Beer Ban FIFA WC Qatar: உலககோப்பை கால்பந்து திருவிழா : கத்தார் மைதானங்களில் "பீர்"க்கு தடை..! ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி...
உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் எந்த அளவிற்கு இருக்கிறார்களோ, அதை விட பல மடங்கு ரசிகர்கள் கால்பந்து விளையாட்டிற்கு உள்ளனர்.
உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் எந்த அளவிற்கு இருக்கிறார்களோ, அதை விட பல மடங்கு ரசிகர்கள் கால்பந்து விளையாட்டிற்கு உண்டு.
கால்பந்து தொடரில் பல நாடுகளில் லீக் தொடர்கள் நடத்தப்பட்டாலும், ஃபிபா உலகக் கோப்பை என்றதும் ஒட்டுமொத்த உலக கால்பந்து ரசிகர்களும் உற்று நோக்கும் ஒரே தொடர் இந்த தொடர் மட்டும்தான்.
இந்த முறை கத்தாரில் 20ஆம் தேதி முதல் டிசம்பர் 18 ஆம் தேதி வரை கால்பந்து போட்டிகள் நடைபெறவுள்ளது.
பீர் கிடையாது :
நம்பகத்தகுந்த தகவல்கள்படி, உலகக் கோப்பைப் போட்டி ஏற்பாடுகளில் நிகழ்த்தப்படும் மாற்றங்கள் குறித்து அறிந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "உலகக் கோப்பை ஆட்டங்கள் நடைபெறும் 8 மைதானங்களில் ரசிகர்களுக்கு மது வகைகள் விற்கக் கூடாது என்று கத்தார் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். குளிர் பானங்கள் மட்டுமே விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
கத்தாருக்கும் ஈக்குவடாருக்கும் இடையே வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள முதல் ஆட்டத்தில் பீர் விற்பனை செய்வதற்காக டென்டுகள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளன. அதேநேரம், விஐபி அமரும் இடங்களில் மட்டும் பீர்கள் கிடைக்கும் என்றும் சர்வதேச கால்பந்து அமைப்பின் சார்பில் அவை விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரசிகர்கள் அதிர்ச்சி :
ஃபிபா சர்வதேச கூட்டமைப்பு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால்பந்து தொடரை நடத்தி வருகிறது. தற்போது நடைபெற இருக்கும் இந்த தொடரானது வருகின்ற 20ம் தேதி கத்தார் நாட்டில் தொடங்குகிறது. உலகக் கோப்பை கால்பந்து திருவிழா இன்னும் இரண்டே நாட்களில் தொடங்கவுள்ளதால் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் மத்தியில் ஆர்வமும் ஆவலும் அதிகரித்து வருகிறது.
32 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றுகளில் விளையாட இருக்கின்றனர். முதல் போட்டியானது வருகின்ற 20ம் தேதி கத்தார்-ஈகுவடார் நாடுகளுக்கிடையே நடைபெற இருக்கிறது.
FIFA World Cup 2022; உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளைக் காண வருபவர்களுக்கு இந்தத் தடையா?
உலகக் கோப்பையை நடத்தும் கத்தார்
1963-ம் ஆண்டு சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான ஃபிஃபாவின் அங்கீகாரம் பெற்ற கத்தார் நாடானது, ஒருமுறை கூட உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றதாக வரலாறே இல்லை. ஆனால் இந்த முறை உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை தனி நாடாக நடத்துவதால் உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக உலக கோப்பை கால்பந்து போட்டிகளில் நுழையும் வாய்ப்பை கத்தார் நாடானது பெற்றுள்ளது. மேலும் கத்தார் நாட்டின் மொத்தப் பரப்பளவே 11,581 சதுர கிலோமீட்டர் என்பது குறிப்பிடத்தக்கது. உலகக் கோப்பையை நடத்தும் மிகச் சிறிய நாடு கத்தார் எனும் தனிச் சிறப்பினையும் பெறுகிறது.