FIFA World Cup 2022: உலகக் கோப்பை கால்பந்தில் இவ்வளவு தொழில்நுட்பமா? குஷியில் ரசிகர்கள்!
FIFA World Cup 2022: இந்த ஆண்டு கத்தாரில் நடக்கவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்காக அதிநவீன தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள கால்பந்து குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
FIFA World Cup 2022: இந்த ஆண்டு கத்தாரில் நடக்கவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்காக அதிநவீன தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள கால்பந்து குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
உலகக் கோப்பை போட்டிகள் என்றாலே பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. அதுவும் பல நாள் கனவை நிறைவேற்ற களத்தில் விளையாடும் இரு அணியின் 22 வீரர்களும் வெற்றியை உயிராய் கருதி விளையாடுவர். இப்படியாக பரபரப்பாக உள்ள இந்த போட்டிகள் வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்க இருக்கிறது.
மொத்தம் 32 அணிகள் பங்குபெறும் இந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியானது, 29 நாட்கள் நடைபெறவுள்ளன. இதில் மொத்தம் 64 போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முறை நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டியானது கத்தாரில் நடைபெறவுள்ளது. இதனால் அனைத்து அணிகளும் கத்தாருக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றன. போட்டிகள் இன்னும் நான்கு நாட்களில் தொடங்கவுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
அதிநவீன தொழில்நுட்பத்துடன் கால்பாந்து
கடந்த 2018 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் தான் முதன் முதலில் தொழில்நுட்ப வசதியுடன் கால்பந்து அறிமுகப்படுத்தப்பட்டது. அதேபோல் இந்த உலகக்கோப்பையிலும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் பிரபல விளையாட்டு பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனமான அடிடாஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும், இந்த கால் பந்தில் உள்ள தொழில்நுட்பத்தின் சிறப்பம்சம் என்பது வியக்கவைக்கும் அளவிற்கு உள்ளது.
கத்தார் நாட்டில் இந்த முறை உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெறுவதால் கால்பந்தானது கத்தார் நாட்டின் தேசியக் கொடியின் நிறங்கள் கால்பந்தில் இடம் பெற்றுள்ளன. மேலும், இந்த கால்பந்துக்கு ”அல் ரிஹிலா” என பெயரிடப்பட்டுள்ளது. அரபு மொழியில் உள்ள இந்த சொல்லுக்கு ”பயணம்” என்று பொருள். இதற்கு முன்னர் நடந்த உலகக்கோப்பைக்கு தயாரிக்கப்பட்ட பந்துகளை விடவும் மிகவும் வேகமாக பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 92 ஆண்டு கால கால்பந்து வரலாற்றில் ’அல் ரிஹிலா’ போல் வேறு எந்த பந்தும் தயாரிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கால்பந்து செமி ஆட்டோமேட்டேட் ஆஃப்ஸைடு டெக்னாலஜி கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் வைக்கப்பட்டுள்ள VAR எனப்படும் வீடியோ அசிஸ்டண்ட் ரெஃபரிங் தொழில்நுட்பமானது 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியிலும் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த கால்பந்தில் பொறுத்தப்பட்டுள்ள IMU தொழில்நுட்பமானது பந்து எங்கு, எப்போது உதைக்கப்பட்டது என்பதை மிகவும் துல்லியமாக கண்டறியும் தன்மை கொண்டதாகும். அதேபோல், இந்த தொழில்நுட்பத்தால் எங்கு இருந்து எந்த திசையை நோக்கி பந்து உதைக்கப்படுகிறது என்பதை பந்து உதைக்கப்படும்போதே கண்டுபிடிக்க முடியும். இந்த IMU தொழில்நுட்பத்தின் திறனானது 500 Hz திறன் கொண்டதாகும். மேலும், இதனால் பந்து உதைக்கப்படும் போதே பந்து எந்த திசையை நோக்கிச் செல்லப்போகிறது என போட்டியை லைவ் டெலிகாஸ்ட் செய்யும் வீடியோ குழுவிற்கு எச்சரிக்கை அளித்து நேரடி ஒளிபரப்புக்கும் உதவும் வகையில் பந்து தயாரிக்கப்பட்டுள்ளது. மைதானத்தில் உள்ள 12 கேமராக்களுடன் இணைக்கப்பட்டுள்ள கால்பந்து மைதானத்தில் எங்கு இருந்தாலும் கண்டறிய முடியும். இதனால் போட்டியின் நடுவர் போட்டி குறித்து முடிவுகள் எடுக்கவும் உதவியாக இருக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.