Dhoni on CSK Next season: ‛அடுத்த ஏலத்தில் தான் தெரியும்...’ தோனி சொன்ன சூசகம்... அணி மாறுகிறாரா?
அடுத்த ஐபிஎல் தொடரில் கட்டாயம் விளையாடுவேன். ஆனால், சென்னை அணியில் தானா என்ற கேள்விக்கு உங்களால் தற்போது பதில் காண முடியாது - எம்.எஸ் தோனி
சிஎஸ்கே அணியின் நலன் கருதியும், 2022ல் ஜனவரியில் நடைபெற இருக்கும் ஐபிஎல் ஏலத்தின் அடிப்படையிலும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியுடனான தனது பயணம் தீர்மானிக்கப்படும் என்று அந்த அணியின் கேப்டன் மகேந்ந்திர சிங் தோனி தெரிவித்தார்.
இருப்பினும், ஹர்ஷா போக்லே கூற்றுக்கு (But still, I haven't left [it] behind - நான் இன்னும் எனது பயணத்தை முடித்துக் கொள்ளவில்லை) என்று அவர் கூறியதன் மூலம், அடுத்தாண்டு ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணியில் தொடர்வதற்கான சாத்தியப்பாடுகளையும் தோனி தெளிவுபடுத்தியுள்ளார்.
முன்னதாக, துபாயில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 27 ரன் வித்தியாசத்தில் வென்றது. நான்காவது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்ட சென்னை அணிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
நேற்று, ஆட்டத்தின் பிறகு கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லேவிடம் தோனி பேசினார். அந்த உரையாடலின் தமிழாக்கம் பின்வருமாறு:
- ஹர்ஷா: அடுத்த ஆண்டில் உங்கள் திட்டம் என்ன?
- தோனி: அடுத்த ஐபிஎல் தொடரில் கூடுதல் இரண்டு அணிகள் இடம்பெறும் என்ற பிசிசிஐ-ன் முடிவைப் பொறுத்தது.
- ஹர்ஷா: நான் உங்களுக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையிலான உறவைக் கேட்கிறேன்
- தோனி: சென்னை அணியின் எதிர்காலத்துக்கு எது நல்லது என்ற கருத்தின் அடிப்படையில் நாம் முடிவு செய்ய வேண்டும். முதல் நான்கு வீரர்களில் நான் இருப்பேனா என்பதைப் பற்றியதல்ல. உண்மையில், அணியின் உரிமையாளர்களின் நலன்களைப் பற்றியது. அடுத்த 10 ஆண்டுகளுக்குத் தேவையான அணியை நீங்கள் உருவாக்க வேண்டும். 2008 இல் அப்படியொரு தீர்க்கமான முடிவை எடுத்தோம்.10 ஆண்டுகளாக அணியின் முக்கிய வீரர்கள் தொடர்ந்து பயணித்து வந்தனர். தற்போதும், சிறந்ததொரு முடிவை எடுப்பது அவசியம்.
- ஹர்ஷா: நான்கு முறை கோப்பையை வென்றது, 9 முறை இறுதிப் போட்டியில் பங்கேற்றது, அனைத்து தகுதிச் சுற்றுக்கும் முன்னேறியது (2020-ஐத் தவிர) எனஉங்களின் தனிச் சிறப்பான செயல்பாடுகள் ஈடு இணையற்றது.
- தோனி: நான், இன்னும் எனது பயணத்தை முடித்துக் கொள்ளவில்லை.
NEWS 🚨 BCCI announces release of tender to own and operate IPL team.
— BCCI (@BCCI) August 31, 2021
More details here - https://t.co/G0R7dMRy6Z pic.twitter.com/oyGLorerq0
அடுத்த ஐபிஎல் தொடரில் கட்டாயம் விளையாடுவேன். ஆனால், சென்னை அணியில் தானா என்ற கேள்விக்கு உங்களால் தற்போது பதில் காண முடியாது என்ற கருத்தை தோனி ஏற்கனவே கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
"You'll see me in yellow next season but whether I'll be playing for CSK you never know" - MS Dhoni@MSDhoni | #MSDhoni | #WhistlePodu pic.twitter.com/SU9KCh86vH
— DHONI Trends™ 🦁 (@TrendsDhoni) October 8, 2021
2022-ம் ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரில் சில மாற்றங்கள் செய்ய இருப்பதாக முன்னரே அறிவிப்புகள் வெளியானது. அதன் அடிப்படையில், 2014-ம் ஆண்டு முதல் 8 அணிகள் பங்கேற்று வரும் நிலையில், அடுத்த ஐபிஎல் தொடரில் 10 அணிகள் பங்கேற்க இருப்பதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.