India vs Kuwait Final: அபாரம்.. பெனால்டி ஷூட் அவுட்டில் த்ரில் வெற்றி.. சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா..!
பெங்களூரில் நடைபெற்ற தெற்காசிய கால்பந்து இறுதிப்போட்டியில் இந்திய அணி பெனால்டி ஷூட் அவுட்டில் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
தெற்காசிய கால்பந்து தொடர் இந்தியாவில் நடைபெற்று வந்தது. இதன் இறுதிப்போட்டி இன்று பெங்களூரில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா – குவைத்தும் கோப்பைக்காக மோதின.
இதில், ஆட்டம் நடைபெற்ற 90 நிமிடத்தில் இந்தியா- குவைத் தலா 1 கோல்களை அடித்து சம நிலையில் இருந்தன. இதனால், ஆட்டத்தில் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டபோதும் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
News Flash: India WIN SAFF Football Championship 🔥🔥🔥
— India_AllSports (@India_AllSports) July 4, 2023
➡️ India beat Kuwait 5-4 in penalty shoot-out (1-1 at end of Regulation time) in Final.
➡️ Goalkeeper Gurpreet Singh was the saviour once again.
➡️ It's 9th SAFF title for India in 14 editions. #SAFFChampionship pic.twitter.com/oCnJWEFwUE
இதையடுத்து, பெனால்டி – ஷூட் அவுட்டிற்கு ஆட்டம் சென்றது. பெனால்டி ஷூட் அவுட்டில் 5-4 என்ற கணக்கில் இந்தியா அபார வெற்றி பெற்றது. தெற்காசிய கோப்பையை இந்திய கால்பந்து அணி கைப்பற்றுவது இது 9வது முறையாகும். கோப்பையை கைப்பற்றிய இந்திய அணிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.