FIFA WC 2022 Qatar: இங்கிலாந்து கால்பந்து அணியின் கேப்டன் மீது எனக்கு மரியாதை உண்டு-பிரான்ஸ் கேப்டன் பேட்டி
ஆட்டம் சிறப்பானதாக இருந்தது. இங்கிலாந்து அணியின் அசத்தலாக விளையாடி எங்களுக்கு சவால் கொடுத்தனர் என்றார் பிரான்ஸ் அணி கேப்டன் ஹியூகோ.
2022 உலகக் கோப்பைப் போட்டியில் பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
எவ்வாறாயினும், பிரான்ஸ் தனது இரண்டாவது கோலை அடித்த மூன்று நிமிடங்களுக்குப் பிறகு, ஹாரி கேன் மற்றொரு ஸ்பாட் கிக்கைப் பெற்றபோது, ஆட்டத்தின் பிற்பகுதியில் இங்கிலாந்து சமன் செய்யும் வாய்ப்பைப் பெற்றது.
இருப்பினும், இங்கிலாந்து கேப்டன் பந்தை கோலுக்கு கம்பத்துக்கு மேல் அடித்துவிட்டார்.
இதுதொடர்பாக பிரான்ஸ் அணியின் கேப்டன் ஹியூகோ கூறியதாவது:
அதிர்ஷ்டவசமாக பிரான்ஸ் அணிக்காக கோல் அடிக்காமல் அவர் தவறவிட்டார் என்றே நான் நினைக்கிறேன். அவர் வலிமையானவர் என்று எனக்குத் தெரியும். அவர் அதைப் பற்றி நீண்ட நேரம் சிந்திக்க மாட்டார். இந்த வலியின் தருணத்தை என்னால் அவருடன் பகிர்ந்து கொள்ள முடியும். போட்டிக்கு பிறகு நான் ஹாரியுடன் பேசவில்லை.
The Dream is getting closer...#FIFAWorldCup | @adidasfootball
— FIFA World Cup (@FIFAWorldCup) December 11, 2022
நாங்கள் கிளப் கால்பந்து போட்டியில் ஒரே அணிக்காக விளையாடியிருக்கிறோம். நான் அவரை மிகவும் மதிக்கிறேன். போட்டியின் முக்கிய தருணத்தில் கேன் பொறுப்பேற்றார்.
ஆட்டம் சிறப்பானதாக இருந்தது. இங்கிலாந்து அணியின் அசத்தலாக விளையாடி எங்களுக்கு சவால் கொடுத்தனர் என்றார் ஹியூகோ.
இங்கிலாந்து-பிரான்ஸ் இடையிலான காலிறுதி ஆட்டம் பரபரப்பாக நடந்தது. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி கேன் 54ஆவது நிமிடத்தில் கோல் அடித்தார். அதேநேரம், நடப்பு சாம்பியன் பிரான்ஸ் 17ஆவது நிமிடத்திலும், 78ஆவது நிமிடத்திலும் இரண்டு கோல்களை அடித்து வெற்றி கண்டது.
முன்னதாக, ஃபிபா கால்பந்து போட்டியில் மொராக்கோவும், போர்ச்சுகல் அணியும் மோதின. ரொனால்டோ இடம்பெற்றுள்ள அணி என்பதால் ஆட்டத்தில் அனல் பறந்தது. முதல் பாதியில் மொரோக்கா அணி, முதல் கோலை பதிவு செய்தது.
போர்ச்சுல் அணி எவ்வளவோ முயன்று பார்த்தும் 90 நிமிடங்கள் முடிவில் போர்ச்சுல் அணியால் கோல் அடிக்க முடியவில்லை.
ஸ்டாப்பேஜ் டைம் கூடுதலாக 8 நிமிடங்கள் வழங்கப்பட்டது. எனினும், அந்த கூடுதல் நிமிடத்திலும் போர்ச்சுகலால் கோல் அடிக்க முடியவில்லை. இதையடுத்து, மொரோக்கா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதுவரை மொராக்கோ அணி இந்தத் தொடரில் தோற்கவில்லை. மொராக்கோவின் வெற்றிப் பயணம் தொடர்கிறது. இரண்டாவது பாதியில் களத்தில் இறங்கிய ரொனால்டோ, எவ்வளவோ முயன்றும் ஒரு கோலை கூட போட முடியவில்லை.
புகழ்பெற்ற விளையாட்டு செய்தியாளர் வால் மறைவு… ஃபிஃபா போட்டி நடைபெரும்போதே உயிரிழந்த சோகம்!
இதுதான் ரொனால்டோவுக்கு கடைசி உலகக் கோப்பை கால்பந்து தொடராகும். முக்கியமான ஆட்டமான இதில் போர்ச்சுகல் தோல்வி அடைந்ததால் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கண்ணீருடன் தனது அறைக்குச் சென்றார். அவரை சிலர் ஆறுதல் படுத்தினர். மைதானத்தில் ஒட்டுமொத்த போர்ச்சுகல் ரசிகர்களும் சோகத்தில் ஆழ்ந்தனர்.
இதுவரை அர்ஜென்டீனா, குரோஷியா, மொராக்கோ ஆகிய அணிகள் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளன.
அர்ஜென்டீனாவும், குரோஷியாவும் 14ம் தேதி இரவு 12.30 மணிக்கு அரையிறுதியில் மோதுகிறது.
இன்று இரவு இங்கிலாந்து-நடப்பு சாம்பியன் பிரான்ஸ் ஆகிய அணிகள் இடையே காலிறுதி ஆட்டம் நடைபெறவுள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியுடன் மொராக்கோ மோதும்.