200வது போட்டியில் டாஸ் வென்றார் தோனி: பஞ்சாப்பை பேட்டிங் செய்ய அழைப்பு

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி, இன்று தனது 200 வது போட்டியில் விளையாடுகிறார். டாஸ் வென்ற தோனி பஞ்சாப் அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளார்.

FOLLOW US: 

14ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் எட்டாவது லீக் போட்டியில், மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லோகேஷ் ராகுல் தலைமையிலான பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இந்நிலையில், போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி பவுலிங்கை தேர்வு செய்தார். இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெல்ல வேண்டிய கட்டாயத்திலும், வெற்றியை தொடர வேண்டும் என்ற முனைப்புடன் பஞ்சாப் கிங்ஸ் அணியும் இருக்கும். இதனால், ஆட்டத்தில் அனல்பறக்கும் என எதிர்பார்க்கலாம்.

அணி வீரர்கள் விவரம்:

சென்னை சூப்பர் கிங்ஸ்

ருதுராஜ் கெய்க்வாட், டூப்ளிசஸ், சுரேஷ் ரெய்னா, மொயின் அலி, அம்பதி ராயுடு, மகேந்திர சிங் தோனி (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, சாம் கரன், டுவைன் பிராவோ, ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர்.200வது போட்டியில் டாஸ் வென்றார் தோனி: பஞ்சாப்பை பேட்டிங் செய்ய அழைப்பு

பஞ்சாப் சூப்பர் கிங்ஸ்

லோகேஷ் ராகுல் (கேப்டன்), மயங்க் அகர்வால், கிறிஸ் கெய்ல், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரான், ஷாருக்கான், ரிச்சர்ட்சன், ரிலி மெரிடித், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்.200வது போட்டியில் டாஸ் வென்றார் தோனி: பஞ்சாப்பை பேட்டிங் செய்ய அழைப்புஇந்தப் போட்டி தோனிக்கு 200ஆவது ஐபிஎல் போட்டியாகும்.
இதையொட்டி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான ஷேன்  வாட்சன் மகேந்திர சிங் தோனிக்கு வாழ்த்து கூறியுள்ளார்.200வது போட்டியில் டாஸ் வென்றார் தோனி: பஞ்சாப்பை பேட்டிங் செய்ய அழைப்பு

இதுதொடர்பாக ஃபேஸ்புக்கில் ஷேன் வாட்சன்,  ‘ 200ஆவது போட்டியில் விளையாடும் தோனிக்கு பெஸ்ட் ஆப் லக்.  அணியின் இதயத்துடிப்பான நீங்கள், மிகச்சிறந்த தலைவர்களில் ஒருவரும் கூட’ எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும்,  பலர் தோனிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தனது 200ஆவது போட்டியில் அணியை வெற்றி பெறச்செய்தால், தோனிக்கு ஐபிஎல் வரலாற்றில் மறக்கமுடியாத நிகழ்வாக அமையும். 

Tags: IPL Dhoni ragul cskvspunjab

தொடர்புடைய செய்திகள்

Steve Smith Test Ranking : முதல் இடத்துக்கு முன்னேறிய ஸ்டீவன் ஸ்மித் : 4-வது இடத்திற்கு முன்னேறிய கோலி..!

Steve Smith Test Ranking : முதல் இடத்துக்கு முன்னேறிய ஸ்டீவன் ஸ்மித் : 4-வது இடத்திற்கு முன்னேறிய கோலி..!

ரொனால்டோ செய்த சம்பவம்; கோகோ கோலாவுக்கு ரூ.29 ஆயிரம் கோடி நஷ்டம்!

ரொனால்டோ செய்த சம்பவம்;  கோகோ கோலாவுக்கு ரூ.29 ஆயிரம் கோடி நஷ்டம்!

Indian Women cricket Team: சாதனைப் படைக்குமா இந்திய மகளிர் அணி; 7 ஆண்டுகளுக்கு பின்பு முதல் டெஸ்ட் இன்று !

Indian Women cricket Team: சாதனைப் படைக்குமா இந்திய மகளிர் அணி; 7 ஆண்டுகளுக்கு பின்பு முதல் டெஸ்ட் இன்று !

Sachin on WTC: டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தைக் காண ஆர்வமாக உள்ளேன் : உற்சாகத்தில் சச்சின்..!

Sachin on WTC: டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தைக் காண ஆர்வமாக உள்ளேன் : உற்சாகத்தில் சச்சின்..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் - 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் - 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு!

டாப் நியூஸ்

கருப்புப்பூஞ்சை மருந்தில் பாகுபாடா? - நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுப்பு..!

கருப்புப்பூஞ்சை மருந்தில் பாகுபாடா? - நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுப்பு..!

BREAKING: யூடியூப் சேனல் அட்மினாக செயல்பட்டதால் நடவடிக்கை : மதனின் மனைவி கிருத்திகா கைது..!

BREAKING: யூடியூப் சேனல் அட்மினாக செயல்பட்டதால் நடவடிக்கை : மதனின் மனைவி கிருத்திகா கைது..!

மதுரை : தாய்மாமாவுடன் திருமண நிச்சயம் : படிக்கும் கனவு பறிக்கப்பட்ட சிறுமி தற்கொலை..!

மதுரை : தாய்மாமாவுடன் திருமண நிச்சயம் : படிக்கும் கனவு பறிக்கப்பட்ட சிறுமி தற்கொலை..!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயலராக உமா மகேஸ்வரி ஐ.ஏ.எஸ்., நியமனம்!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயலராக உமா மகேஸ்வரி ஐ.ஏ.எஸ்., நியமனம்!