AIFF Ban: இந்திய கால்பந்து சங்கத்தின் மீதான தடை நீக்கம்.. திட்டமிட்டபடி U17 மகளிர் உலகக் கோப்பை!
அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் (AIFF) மீது சர்வதேச கால்பந்து சங்கமான ஃபிபா தற்காலிகமாக இடைநீக்கம் செய்திருந்தது. தற்போது இந்த தற்காலிக தடை நீக்கப்பட்டுள்ளதாக ஃபிபா தகவல் தெரிவித்துள்ளது.
அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் தினசரி விவகாரங்களில் இருந்த சிக்கல்களை முழுமையாக மீட்டுள்ளது என்பதை சர்வதேச அமைப்பு உறுதிப்படுத்தியதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 16 ம் தேதி இந்திய கால்பந்து சங்கத்தில் சில வெளிநபர்களின் இடையூறு இருப்பதாக கூறி அகில இந்திய கால்பந்து கூட்டமப்பை ஃபிபா தடை செய்தது.
FIFA lifts suspension of AIFF. U-17 Women's World Cup will be held in India. ✌🏻 pic.twitter.com/bzuRFLPWxo
— Facts (@BefittingFacts) August 26, 2022
இதுகுறித்து ஃபிபா வெளியிட்ட அறிக்கையில், “ அகில இந்திய கால்பந்து நிர்வாகக் குழுவின் அதிகாரங்களை ஏற்க அமைக்கப்பட்ட நிர்வாகிகள் குழுவின் ஆணை தற்போது நிறுத்தப்பட்டது. அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் நிர்வாகம் தினசரி விவகாரங்களில் இருந்த சிக்கல்களை நீக்கி, முழுக் கட்டுப்பாட்டை மீண்டும் பெற்றுள்ளது என்பதை ஃபிபா உறுதிப்படுத்திய பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
ஃபிபா மற்றும் ஆசிய கால்பந்து சங்கம் தொடர்ந்து நிலைமையை கண்காணிக்கும். அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் தேர்தல்களை சரியான நேரத்தில் ஒழுங்கமைக்க ஆதரவளிக்கும். இதன் காரணமாக, 2022 அக்டோபர் 11-30 தேதிகளில் நடைபெறவிருந்த FIFA U-17 மகளிர் உலகக் கோப்பை 2022 திட்டமிட்டபடி இந்தியாவில் நடைபெறும்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
Finally, FIFA U-17 Women's World Cup 2022 scheduled to take place on 11-30 October 2022 will be held in India as planned. 🇮🇳
— Anshul Saxena (@AskAnshul) August 26, 2022
FIFA has lifted the ban on All India Football Federation (AIFF). pic.twitter.com/42BpuKxOUV
போட்டி விவரங்கள் :
Bureau of the Council decided on 25 August to lift the suspension of the AIFF with immediate effect. As a consequence, the FIFA U-17 Women’s World Cup
— ANI (@ANI) August 26, 2022
2022 scheduled to take place on 11-30 October 2022 can be held in India as planned: FIFA
17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் வரும் அக்டோபர் 11ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. அதேபோல், இந்திய ஆடவர் அணி ஏ.எஃப்.சி ஆசிய கோப்பை 2023ஆம் ஆண்டு தொடருக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த நிலையில் அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் மீதான தடை தற்போது நீக்கப்பட்டிருப்பதால் திட்டமிட்டபடி அனைத்து போட்டிகளும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.