மேலும் அறிய

Golden Boot: தோற்றாலும் வீரன் வீரனே.. கோல்டன் பூட் விருதை வென்றார் பிரான்ஸின் 'தங்கமகன்' எம்பாப்பே..!

FIFA WORLDCUP 2022: கோப்பையை இழந்தாலும், உலகக்கோப்பையில் வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றான கோல்டன் ஷூ விருதினை பிரான்ஸ் அணியின் எம்பாப்வே வென்றுள்ளார்.

FIFA WORLDCUP 2022:  கோப்பையை இழந்தாலும், ஆறுதலாக உலகக்கோப்பையில் வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றான கோல்டன் ஷூ விருதினை பிரான்ஸ் அணியின் எம்பாப்வே வென்றுள்ளார். அவர் மொத்தம் இந்த தொடரில் 8 கோல்கள் அடித்து அசத்தியுள்ளார். 

தொடக்கம் முதல் ஆதிக்கம்:

22வது உலகக்கோப்பை போட்டி கத்தாரில் லூசைல் மைதானத்தில் டிசம்பர் 18ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு தொடங்கியது. இதில், கால்பந்து விளையாட்டின் மிரட்டல் நாயகன் மெஸ்ஸியின் அர்ஜெண்டினாவும் நடப்புச் சாம்பியன் பிரான்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. போட்டியின் ஆரம்பம் முதலே மிகவும் அக்ரசிவ் மோடில் விளையாடிய அர்ஜெண்டினா அணி களத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்தது. மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் அர்ஜெண்டினா என முழங்கிக்கொண்டு இருக்க அர்ஜெண்டினாவின் ஆதிக்கம் மேலும், அதிகரித்தது. 

போட்டியின் 23வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கிக்கினை மிகவும் சரியாக பயன்படுத்திக்கொண்ட அர்ஜெண்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸி சிறப்பாக கோல் அடித்து தனது அணியின் கோல் கணக்கினை தொடங்கி வைத்தார். இதன் மூலம் கோல்டன் பூட் போட்டியில் பிரான்ஸின் எம்பாப்வேவை பின்னுக்குத் தள்ளி முன்னிலை வந்தார். இந்த தொடரில் இது அவரது 6வது கோல் ஆகும். 

முதல் பாதியில் அசத்தல்:

அதனைத்  தொடர்ந்து அக்ரசிவாக விளையாடிய அர்ஜெண்டினா அணியின் வீரரகளில் ஏஞ்சல் டி மரியா போட்டியின் 36வது நிமிடத்தில் அர்ஜெண்டினா அணிக்கு இரண்டாவது கோலினை ஆச்சர்யம் அளிக்கும் வகையில் அடித்து பிரமிக்க வைத்தார். இதன் மூலம் அர்ஜெண்டினா அணி 2 - 0 என முன்னிலை வகித்தது. உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தனது அணிக்காக அவர் கோல் அடித்த உற்சாகத்தினை ஆனந்த கண்ணீர் சிந்தி வெளிப்படுத்தினார். போட்டியின் முதல் பாதியில் அர்ஜெண்டினா அணி 2 - 0 என முன்னிலை வகித்தது. 

ஆட்டத்தை மாற்றிய எம்பாப்பே

அதன் பின்னர் இரண்டவது பாதியில் ஆட்டம் முற்றிலும் அர்ஜெண்டினா பக்கம் இருக்க, 80வது நிமிடத்தில் கிடைத்த சிறப்பான வாய்ப்பான பெனால்டி ஷாட்டினை சாதூர்யமாக பயன்படுத்திய எம்பாப்வே கோலாக மற்றி பிரான்ஸ் அணிக்கு ஆறுதல் அளிக்க ஆறுதலால் அணி மூச்சு விட்டுக்கொண்டு இருக்கும்போதே, 81வது நிமிடத்தில் எம்பாப்வே காற்றில் வந்த பந்தை அட்டகாசமாக கோலாக மாற்றினார். இதனால் ஒட்டுமொத்த பிரான்ஸ் அணியும் போட்டிக்குள் வந்ததது. போட்டி 2 - 2 என்ற கணக்கில் டிராவாக இருக்க இரண்டாவது பாதி ஆட்டம் முடிந்தது. மேலும் எம்பாப்வே 7 கோல் அடித்து கோல்டன் பூட் போட்டியில் முன்னிலை வகித்தார்.  நார்மல் எக்ஸ்ட்ரா டைமில் மேற்கொண்டு எந்த அணியும் எடுக்காததால், மேற்கொண்டு 30 நிமிடங்கள் எக்ஸ்ட்ரா டைம் வழங்கப்பட்டது. 

கோல்டன் பூட் வென்ற எம்பாப்வே..

