FIFA World Cup 2022: கடைசி உலகக் கோப்பை... கேப்டனாக களமிறங்கும் மெஸ்ஸி.. 26 பேர் கொண்ட அர்ஜெண்டினா அணி அறிவிப்பு!
2022 FIFA உலகக் கோப்பைக்கான 26 பேர் கொண்ட அர்ஜெண்டினா அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
2022 FIFA உலகக் கோப்பைக்கான 26 பேர் கொண்ட அர்ஜெண்டினா அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கிரிக்கெட் தொடருக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் இருக்கிறார்களோ, அதே அளவிற்கு கால்பந்து தொடர்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறது.
உலகக் கோப்பை கால்பந்து போட்டித் தொடரானது வருகின்ற 20 ம் தேதி கத்தார் நாட்டில் தொடங்க இருக்கிறது. 32 நாடுகள் பங்கேற்க உள்ள இந்த கால்பந்து தொடர் 28 நாட்கள் ஆசியாவில் உள்ள ஒரு நாட்டில் நடைபெற இருப்பது இதுவே முதல்முறை. இந்த உலகக் கோப்பை தொடரில் 32 அணிகள் பங்கேற்கும் நிலையில், இவை மொத்தம் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, கர்த்தாரில் உள்ள 8 மைதானங்களில் போட்டிகள் நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில், 2022 FIFA உலகக் கோப்பைக்கான 26 பேர் கொண்ட அர்ஜென்டினா அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஐந்தாவது உலகக் கோப்பையில் பங்கேற்கும் லியோனல் மெஸ்ஸி 26 பேர் கொண்ட அணிக்கு கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கடந்த அக்டோபரில் இருந்து தொடை காயம் காரணமாக விளையாடாமல் இருந்த முன்கள வீரர் பாலோ டிபாலா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 26 வீரர்களில் 21 பேர் அர்ஜென்டினாவின் 2021 கோபா அமெரிக்கா வெற்றியின் ஒரு பகுதியாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Leo Messi is heading to his fifth World Cup 🇦🇷 pic.twitter.com/PM7zhLga49
— B/R Football (@brfootball) November 11, 2022
லியோனல் மெஸ்ஸி :
லியோனல் மெஸ்ஸி என்ற பெயர் உலக கால்பந்து ரசிகர்களால் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. இவர் எல்லா காலத்திலும் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவர். மெஸ்ஸிக்கு வயது 35 என்றாலும், இன்னும் 19 வயது இளைஞர்களை போல சிறப்பாக விளையாடி வருகிறார். இவரது வேகம் மற்றும் சுறுசுறுப்பான ஆட்டம் பார்ப்போரை எளிதில் கவரும். இந்த நிலையில், ஃபிஃபா உலகக் கோப்பை 2022 தொடர்தான் தனது கடைசி உலகக் கோப்பை தொடர் என்று லியோனல் மெஸ்ஸி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கடந்த 2014 ஃபிபா உலகக் கோப்பை தொடரில் மெஸ்ஸியின் தலைமையிலான அர்ஜென்டினா அணி இறுதிப் போட்டிவரை சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
World Cup No. 5 loading for Ronaldo & Messi 👀
— ESPN FC (@ESPNFC) November 11, 2022
2006 🇩🇪
2010 🇿🇦
2014 🇧🇷
2018 🇷🇺
2022 ⏳ pic.twitter.com/MvgsYlJHay
ஃபிபா உலகக் கோப்பை தொடருக்கான அர்ஜென்டினா அணி :
கோல்கீப்பர்கள்: எமிலியானோ மார்டினெஸ், பிராங்கோ அர்மானி மற்றும் ஜெரோனிமோ ருல்லி
டிஃபென்டர்கள்: கோன்சலோ மான்டியேல், நாஹுவேல் மோலினா, ஜெர்மன் பெசெல்லா, கிறிஸ்டியன் ரொமேரோ, நிக்கோலஸ் ஓட்டமெண்டி, லிசாண்ட்ரோ மார்டினெஸ், ஜுவான் ஃபோய்த், மார்கோஸ் அகுனா
மிட்ஃபீல்டர்கள்: லியாண்ட்ரோ பரேடெஸ், கைடோ ரோட்ரிக்ஸ், என்ஸோ பெர்னாண்டஸ், ரோட்ரிகோ டி பால், எக்ஸிகுயல் பலாசியோஸ், அலெஜான்ட்ரோ கோம்ஸ், அலெக்சிஸ் மேக் அலிஸ்டர்