FIFA WORLDCUP 2022: கோப்பையை வென்ற அர்ஜெண்டினா: 1000 பேருக்கு பிரியாணி இலவசம்; எங்கே தெரியுமா?
அர்ஜெண்டினா அணி உலககோப்பையை வென்றதால் ராக்லேண்ட் ஹோட்டலில் 1000 பேருக்கு இலவசமாக பிரியாணி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அர்ஜெண்டினா அணி உலககோப்பையை வென்றதால் ராக்லேண்ட் ஹோட்டலில் 1000 பேருக்கு இலவசமாக பிரியாணி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே அதிகமான கால்பந்து ரசிகர்களைக் கொண்ட மாநிலம் என்றால் அது கேரளாவும் மேற்கு வங்காளமும்தான். உலகக்கோப்பையை அர்ஜெண்டினா அணி பெனால்டி ஷூட் அவுட்டில் 4 - 2 என்ற கணக்கில் வென்றதால் கேரளாவின் திருச்சூரில் உள்ள செரூரில் அமைந்துள்ள ராக்லேண்ட் ஹோட்டலில் இன்று 1000 பேருக்கு இலவசமாக பிரியாணி வழங்கப்படும் என அந்த ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது அர்ஜெண்டினா ரசிகர்களுக்கும் பிரியாணி பிரியர்களுக்கும் குஷியை ஏற்படுத்தியுள்ளது.
View this post on Instagram
அதேபோல் போட்டிக்கு முன்னர், கேரளாவில் உள்ள மெஸ்ஸியின் ரசிகர்கள் அரபிக்கடலில் 100 அடி ஆழத்தினுள் கட் - அவுட் வைத்து தங்களது அன்பினை வெளிப்படுத்தியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram
இதைவிட மிகவும் ஆர்ச்சர்யம் மூட்டும் சம்பவம் பிரான்ஸில் நடைபெற்றதாக கூறப்படுகிறது, அதாவது, இறுதிப்போட்டியில் அர்ஜெண்டினா அணியை பிரான்ஸ் அணி வென்றால் இன்று ஒருநாள் மட்டும் பணம் பெற்றுக்கொள்ளாமல் பாலியல் தொழில் செய்வதாக பாலியல் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது. இந்த அறிவிப்பு கால்பந்து ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.