அதில் முதல் 15 நிமிடங்களில் அர்ஜெண்டினா அணி அடிக்க முயன்ற கோல்களை மிகவும் சிறப்பான முறையில் பிரான்ஸ் வீரர்கள் தடுத்து உலகத்தரமான தடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தியது. ஆனால் அதன் அடுத்த 15 நிமிடங்களின் தொடக்கம் முதலே துடிப்புடன் விளையாடிய அர்ஜெண்டினா அணியினர் சிறப்பான கூட்டு முயற்சியால் அணியின் கேப்டன், மேஜிகல் மெஸ்ஸி 108வது நிமிடத்தில் கோல் அடித்து அணியினை 3 - 2 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கச்செய்ததுடன் போட்டியை தனக்கு சாதகமாகவும் மாற்றினார். இதனால் போட்டியின் முடிவில் அர்ஜெண்டினா அணி 3 - 2 என்ற கோல் கணக்கில் வென்று உலகக்கோப்பை வென்று வரலாறு படைக்கும் என நினைக்கையில் போட்டியின் 118வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி ஷாட்டில்  எம்பாப்வே கோல் அடித்து அதகளப்படுத்த போட்டி மீண்டும் 3 - 3 என சமன் ஆனது. இந்த கோலின் மூலம் எம்பாப்வே உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்து அதகளப்படுத்தியதுடன், 8 கோல் அடித்து கோல்டன் பூட்டை உறுதி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், போட்டியின் முடிவில் எம்பாப்வே 8 கோல்கள் அடித்து கோல்டன் பூட்டை வென்றுள்ளார். 

பெனால்டி ஷூட் அவுட்டில் வெற்றி:

அதன் பின்னர் போட்டி பெனல்டி ஷாட்டுக்கு சென்றது. இதனால் இரு அணிகாளுக்கும் தலா 5 பெனால்டி ஷாட்டுகள் வழங்கப்பட்டன. பெனால்டி ஷாட்டில் எம்பாப்வே முதல் கோல் அடிக்க, அதனைத் தொடர்ந்து மெஸ்ஸி ஒரு கோல் அடித்தார். அதன் பின்னர் வந்த இரண்டு பிரான்ஸ் வீரர்கள் சொதப்ப, இரண்டு அர்ஜெண்டினா வீரர்கள் கோல் அடித்தனர்.  இதனால் போட்டி பெனால்டி ஷாட்டில் அர்ஜெண்டினா அணி 3 - 1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. அடுத்த ஷாட்டை பிரான்ஸ் வீரர் கோல் அடிக்க போட்டி 3 - 2 என ஆனது, ஆனால் அதன் பின்னர், அர்ஜெண்டினா வீரர் கோல் அடிக்க போட்டியை 4 - 2 என்ற கணக்கில் வென்று, 36 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக்கோப்பையை கைப்பற்றியது.  

 

தலைப்பு செய்திகள்

National Car Racing : தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப்.! எப்போ தொடங்குகிறது.? எங்கே நடைபெறுகிறது.? வெளியான அறிவிப்பு
தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப்.! எப்போ தொடங்குகிறது.? எங்கே நடைபெறுகிறது.? வெளியான அறிவிப்பு
குற்ற வழக்கு நிலுவையில் இருப்பவர்கள் கபடி போட்டியில் பங்கேற்க தகுதியற்றவர்கள் - உயர்நீதிமன்ற கிளை !
குற்ற வழக்கு நிலுவையில் இருப்பவர்கள் கபடி போட்டியில் பங்கேற்க தகுதியற்றவர்கள் - உயர்நீதிமன்ற கிளை !
சிவகங்கையில் கோ-கோ பயிற்சியாளர் வேலைவாய்ப்பு: ரூ.25,000 சம்பளத்தில் நேர்முகத் தேர்வு ஆகஸ்ட் 21!
சிவகங்கையில் கோ-கோ பயிற்சியாளர் வேலைவாய்ப்பு: ரூ.25,000 சம்பளத்தில் நேர்முகத் தேர்வு ஆகஸ்ட் 21!
IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Upcoming Hyundai Cars: வரப்போது 5 ஸ்ட்ராங் ஹைப்ட்ரிட் கார்.. ஹுண்டாய் இறக்கப்போகும் அந்த பஞ்ச பாண்டவர்கள் யார்? யார்?
Upcoming Hyundai Cars: வரப்போது 5 ஸ்ட்ராங் ஹைப்ட்ரிட் கார்.. ஹுண்டாய் இறக்கப்போகும் அந்த பஞ்ச பாண்டவர்கள் யார்? யார்?
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
Chennai Bengaluru Bullet Train: 350 கி.மீ SPEED... வெறும் 1.13 மணி நேரம்.! சென்னை- பெங்களூர்- அமராவதி வழியாக புல்லட் ரயில்.! அசத்தல் PLAN
350 கி.மீ SPEED... வெறும் 1.13 மணி நேரம்.! சென்னை- பெங்களூர்- அமராவதி வழியாக புல்லட் ரயில்.! அசத்தல் PLAN
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
Embed widget