மேலும் அறிய

FIFA World Cup 2022: நெய்மர் இல்லாமல் களம்கண்ட பிரேசில்.. திக் திக் நிமிடங்கள்.. கடைசியில் வெற்றி யாருக்கு?

உலகக்கோப்பை கால்பந்தாட்ட போட்டியின் லீக் போட்டியில், சுவிட்சர்லாந்து அணியை பிரேசில் போராடி வீழ்த்தியது.

கால்பந்தாட்ட உலகக்கோப்பை தொடர் கத்தாரில் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. முதல் சுற்றில் இன்று நடைபெற்ற லீக் போட்டிகளில் , குரூப் ஜி பிரிவில் செர்பியா மற்றும் கேமரூன் அணிகள்  இடையேயான போட்டி சமனில் முடிந்தது, குரூப் H பிரிவில் நடந்த போட்டியில் தென் கொரியாவை,  கானா அணி 3 - 2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. அதைதொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டியில் ஐந்து முறை உலகக்கோப்பையை வென்ற பிரேசில் அணி, சுவிட்சார்லாந்தை எதிர்கொண்டது.

காயம் காரணமாக நெய்மர் விலகல்: 

பிரேசில் அணி தனது முதல் போட்டியில், 2-0 என்ற கோல் கணக்கில் செர்பியாவை பந்தாடியது. இந்த போட்டியின் போது  பிரேசில் அணியின் நட்சத்திர வீரரான நெய்மர் கணுக்கால் பகுதியில் காயம் அடைந்தார். ஆட்டத்தின் 80-வது நிமிடத்தில் பந்தை எதிர்கொண்டபோது காயம் அடைந்த நெய்மர், மைதானத்தில் இருந்து வெளியேறினார். இதனால் இன்றைய போட்டியில் அவர் விளையாட வில்லை.

முதல் பாதியில் கோல் இல்லை:

 ஆட்டம் தொடங்கியதும் இரு அணி வீரர்களும் சரிசமமாக தங்களது திறமையை வெளிப்படுத்தினர். ஆக்ரோஷமான ஆட்டத்தை காட்டிலும் தடுப்பு ஆட்டத்திலேயே இரு அணிகளும் கவனம் செலுத்தின. பிரேசில் அணி வீரர்கள் அடுத்தடுத்து பந்தை எதிரணியில் கோல் கம்பிற்கு அருகே கொண்டு சென்றாலும், அவர்களால் அதை கோலாக மாற்ற இயலவில்லை. அந்த தருணங்களில் அங்கு நெய்மர் இல்லாத வெற்றிடத்தை பார்வையாளர்களால் நன்றாகவே உணர முடிந்தது. இதே போன்று சுவிட்சர்லாந்து அணியின் கோல் அடிக்கும் முயற்சியும், பிரேசில் அணி வீரர்களால் முறியடிக்கப்பட்டது. இறுதியில் முதல் பாதியின் முடிவில் இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்கவில்லை.

இரண்டாது பாதி ஆட்டம்:

போட்டியின் இரண்டாவது பாதி தொடங்கியதும் கோல் அடிக்கும் முயற்சியில் இரு அணி வீரர்களும் தீவிரமாக இறங்கினர்.  பந்து இரு அணிகளிடமும் அடுத்தடுத்து கால் மாறியது, இரு அணி வீரர்களும்  கோல் அடிக்க முனைப்பு காட்ட, முதல் கோல் அடிக்கப்போவது யார் என்ற பதற்றம் ரசிகர்களிடையே தொற்றிக்கொண்டது. அதேநேரம் பிரேசில் ரசிகர்கள் இடையே பெரும் அமைதியும் நிலவியது. பிரேசில் அணி வீரர்கள் இரண்டு முறை பந்தை கோல் கம்பை நோக்கி உதைத்தாலும், எதிரணியின் கோல் கீப்பர் சோமர் அதனை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தினார்.   

