Asian Games 2023: கால்பந்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. க்ரீன் சிக்னல் காட்டிய இந்தியா! சீனாவில் கொடி நாட்டுமா கால்பந்து அணிகள்?
இந்த ஆண்டு இறுதியில் சீனாவில் நடைபெறவுள்ள 2023ஆம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய கால்பந்து அணிகள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இறுதியில் சீனாவில் நடைபெறவுள்ள 2023ஆம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய கால்பந்து அணிகள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்திய விளையாட்டு அமைச்சகம் பல ஆலோசனைகளுக்குப் பிறகு இறுதியாக இந்த முடிவை எட்டியுள்ளது. இதன் மூலம் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் கால்பந்து அணிகள் சீனாவுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர்.
முதலில் குறைந்த தரவரிசையைக் காரணம் காட்டி கால்பந்து அணிகளை அனுப்ப விளையாட்டு அமைச்சகம் மறுத்திருந்தது. இருப்பினும், ரசிகர்கள் மற்றும் அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் (AIFF) பல கோரிக்கைகளுக்குப் பிறகு, இந்திய அணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த முடிவு குறித்து மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் இன்று அதாவது ஜூலை 26ஆம் தேதி ட்வீட் செய்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “இந்திய கால்பந்து பிரியர்களுக்கு நற்செய்தி! வரவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நமது நாட்டின் கால்பந்து அணிகளான ஆண்கள் மற்றும் பெண்கள் இரு அணிகளும் பங்கேற்க உள்ளது. இந்திய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம், தற்போதுள்ள அளவுகோலின்படி தகுதி பெறாத இரு அணிகளும் பங்கேற்கும் வகையில் விதிகளை தளர்த்த முடிவு செய்துள்ளது. மேலும் இரு அணிகளும் அண்மைக் காலங்களில் மிகவும் சிறப்பாக செயல்பட்டதன் அடிப்படையில் அமைச்சகம் இந்த முடிவினை எடுத்துள்ளது. இரு அணிகளும் நமது நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
2018 ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க ஆண்கள் தேசிய கால்பந்து அணிக்கு அனுமதி கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது, ஏனெனில் ஒரு குழு விளையாட்டில், முதல் 8 இடங்களுக்குள் இருப்பவர்களுக்கு மட்டுமே அங்கீகாரம் கிடைக்கும் என்று விளையாட்டு அமைச்சகத்தின் விதி கூறுகிறது.
ஆண்கள் தேசிய கால்பந்து அணி தற்போது ஆசியாவில் 18 வது இடத்தில் உள்ளது, ஆனால் அவர்கள் SAFF சாம்பியன்ஷிப் மற்றும் ஜூன்-ஜூலையில் நடந்த இன்டர்கான்டினென்டல் கோப்பையில் வெற்றிகரமான வென்றது உட்பட மிகச் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தியுள்ளனர்.
2018 ஆம் ஆண்டு ஜகார்த்தா விளையாட்டுப் போட்டியின் போது பங்கேற்க அனுமதி பெறாத தேசிய கால்பந்து அணி, தற்போது ஆசிய அளவில் 18வது இடத்தில் உள்ளது, மேலும் ஒரு குழு விளையாட்டில் முதல் எட்டு இடங்களுக்குள் இருப்பவர்களுக்கு மட்டுமே அங்கீகாரம் கிடைக்கும் என்று விளையாட்டு அமைச்சகத்தின் விதி கூறுகிறது.
இன்டர்காண்டினென்டல் கோப்பை மற்றும் SAFF சாம்பியன்ஷிப்பில் ஒரு அற்புதமான ஓட்டத்திற்குப் பிறகு 92 சர்வதேச கோல்களை எடுத்த சுனில் சேத்ரி தலைமையிலான ஒரு அணியை அனுப்ப இந்திய விளையாட்டு அமைச்சகம் அனுப்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கால்பந்து போட்டி என்பது U-23 விளையாட்டாகும், அந்த வயதிற்கு மேல் 3 வீரர்கள் மட்டுமே அணியில் இருக்க முடியும் என்பது ஒரு விதியாகும்.