் அடித்த இளம் வயது வீரர் என்ற பெருமையுடன் அந்த போட்டியில், இங்கிலாந்தை 1-0 என வீழ்த்தவும் தனது அணிக்கு உதவினார். இந்நிலையில், பிரேசிலைச் சேர்ந்த முன்கள வீரரான என்ட்ரிக், அவரது திடீர் திருமணத்தால் கால்பந்தாட்ட உலகில் தலைப்புச் செய்தியாக உருவெடுத்துள்ளார்.
காதலியை கரம் பிடித்த என்ட்ரிக்:
அசாதாரண காதல் ஒப்பந்தம் தொடர்பான விவரங்கள் வெளிவந்த சில மாதங்களுக்குப் பிறகு, என்ட்ரிக் மற்றும் கேப்ரிலி ஒரு கூட்டு இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் தாங்கள் திருமணம் செய்து கொண்டதை அறிவித்துள்ளனர், இதுதொடர்பாக பல்வேறு புகைப்படங்களையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர். இருவரும் சந்தித்துக்கொண்ட ஒருவருட காலத்திற்குள்ளாகவே, திருமணம் செய்துள்ளனர். இது அவர்களின் வழக்கத்திற்கு மாறான உறவில் மற்றொரு அத்தியாயத்தைக் குறிக்கிறது. இந்த புதுமண தம்பதிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகள் தெரிவித்து வரும் நிலையில், என்ட்ரிக்கின் தாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
ஆச்சரியத்தை ஏற்படுத்திய ஒப்பந்தம்:
இருவரும் காதலிக்க தொடங்கியபோது ஒரு தனிப்பட காதல் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டனர். அதில் சில சொற்களைப் பயன்படுத்த தடை , குறிப்பிடத்தக்க நடத்தை மாற்றங்களை கட்டாயமாக திணிக்கக் கூடாது மற்றும் எந்தவொரு சூழலிலும் அடிக்கடி ஐ லவ் யூ என கூறிக்கொள்ள வேண்டும் என்பன போன்ற விதிமுறைகள் இருந்தன. கூடுதலாக மற்ற பெண்களின் இன்ஸ்டாகிராம் போஸ்டில் என்ட்ரிக் கமென்டுகளை பதிவிடக் கூடாது எனவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது.
கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ வி ஆர்பியில் கேமின் மிகப்பெரிய ரசிகரான என்ட்ரிக், அந்த கேமில் விர்ச்சுவல் கேர்ள்ஃப்ரண்டை கூட பெறக்கூடாது. மாத இறுதியில், ஒருவர் கேட்கும் பரிசை மற்றொருவர் வாங்கி தர வேண்டும் எனவும் ஒப்பந்தத்தில் குறிப்பிடட்டு இருந்தது. இந்த அனைத்து விதிகளுக்கு சம்மதம் தெரிவித்து காதலித்து வந்த, என்ட்ரிக் - மிராண்டா ஜோடி தற்போது திருமண வாழ்வில் நுழைந்துள்ளது.
யார் இந்த கேப்ரிலி மிராண்டா?
இன்ஸ்டாக்ராமில் 1.1 மில்லியன் ஃபாலோவர்களை கொண்டுள்ள பிரேசிலை பூர்வீகமாக கொண்ட கேப்ரிலி மிராண்டா, மாடலும், சமூக வலைதள இன்ஃப்ளூயன்சரும் ஆவார். பல்வேறு நிறுவனங்களுடன் விளம்பர ஒப்பந்தங்கள கொண்டுள்ள இவர், அமெரிக்க விளையாட்டு ஆடை நிறுவனமான நியூ பேலன்ஸ் உடன் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளார்.