புகழ்பெற்ற விளையாட்டு செய்தியாளர் வால் மறைவு… ஃபிஃபா போட்டி நடைபெரும்போதே உயிரிழந்த சோகம்!
மேலும் கடந்த 10 நாட்களாக இருந்த சளி நெதர்லாந்து-அர்ஜென்டினா போட்டியன்று கடுமையாக மாறியதாகவும், தனது மார்பின் மீது அழுத்தத்தை உணர்வதாகவும் அவர் எழுதி இருந்தார்
அமெரிக்காவில் மிகவும் பிரபலமான கால்பந்து செய்தியாளர்களில் ஒருவரான கிராண்ட் வால், அர்ஜென்டினா, நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை போட்டி நடந்துகொண்டிருமக்கும்போதே உயிரிழந்தார். அவருக்கு அருகில் அமர்ந்திருந்த அமெரிக்க ஊடகங்கள், ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் பத்திரிகையாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தின் ஒரு பகுதியில் வால் தனது இருக்கையில் விழுந்ததாகவும், அவருக்கு அருகில் இருந்த நிருபர்கள் உதவிக்கு அழைத்ததாகவும் கூறினர்.
புகழ்பெற்ற செய்தியாளர் வால் மறைவு
வால் செய்தியாளராக தனது எட்டாவது உலகக் கோப்பை போட்டியில் அமர்ந்திருந்தார். அவர் கத்தாரில் இருந்தபோது ஏற்கனவே மருத்துவமனைக்குச் சென்றதாக தனது இணையதளத்தில் திங்கள்கிழமை எழுதினார். "என் உடல் ஒத்துழைக்கவில்லை. மூன்று வாரங்களாக குறைந்த தூக்கம், அதிக மன அழுத்தம் மற்றும் நிறைய வேலைகள் சுழல்கின்றன" என்று வால் எழுதினார். மேலும் கடந்த 10 நாட்களாக இருந்த சளி நெதர்லாந்து-அர்ஜென்டினா போட்டியன்று கடுமையாக மாறியதாகவும், தனது மார்பின் மீது அழுத்தத்தை உணர்வதாகவும் அவர் எழுதி இருந்தார். அவருக்கு செய்த கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என்ற ரிசல்ட் வந்தது குறிப்பிடத்தக்கது. 1996 இல் பிரின்ஸ்டனில் பட்டம் பெற்ற இவர், 1996 முதல் 2021 வரை ஸ்போர்ட்ஸ் இல்லஸ்ட்ரேட்டட் நிறுவனத்தில் பணியாற்றினார். இது முதன்மையாக கால்பந்து மற்றும் கல்லூரி கூடைப்பந்து பற்றிய அவரது கவரேஜுக்காக அறியப்படுகிறது. பின்னர் அவர் தனது சொந்த இணையதளத்தை தொடங்கி இன்றுவரை நடத்தி வருகிறார். 2012-19 வரை ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸிலும் பணியாற்றினார்.
U.S. Soccer Statement On The Passing Of Grant Wahl: pic.twitter.com/CBp1mCK1mQ
— U.S. Soccer (@ussoccer) December 10, 2022
அமெரிக்க வெளியுறவுத்துறை
அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் வெள்ளிக்கிழமை செய்த டீவீட்டில், “கிராண்ட் வாலின் மரணத்தை அறிந்து நாங்கள் மிகவும் வருத்தமடைந்தோம், மேலும் நாங்கள் அவரது குடும்பத்தினருக்கு எங்கள் இரங்கலை அனுப்பினோம். இறுதிச்சடங்கு குறித்த அவரது குடும்பத்தின் விருப்பங்கள் முடிந்தவரை விரைவாக நிறைவேற்றப்படுவதை மேற்பார்வையிட மூத்த கத்தார் அதிகாரிகளுடன் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்", என்று எழுதியிருந்தனர்.
வாலின் மனைவி
அவரது மனைவி டாக்டர். செலின் கவுண்டர், நியூ யார்க் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசினில் இணைப் பேராசிரியராகவும், பெல்லூவ் மருத்துவமனை மையத்தில் மருத்துவராகவும், சிபிஎஸ் செய்தி பங்களிப்பாளராகவும் உள்ளார். செலின் கவுண்டர் தனது கணவரின் "கால்பந்து குடும்பம்" மற்றும் என்னை அணுகிய நண்பர்களின் ஆதரவிற்கு நன்றி என்று ட்வீட் செய்துள்ளார். "நான் முழு அதிர்ச்சியில் இருக்கிறேன்," என்று அவர் எழுதினார்.
I am so thankful for the support of my husband @GrantWahl's soccer family & of so many friends who've reached out tonight.
— Céline Gounder, MD, ScM, FIDSA 🇺🇦 (@celinegounder) December 10, 2022
I'm in complete shock. https://t.co/OB3IzOxGlE
ஃபிஃபாவும் வாலும்
இந்த உலகக்கோப்பையில் LGBTQ உரிமைகளுக்கு ஆதரவாக ரெயின்போ டி-சர்ட் அணிந்ததற்காக வால் 25 நிமிடங்கள் அல் ரய்யானில் உள்ள அகமது பின் அலி மைதானத்தில் தடுத்து வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. செக்யூரிட்டி உள்ளே நுழையவிட மறுத்ததாகவும், சட்டையை கழற்றச் சொன்னதாகவும் எழுதினார். பழமைவாத முஸ்லீம் நாடான கத்தாரில் ஓரினச்சேர்க்கை மற்றும் லெஸ்பியன் செக்ஸ் குற்றமாக்கப்பட்டுள்ளது. பின்னர் அவரை யாரென்று தெரிந்துகொண்ட பாதுகாப்பு படையின் தளபதி அவரே வந்து உள்ளே அழைத்து சென்ற நிலையில், ஃபிஃபா தன்னிடம் மன்னிப்பு கேட்டதாக வால் அவரது வெப்சைட்டில் எழுதியிருந்தார். FIFA வருடாந்திர விருதுகளில் இவ்வருடம் இவரது பெயரும் இருந்ததாக கூறுகிறார்கள். எட்டுக்கும் மேற்பட்ட உலகக் கோப்பைகளில் கலந்து கொண்டதற்காக FIFA மற்றும் சர்வதேச விளையாட்டு செய்தியாளர் சங்கமான AIPS ஆல் கவுரவிக்கப்பட்ட 82 பத்திரிகையாளர்களில் ஒருவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.