ZIM vs PAK: இந்தியாவில் தயாரித்த பீர்.. பாகிஸ்தானை வெறுப்பேற்ற கொண்டாடிய ஜிம்பாப்வே அணியினர்
பாகிஸ்தானின் தகுதிபெறும் வாய்ப்பை ஆபத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், ஜிம்பாப்வே வீரர்கள் இந்த வெற்றியை பியர் குடித்து கொண்டாடி வருகின்றனர், அதுவும் இந்திய தயாரிப்பு பியர் என்பதுதான் ஹைலைட்.
![ZIM vs PAK: இந்தியாவில் தயாரித்த பீர்.. பாகிஸ்தானை வெறுப்பேற்ற கொண்டாடிய ஜிம்பாப்வே அணியினர் Zimbabwe Cricket Team Drinks Indian Beer Brand Bira To Mock Pakistan After Win In PAK vs ZIM T20 World Cup 2022 Match ZIM vs PAK: இந்தியாவில் தயாரித்த பீர்.. பாகிஸ்தானை வெறுப்பேற்ற கொண்டாடிய ஜிம்பாப்வே அணியினர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/28/80ede4ac20a42aa2a32abd8833200d811666936176263109_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக்கோப்பையில் நேற்று நடைபெற்ற சூப்பர் 12 சுற்று ஆட்டம் ஒன்றில் வலுவான பாகிஸ்தான் அணி, ஜிம்பாப்வே அணியிடம் ஒரு ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. ஜிம்பாப்வே அணியின் இந்த திரில் வெற்றி, பாகிஸ்தானின் தகுதிபெறும் வாய்ப்பை ஆபத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், ஜிம்பாப்வே வீரர்கள் இந்த வெற்றியை பியர் குடித்து கொண்டாடி வருகின்றனர், அதுவும் இந்திய தயாரிப்பு பியர் என்பதுதான் ஹைலைட்.
Can’t believe what just happened 🇿🇼 #t20worldcup pic.twitter.com/sFyWMsLcX0
— Ryan Burl (@ryanburl3) October 27, 2022
பாக். - ஜிம். போட்டி
நேற்றைய போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி தொடக்கத்தில் இருந்தே அதிக ரன்கள் குவிக்க வேண்டும் என்ற நோக்கில் ஆடினார்கள். பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ஒப்பனர்கள் ஆடியதை விட ஜிம்பாப்வே ஒப்பனர்கள் சிறப்பாகவே ரன் குவிப்பில் ஈடுபட்டனர். சியான் வில்லியம் 31 ரன்கள் எடுத்த நிலையில், பாகிஸ்தானின் வேகம் தாங்காமல் அடுத்தடுத்து விக்கெட்களை விட்டது ஜிம்பாப்வே. இதனால் ஜிம்பாப்வே 130-8 ரன்களை எடுத்தது. குறைந்த டார்கெட் என்ற அலச்சியதோடு களம் இறங்கிய பாகிஸ்தானுக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.
பாகிஸ்தான் தோல்வி
4 ரன்கள் எடுத்த நிலையில் பாபர் அசாம் அவுட்டானார். அவரை தொடர்ந்து 14 ரன்களில் முகமது ரிஸ்வானும் அவுட் ஆனார். ஃபிளாட்டான பிச்சிலேயே ரன்கள் குவித்து பழகிய இருவரும் ஆஸ்திரேலியா போன்ற பிட்சில் ஆட முடியாமல் தொடர்ந்து சொதப்பி வருகிறார்கள். இவர்கள் அவுட்டான பின் பாகிஸ்தான் அணியில் ஷான் மசூத் மட்டுமே நிதானமாக ஆடி 44 ரன்கள் வரை எடுத்தார். மற்ற வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக நடையை கட்டிய போக்கில் இருந்ததால் யாரும் பெரிதாக ரன் குவிக்கவில்லை. இதனால் கடைசி இரு ஓவர்களில் இரண்டு விக்கெட் மீதமுள்ள நிலையில் 22 ரன்கள் அடிக்க வேண்டிய நிலமை பாகிஸ்தான் அணிக்கு வந்தது. அப்போது 20 ரன் மட்டுமே குவித்து ஆட்டத்தை இழந்தது. ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராஸா நன்றாக பந்து வீசி முக்கியமான தருவாயில் 3 விக்கெட்களை எடுத்தார்.
Congratulations to people of Zimbabwe for breaking the arrogance of Pakistani players . Celebrate this moment by drinking Indian craft beer Bira 91. Cheers 🥂. pic.twitter.com/BjwwpXurom
— Subham. (@subhsays) October 27, 2022
இந்திய பீர்
பாகிஸ்தானுக்கு எதிரான இந்த போட்டியில் ஜிம்பாப்வே அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற அந்த வெற்றியை நாடே கொண்டாடி வருகிறது. அதே போல ஜிம்பாப்வே அணி வீரர்களும் கொண்டாடினர். குறிப்பாக பல ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர்கள் இந்திய பிராண்ட் பீர் குடித்து இந்த வெற்றியை கொண்டாடி பாகிஸ்தான் வீரர்களை கலாய்ப்பதாக நம்புகின்றனர். ஜிம்பாப்வே மிடில்-ஆர்டர் பேட்டர் ரியான் பர்ல், இந்திய பியரான பைரா நிறுவன பீர் கையில் வைத்துக்கொண்டு சக வீரர் பிராட் எவான்ஸுடன் நின்று போஸ் கொடுக்கும் படத்தை ட்விட்டரில் பகிர்ந்து கொண்டார். "என்ன நடந்தது என்பதை நம்ப முடியவில்லை," என்று பர்ல் ட்விட்டரில் எழுதினார். பாகிஸ்தான் அணியை கலாய்ப்பதாக எண்ணி ஜிம்பாப்வே வீரர்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பீர் குடிப்பதுபோல போஸ் கொடுக்கின்றனர். ஜிம்பாப்வே மற்றும் இந்தியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் கடைசி பந்தில் பாகிஸ்தான் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)