மேலும் அறிய

FIFA WC 2022 Qatar: உலக கோப்பையில் ஆதிக்கம் செலுத்தும் ஆசிய அணிகள்... மிரட்டி எடுத்த ஜப்பான்...ஜெர்மனி அதிர்ச்சி தோல்வி

நான்கு முறை உலக சாம்பியனான ஜெர்மனி அணி, நடப்பு தொடரில் தனது முதல் போட்டியில் ஜப்பானை எதிர்த்து களம் கண்டது.

22ஆவது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கடந்த ஞாயிற்றுக் கிழமை கத்தார் நாட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 32 அணிகள் 64 போட்டிகள் என கத்தார் நாடே கால்பந்து திருவிழாவில் மூழ்கியுள்ளது.

மொத்தம் 29 நாட்கள் நடக்கும் போட்டியின் நான்காவது நாளான இன்று மொத்தம் நான்கு போட்டிகள் நடைபெறுகிறது. டி, எஃப் மற்று இ ஆகிய பிரிவில் இடம் பெற்றுள்ள அணிகளுக்கு இன்று போட்டிகள் நடைபெறுகின்றன.

பரபரப்பாக நடைபெற்ற முதல் ஆட்டத்தில், இரண்டு அணிகளும் கோல் ஏதும் அடிக்காததால் போட்டி சமனில் முடிந்தது.

இந்நிலையில்,  நான்கு முறை உலக சாம்பியனான ஜெர்மனி அணி, நடப்பு தொடரில் தனது முதல் போட்டியில் ஜப்பானை எதிர்த்து களம் கண்டது. கடைசியாக விளையாடிய 9 போட்டிகளில் இரண்டில் மட்டுமே ஜெர்மனி அணி வெற்றி பெற்றது.

ஜப்பான் அணி தனது கடைசி 3 போட்டிகளில், ஒரு தோல்வி மற்றும் ஒரு டிராவை பதிவு செய்துள்ளது. சர்வதேச தரவரிசைப்பட்டியலில் ஜெர்மனி 11வது இடத்திலும், ஜப்பான் 24வது இடத்திலும் உள்ளன. ஜப்பான் உடனான கடைசி 4 போட்டிகளிலும் தோல்வியே சந்திக்காத ஜெர்மனி அணி, 2 போட்டிகளில் வெற்றியை பதிவு செய்துள்ளது. 

கலீஃபா மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 06.30 மணிக்கு தொடங்கப்பட்ட இந்த போட்டியில், ஆட்டம் தொடங்கியதில் இருந்தே கோல் அடிக்கும் முனைப்பில் ஜெர்மனி ஆடியது.

அதன் பலனாக, 33ஆவது நிமிடத்தில் அந்த அணியின் வீரர் இல்கே குண்டோகன் கோல் அடித்து அசத்தினார்.  அதன் பிறகும், ஜெர்மனி அணி வீரர்கள் பல முறை கோல் அடிக்க முயற்சி செய்தனர். ஆனால், அதனை ஜப்பான் அணி வீரர்கள் தடுத்தனர். 

போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியபோது, 75ஆவது நிமிடத்தில் ஜப்பான் அணி வீரர் ரிட்சு டோன் அடித்த கோல் ஜெர்மனி அணிக்கு பேரிடியாக அமைந்தது. இதையடுத்து, போட்டி ஜப்பானுக்கு சாதமாக மாற தொடங்கியது.

இறுதி கட்டத்தில், ஜப்பான் அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த 83ஆவது நிமிடத்தில் டகுமா ஆசானோ ஒரு கோலை அடித்து போட்டியின் போக்கையே மாற்றினார். இறுதியில், 1 - 2 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணி வெற்றி பெற்றது. 

ஸ்பெயின் - கோஸ்டா ரிகோ:

அல் துமாமா மைதானத்தில் நடைபெற உள்ள போட்டியில், ஸ்பெயின் மற்றும் கோஸ்டா ரிகோ அணி பலப்பரீட்சை நடத்த உள்ளன. சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வந்த ஸ்பெயின் அணி, கடைசி 10 போட்டிகளில் சந்தித்த முதல் தோல்வியுடன் இன்று மைதானத்தில் களம் இறங்க உள்ளது. 

கடந்த உலகக்கோப்பை தொடரில் லீக் சுற்றிலேயே வெளியேறிய சூழலை, நடப்பாண்டில் மாற்றும் நோக்கில் கோஸ்டா ரிகோ அணி போட்டியில் விளையாட உள்ளது. 

