Dipa Karmakar Ban: உறுதியான ஊக்கமருந்து சோதனை.. ஒலிம்பிக்கில் 4வது இடம் பிடித்த தீபா கர்மாருக்கு தடை.. எத்தனை மாதம் தெரியுமா?
இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகருக்கு 21 மாதங்கள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகருக்கு 21 மாதங்கள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ஜிம்னாஸ்டிக்ஸ் கூட்டமைப்புக்கான ஊக்கமருந்துக்கு எதிரான சோதனை தொடர்பான நடைமுறைகளை தனியார் நிறுவனமான சர்வதேச பரிசோதனை மையம் சோதனை செய்து வருகிறது. இந்த சூழலில் ஊக்கமருந்து உட்கொண்டதாக தீபா கர்மாகருக்கு தடை விதிக்க சர்வதேச பரிசோதனை மையம் முடிவு செய்துள்ளது.
எழுந்த குற்றச்சாட்டு:
2016 ரியோ ஒலிம்பிக்கில் தீபா கர்மாகர் சிறப்பாக செயல்பட்டு நான்காவது இடத்தைப் பிடித்தார். ஒலிம்பிக்கில் இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனையின் சிறந்த ஆட்டம் இதுவாகும். ஊடக அறிக்கையின்படி, தீபா கர்மாகர் Hygemin S-3 Beta-2 ஐ உட்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது. உண்மையில், சர்வதேச ஊக்கமருந்து ஏஜென்சி Hygemin S-3 Beta-2 ஐ தடை செய்யப்பட்ட மருந்துகளின் பிரிவில் வைத்துள்ளது. இந்த மூலப்பொருள் நுரையீரலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க உதவுகிறது. அந்தவகையில், கடந்த 2021 ம் ஆண்டு அக்டோபர் 11ம் தேதி தீபா கர்மாகரின் மாதிரிகள் சோதனைக்கு எடுக்கப்பட்டது. அதில், அவர் ஹிஜெமைன் என்ற ஊக்கமருந்து பயன்படுத்தியது தெரியவந்தது. தொடர்ந்து, தீபா 21 மாதங்களுக்கு சர்வதேச சோதனை நிறுவனம் தடை விதித்துள்ளது.
தீபாவுக்கு விதிக்கப்பட்ட இந்த தடையால் இந்தியாவுக்காக எந்த சர்வதேச போட்டியிலும் பங்கேற்க முடியாது. தீபா ஏற்கனவே 16 மாதங்கள் தடையில் இருந்தநிலையில், இன்னும் ஐந்து மாதங்கள் எந்தவொரு போட்டியிலும் பங்கேற்க முடியாது என்று சர்வதேச சோதனை நிறுவனம் கூறியது.
தடை குறித்து ட்விட்டரில் பேசிய தீபா கர்மாகர், “ எனக்காகவும், என் வாழ்க்கைக்காகவும் நான் நடத்திய மிக நீண்ட போர்களில் ஒன்று இன்று முடிவுக்கு வருகிறது.
அக்டோபர் 2021 இல், எனது மாதிரி போட்டிக்கு பிறகு சோதனைக்காகப் பெறப்பட்டு மதிப்பீட்டிற்கு அனுப்பப்பட்டது. நான் அறியாமல் உட்கொண்ட தடை செய்யப்பட்ட பொருளுக்கு முடிவு சாதகமாக இருந்தது. ஆனால், அதன் மூலத்தைக் கண்டறிய முடியவில்லை. சர்வதேச கூட்டமைப்புடன் ஒரு விரைவான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் தற்காலிக இடைநீக்கத்தை ஏற்க முடிவு செய்தேன்.
என்னுடைய நெறிமுறைகள் கேள்விக்குட்படுத்தப்பட்ட நிலையில், அந்த பொருட்கள் எப்படி என் உடலில் நுழைந்தன என்பதை அறியாமல் இருப்பது வேதனையாக இருந்தது. என் வாழ்க்கையில் தடை செய்யப்பட்ட பொருளை சாப்பிடும் எண்ணம் என் மனதில் தோன்றியதில்லை. ஜிம்னாஸ்டிக்ஸ் மட்டுமே என்னிடம் உள்ளது, எனக்கு அல்லது எனது நாட்டிற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் எதையும் நான் ஒருபோதும் செய்ய மாட்டேன்.” என பதிவிட்டு இருந்தார்.
— Dipa Karmakar (@DipaKarmakar) February 4, 2023
இந்த விவகாரம் சுமுகமாக தீர்க்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். எனது இடைநீக்கம் 3 மாதங்கள் குறைக்கப்பட்டு 2.5 மாதங்கள் வரை தேதியிடப்பட்டது, ஜூலை 2023 இல் நான் விரும்பும் விளையாட்டுக்குத் திரும்புவதற்கு என்னை அனுமதிக்கிறது.
யார் இந்த தீபா கர்மாகர்..?
016-ஆம் ஆண்டு கோடைக்கால ஒலிம்பிக்கில் இந்தியாவின் சார்பில் முதல்முறையாக பங்கேற்று ஒட்டுமொத்த தேசத்தையே திரும்பிப் பார்க்க வைத்த திரிபுராவைச் சேர்ந்த தீபா கர்மாகர். ஒலிம்பிக் போட்டியொன்றில் இந்தியாவின் சார்பாக பங்கேற்ற முதல் பெண் ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை ஆவார்.
ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான தனிநபர் போட்டியில் வால்ட் ஜம்ப் போட்டியில் 15.066 புள்ளிகள் எடுத்து நான்காவதாக வந்தார்; மூன்றாவதாக வந்த சுவிட்சர்லாந்தின் கியுலியா இசுடெய்ன்கிருபர் பெற்ற 15.216ஐ விட 0.015 புள்ளிகளில் நூலிழையில் வெண்கலப் பதக்கத்தைத் தவறவிட்டார்.
மேலும் இவர் 2015 ஆண்டு சப்பானில் நடந்த ஏ.ஆர்.டி. ஆசிய ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகளில் கலந்துகொண்டு வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இந்தச் சாதனைகள் மூலமாக இந்தியாவில் ஜிம்னாஸ்டிக்ஸ்கில் மிக இளவயதில் சாதனைப் படைத்தவர்.
ஏப்ரல் 2016 அன்று இந்தியாவிலிருந்து ஒலிம்பிக்கில் ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாடுக்காகக் கலந்து கொள்ளத் தகுதி சுற்றில் 52.698 புள்ளிகள் பெற்று ஒலிம்பிக்கில் கந்துகொள்ளும் வாய்ப்பை பெற்றார்.
இதன்மூலம் கடந்த 52 ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டில் கலந்துகொள்ளும் முதல் இந்தியர் என்ற பெருமைக்குரியவரானார்.
- 2016ஆம் ஆண்டு ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதை வழங்கி மத்திய அரசு கவுரவித்தது.
- 2017ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.
தீபா சமீபத்தில் பாகுவில் நடந்த எஃப்ஐஜி உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்று தோல்வியடைந்தார்.