பிரேசில் வெற்றி:

இரு அணிகளும் கோல் அடிக்கப்போவதில்லை, போட்டி டிராவை தான் எட்டும் என இருதரப்பு ரசிகர்களும் கருதிய நிலையில், போட்டியின் 83வது நிமிடத்தில் பிரேசிலின் கேஸ்மிரோ தனது அணிக்கான முதல் கோலை அடித்து அசத்தினார். அடுத்த கணம் சோர்ந்து கிடந்த மைதானம், மைதானத்தில் இருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களின் முழக்கத்தால் மீண்டும் புத்துயிர் பெற்றது. கூடுதலாக 6 நிமிடங்கள் வழங்கப்படாலும் சுவிட்சர்லாந்து அணியை கோல் அடிக்க விடாமல் தடுத்து பிரேசில் அணி தனது வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம், தொடர்ந்து இரண்டு வெற்றிகளின் மூலம், எச் பிரிவு புள்ளிப்பட்டியலில் பிரேசில் அணி தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. மேலும், அடுத்த சுற்றுக்கும் முனேறியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
"இட்லி, சாம்பார் வித்ததால் வரல" குறையும் வெளிநாட்டு சுற்றுலாவாசிகள்.. பாஜக எம்எல்ஏ சொன்ன காரணம்!
திருச்சி மக்களே உங்களின் எதிர்பார்ப்பு அடுத்த மாதம் நிறைவேற போகுது.. ரெடியா இருங்க..!
திருச்சி மக்களே உங்களின் எதிர்பார்ப்பு அடுத்த மாதம் நிறைவேற போகுது.. ரெடியா இருங்க..!
AI Girl Cheating: டேய்..நீ லவ் பண்ண வேற ஆளே கிடைக்கலையாடா.? சீன இளைஞரிடம் சம்பவம் செய்த ஏஐ காதலி...
டேய்..நீ லவ் பண்ண வேற ஆளே கிடைக்கலையாடா.? சீன இளைஞரிடம் சம்பவம் செய்த ஏஐ காதலி...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sexual Harassment | வீட்டில் தனியாக இருந்த பெண் மர்ம நபர் பாலியல் தொல்லை வாணியம்பாடியில் பகீர் சம்பவம்Jyotika on Hindi | ”என் மகனுக்கு இந்தியே பிடிக்காது” அடித்துக்கொள்ளும் DMK, BJP ஜோதிகா கொடுத்த பேட்டிகண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
"இட்லி, சாம்பார் வித்ததால் வரல" குறையும் வெளிநாட்டு சுற்றுலாவாசிகள்.. பாஜக எம்எல்ஏ சொன்ன காரணம்!
திருச்சி மக்களே உங்களின் எதிர்பார்ப்பு அடுத்த மாதம் நிறைவேற போகுது.. ரெடியா இருங்க..!
திருச்சி மக்களே உங்களின் எதிர்பார்ப்பு அடுத்த மாதம் நிறைவேற போகுது.. ரெடியா இருங்க..!
AI Girl Cheating: டேய்..நீ லவ் பண்ண வேற ஆளே கிடைக்கலையாடா.? சீன இளைஞரிடம் சம்பவம் செய்த ஏஐ காதலி...
டேய்..நீ லவ் பண்ண வேற ஆளே கிடைக்கலையாடா.? சீன இளைஞரிடம் சம்பவம் செய்த ஏஐ காதலி...
நாளை வானில் நிகழப்போகும் அதிசயம்.! ஒரே நேரத்தில் தெரியும் 7 கோள்கள்.! எப்படி பார்ப்பது?
நாளை வானில் நிகழப்போகும் அதிசயம்.! ஒரே நேரத்தில் தெரியும் 7 கோள்கள்.! எப்படி பார்ப்பது?
தென் மாநிலங்களுக்கு ஆபத்தா? ஸ்டாலினை தொடர்ந்து களத்தில் குதித்த சித்தராமையா!
தென் மாநிலங்களுக்கு ஆபத்தா? ஸ்டாலினை தொடர்ந்து களத்தில் குதித்த சித்தராமையா!
PAK vs BAN: பாகிஸ்தானை முடிச்சுவிட்ட சாம்பியன்ஸ் டிராபி - சொந்த நாட்டில் சொதப்பல்!
PAK vs BAN: பாகிஸ்தானை முடிச்சுவிட்ட சாம்பியன்ஸ் டிராபி - சொந்த நாட்டில் சொதப்பல்!
சீமான் வீட்டு காவலாளி - போலீஸ் இடையே அடிதடி! அண்ணன் வீட்டில் சினிமா பாணியில் சண்டை!
சீமான் வீட்டு காவலாளி - போலீஸ் இடையே அடிதடி! அண்ணன் வீட்டில் சினிமா பாணியில் சண்டை!
Embed widget