இரு அணிகளும் இதுவரை இருமுறை நேருக்கு நேர் மோதிக்கொண்ட போட்டியில், ஸ்பெயின் அணி தோல்வியை சந்திக்காமல் ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளது. சர்வதேச புள்ளிப்பட்டியலில் ஸ்பெயின் அணி 7வது இடத்திலும், கோஸ்டா ரிகோ 31வது இடத்திலும் உள்ளன. இந்திய நேரப்படி, இரவு 9.30 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: கடலுக்குள் மாட்டிக்கொண்ட 6 மீனவர்கள்; ஹெலிகாப்டர் மூலம் மீட்பு!
Fengal Cyclone LIVE: கடலுக்குள் மாட்டிக்கொண்ட 6 மீனவர்கள்; ஹெலிகாப்டர் மூலம் மீட்பு!
TNUHDB : “90% காலி, 100% காலி” தள்ளாடும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்..!
TNUHDB : “90% காலி, 100% காலி” தள்ளாடும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்..!
"அச்சத்தில் மக்கள்" புதிய பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு குறைபாடுகள்.. ரயில்வே அமைச்சருக்கு பறந்த கடிகம்!
Dhanush Aishwarya : தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து வாங்கியாச்சு...குழந்தைகள் நிலைமை என்ன?
Dhanush Aishwarya : தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து வாங்கியாச்சு...குழந்தைகள் நிலைமை என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Father Crying : ’’FOOTBOARD அடிக்காதீங்க பா'’காலில் விழுந்து கதறிய தந்தை தேம்பி அழுத மாணவர்கள்BJP Councillor : ’’உதயநிதி பிறந்தநாளுக்கா?’’ SWEET கொடுத்த பாஜக கவுன்சிலர்!திமுக கவுன்சிலர் THUGLIFEKarur Drunken Girl | ”மூடிட்டு போங்க டி...” போலீஸை மிரட்டிய பெண் மதுபோதையில் ATROCITY! | MK Stalinவிஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: கடலுக்குள் மாட்டிக்கொண்ட 6 மீனவர்கள்; ஹெலிகாப்டர் மூலம் மீட்பு!
Fengal Cyclone LIVE: கடலுக்குள் மாட்டிக்கொண்ட 6 மீனவர்கள்; ஹெலிகாப்டர் மூலம் மீட்பு!
TNUHDB : “90% காலி, 100% காலி” தள்ளாடும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்..!
TNUHDB : “90% காலி, 100% காலி” தள்ளாடும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்..!
"அச்சத்தில் மக்கள்" புதிய பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு குறைபாடுகள்.. ரயில்வே அமைச்சருக்கு பறந்த கடிகம்!
Dhanush Aishwarya : தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து வாங்கியாச்சு...குழந்தைகள் நிலைமை என்ன?
Dhanush Aishwarya : தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து வாங்கியாச்சு...குழந்தைகள் நிலைமை என்ன?
காதலர் கொடுத்த மன உளைச்சல்: அசைவ உணவுக்காக உயிரை விட்ட பெண் விமானி? என்ன நடந்தது?
காதலர் கொடுத்த மன உளைச்சல்: அசைவ உணவுக்காக உயிரை விட்ட பெண் விமானி? என்ன நடந்தது?
Fengal Cyclone Update: ’’வரும்.. ஆனா வராது..’’ ஃபெங்கல் புயலாக கரையை கடக்காது; என்ன காரணம் தெரியுமா?
Fengal Cyclone Update: ’’வரும்.. ஆனா வராது..’’ ஃபெங்கல் புயலாக கரையை கடக்காது; என்ன காரணம் தெரியுமா?
Red Alert: நாளை 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்; எங்கெல்லாம் அதி கனமழைக்கு வாய்ப்பு? வானிலை சொல்வது என்ன?
Red Alert: நாளை 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்; எங்கெல்லாம் அதி கனமழைக்கு வாய்ப்பு? வானிலை சொல்வது என்ன?
Chennai Red Alert: நாளை சென்னைக்கு மிக கனமழை வாய்ப்பு; நவ.30 ரெட் அலர்ட்: வானிலை அப்டேட் இதுதான்!
Chennai Red Alert: நாளை சென்னைக்கு மிக கனமழை வாய்ப்பு; நவ.30 ரெட் அலர்ட்: வானிலை அப்டேட் இதுதான்!
Embed widget