FIFA Worldcup: முன்னாள் சாம்பியன்களை வீழ்த்திய ஆசிய அணிகள்..! ஆச்சரியத்தில் உறைந்த கால்பந்து ரசிகர்கள்
22வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கடந்த ஞாயிற்றுக் கிழமை கத்தார் நாட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 32 அணிகள் 64 போட்டிகள் என கத்தார் நாடே கால்பந்து திருவிழாவில் மூழ்கிக்கொண்டுள்ளது.
22வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கடந்த ஞாயிற்றுக் கிழமை கத்தார் நாட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 32 அணிகள் 64 போட்டிகள் என கத்தார் நாடே கால்பந்து திருவிழாவில் மூழ்கிக்கொண்டுள்ளது.
மொத்தம் 29 நாட்கள் நடக்கும் போட்டியின் ஐந்தாவது நாளான இன்று மொத்தம் 4 போட்டிகள் நடைபெறுகிறது. முதலாவது ஆட்டத்தில் கத்தார் அணியை 0-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
இரண்டாவது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி ஈரானை 6-2 என்ற கோல் கணக்கிலும், நெதர்லாந்து அணி செனகலை 0-2 கோல் கணக்கிலும் வென்றது. அமெரிக்கா-வேல்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் டிரா ஆனது.
குரூப் சி பிரிவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டம், அர்ஜென்டினா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் ஆசிய அணியான சவுதி அரேபியா வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது. டென்மார்க் துனியா ஆட்டம் கோல்கள் எதுவுமின்றி டிரா ஆனது. மற்றொரு ஆட்டத்தில் மோதிய மெக்ஸிகோ-போலந்து இடையிலான ஆட்டமும் டிரா ஆனது.
குரூப் டி பிரிவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பிரான்ஸ் அணி, ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்தது. பிரான்ஸ் அணி 4-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. மற்றொரு ஆட்டத்தில் ஜெர்மனியும் ஜப்பானும் மோதின. இதில், ஜப்பான் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.
ஐரோப்பியா அணியான ஸ்பெயினிடம் கோஸ்டா ரிகா 7-0 என்ற கோல் கணக்கில் சரணடைந்தது. இந்த ஆட்டத்தில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இதுவரை உலகக் கோப்பையில் பெரிதும் சோடை போகாத ஆசிய அணிகள் இந்த முறை முன்னாள் சாம்பியனை வீழ்த்தி இருக்கிறது.
அதில் முக்கியமான குறிப்பிடப்பட வேண்டிய ஆட்டம், ஜப்பான்-ஜெர்மனி இடையிலான ஆட்டம் ஆகும்.
நான்கு முறை உலக சாம்பியனான ஜெர்மனி அணி, நடப்பு தொடரில் தனது முதல் போட்டியில் ஜப்பானை எதிர்த்து நேற்று களம் கண்டது.
பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் ஜெர்மனி அணியை 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பான் வீழ்த்தியது. உலகக் கோப்பை கால்பந்தில் முதல் பாதியில் முன்னணியில் இருந்த பிறகு ஜெர்மனி தோல்வி காண்பது 1978-ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவே முதல் முறையாகும். அதேநேரம், ஆசிய நாடான ஜப்பான், உலகக் கோப்பை வரலாற்றில் முதல் பாதியில் பின்தங்கி இருந்து வெற்றி பெற்றதும் இதுவே முதல் தடவையாகும்.
Our first mission was successfully accomplished ✅
— Saudi National Team (@SaudiNT_EN) November 22, 2022
Our Green Falcons lived up to the big occasion and recorded a historic win 🦅 pic.twitter.com/pQDiIA8VOi
தோல்வி அடைந்த மற்றொரு முன்னாள் சாம்பியன்
இதேபோல், 2 முறை சாம்பியனான அர்ஜென்டினாவை 2-1 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியா வீழ்த்தியது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது கால்பந்து உலகில் ஜாம்பவான்களாகக் கருதப்படும் ஜெர்மனியையும், அர்ஜென்டினாவையும் ஆசிய அணிகளாக சவுதி அரேபியாவும், ஜப்பானும் வீழ்த்தியிருப்பது உண்மையில் கால்பந்து ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த விளையாட்டு உலககத்திற்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
இன்னும் என்னென்ன ஆச்சரியங்களை தன்வசம் இந்த உலகக் கோப்பை கால்பந்து வைத்துள்ளது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.