Cristiano Ronaldo:"வந்த ராஜாவாதான் வருவேன்" ரொனால்டோ தொடங்கிய யூடியூப் சேனல்! அடுத்த நடந்த சம்பவம்
யூடியூப் சேனல் தொடங்கிய சில மணி நேரங்களில் 10 மில்லியன் சப்ஸ்க்ரைபர்களை பெற்ற ரோனால்டோவிற்கு கோல்டன் பட்டன் வழங்கப்பட்டுள்ளது.
10 மில்லியன் ரசிகர்கள்:
கால்பந்து விளையாட்டின் ஜாம்பவான் வீரராக திகழ்பவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. 39 வயதாகும் கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது சவுதி அரேபியா லீக் தொடரில் அல் நசர் அணிக்காக விளையாடி வருகிறார். கால்பந்து வரலாற்றில் 5 முறை பாலன் டிஆர் விருதை வென்று சாதனை படைத்துள்ளார்.
சோசியல் மீடியாவில் அதிகளவில் ரசிகர்கள் கொண்டுள்ள விளையாட்டு வீரர்கள் பட்டியலில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தான் முதலிடத்தில் இருக்கிறார். எக்ஸ் தளத்தில் 112.5 மில்லியன் ரசிகர்களும், பேஸ்புக்கில் 170 மில்லியன் ரசிகர்களும், இன்ஸ்டாகிராமில் 636 மில்லியன் ஃபாலோயர்களும் உள்ளனர். ரொனால்டோ பதிவிடும் ஒரு இன்ஸ்டா பதிவுக்கு ரூ.26.7 கோடி வருமானம் ஈட்டி வருகிறார்.
கோல்டன் பட்டன்:
Cristiano Ronaldo has surpassed 5 Million Subscribers within 5 hours. 😳‼️ pic.twitter.com/9AGW1LT2mA
— DramaAlert (@DramaAlert) August 21, 2024
இந்நிலையில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது யூடியூப் சேனலை தொடங்கியுள்ளார். இதனை இன்ஸ்டாகிராமில் ரொனால்டோ அறிவித்த சில மணி நேரங்களிலேயே 10 மில்லியன் ரசிகர்கள் யூடியூப் சேனலை சப்ஸ்க்ரைபர்கள் செய்துள்ளனர். தற்போது ரொனால்டோவிற்கு யூடியூப் தரப்பில் இருந்து கோல்டன் பட்டன் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான பதிவையும், The Golden Button.. For My Golden Kids" என்ற தலைப்புடன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். முன்னதாக யூடியூப் பக்கத்தில் மிஸ்டர் பீஸ்ட் என்பவர் தான் உலகிலேயே அதிக சப்ஸ்க்ரைபர்கள் கொண்ட நபராக இருக்கிறார். இவரின் சாதனையை முறியடிக்க ரொனால்டோவால் தான் முடியும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.