Year Ender 2021: 2021-இல் சிறந்த டெஸ்ட் பந்துவீச்சு... சிராஜ் முதல் அஜாஸ் பட்டேல் வரை!
அறிமுகமில்லாத சில பந்து வீச்சாளர்கள் அறிமுமாகி சிறப்பான தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். அந்த வரிசையில் இந்த 2021 ம் ஆண்டு சிறப்பாக பந்துவீசிய 10 பந்து வீச்சாளர்கள் பட்டியல் பின்வருமாறு :
2021 ம் ஆண்டை பொறுத்தவரை அதிக எண்ணிக்கையிலான டெஸ்ட் போட்டிகள் நடைபெறவில்லை என்றாலும், ஒரு சில போட்டிகள் மிக பெரிய வரலாற்றை அளித்தது. அறிமுகமில்லாத சில பந்து வீச்சாளர்கள் அறிமுமாகி சிறப்பான தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். அந்த வரிசையில் இந்த 2021 ம் ஆண்டு சிறப்பாக பந்துவீசிய 10 பந்து வீச்சாளர்கள் பட்டியல் பின்வருமாறு :
முகமது சிராஜ் (5/73 vs ஆஸ்திரேலியா, காபா)
Heroes of Gabba victory :-
— Diwakar¹⁸ (@diwakarkumar47) December 20, 2021
Shardul : 7W + 69 Runs
Sundar : 4W + 84 Runs
Pant : 112 runs (67 SR)
Siraj : 6W + 13 runs
Pujara : 81 runs (305 balls)
S Gill : 98 runs
Natrajan : 3W
Rahane : 61 runs
Rohit : 51 runs
Mayank : 47 runs
N Saini : (-ve) contribution #TeamIndia pic.twitter.com/yihcVkSuZQ
அன்றைய போட்டியான தனது மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய முகமது சிராஜ், ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தனது முதல் ஐந்து விக்கெட்டுகளை பதிவு செய்தார். இந்த போட்டியில் சிராஜ் கைப்பற்றிய 5 விக்கெட்கள் மூலம் காபா மண்ணில் என்றுமே தோற்காத ஆஸ்திரேலியா அணி இந்தியா அணியிடம் மண்ணை கவ்வியது. இந்தியா அணியின் இந்த வரலாறு சிறப்பிக்க வெற்றிக்கு சிராஜ் மிக முக்கிய காரணமாக இருந்தார். அதேபோல், பிரிஸ்பேனில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய ஐந்தாவது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை சிராஜ் பெற்றார்.
அக்சர் பட்டேல், (6/38 மற்றும் 5/32 vs இங்கிலாந்து, அகமதாபாத்)
Axar Patel clearly leads the best Test bowling average by an Indians in a calendar year (min: 10 inns).
— Kausthub Gudipati (@kaustats) December 22, 2021
11.86 - Axar Patel in 2021*
15.56 - Ishant Sharma in 2019
15.72 - Amit Mishra in 2015
16.23 - R Ashwin in 2021*
16.66 - Mohammed Shami in 2019
17.20 - R Ashwin in 2015
கடந்த பிப்ரவரி மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிராக அக்சர் பட்டேல் தனது முதல் டெஸ்டில் அறிமுகமாகினர். அறிமுகமான அந்த தொடரின் இரண்டாவது பகல்/இரவு டெஸ்ட் போட்டியில் அக்சர் பட்டேல் 6/38 மற்றும் 5/32 என்ற கணக்கில் வீழ்த்தி இங்கிலாந்து அணி தோல்வியை சந்திக்க காரணமாக இருந்தார். அக்சர் அந்த தொடரில் 27 விக்கெட்களை கைப்பற்றி அறிமுக தொடரிலேயே அதிக விக்கெட்களை எடுத்த இந்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்தார்.
ஜேம்ஸ் ஆண்டர்சன் (5/62 vs இந்தியா, லார்ட்ஸ்)
Jimmy Anderson 🐐#Ashes pic.twitter.com/Ofa4AJ0HuE
— CricTracker (@Cricketracker) December 27, 2021
ஜேம்ஸ் ஆண்டர்சன் சொந்த மண்ணில் நடந்த 3 வது டெஸ்டில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவை 364 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தார்.இது அவரது 31 வது 5 விக்கெட்கள் ஆகும். மேலும் லார்ட்ஸ் மைதானத்தில் இவரது ஏழாவது 5 விக்கெட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பாட் கம்மின்ஸ் (5/38 vs இங்கிலாந்து, காபா)
November 26, 2021: Named Australia Test captain
— ڈوگـــــــــــــ𝒮𝒶𝒶𝒷ـــــــــــــر (@78ds2) December 28, 2021
December 28, 2021: Wins the Ashes as captain
Not bad, Pat Cummins! 🙌 #Ashes pic.twitter.com/kfIRVlMtpp
ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸ் பிரிஸ்பேனில் நடந்த முதல் ஆஷஸ் டெஸ்டின் முதல் நாளில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் கேப்டனாக தனது டெஸ்ட் போட்டியிலேயே 5 விக்கெட் வீழ்த்தி சிறப்பான சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். 2019 ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானின் ரஷித் கானுக்குப் பிறகு கேப்டனாக அறிமுக டெஸ்டில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது பந்துவீச்சாளர் கம்மின்ஸ் ஆவார்.
ஜேம்ஸ் ஆண்டர்சன் (6/40 vs இலங்கை, களி )
கடினமான நாடுகளில் ஒன்றான இலங்கையில் 38 வயதான ஜேம்ஸ் ஆண்டர்சன் இலங்கைக்கு எதிரான 6 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். சொந்த மண்ணில் மட்டுமே சிறப்பாக விளையாடுகிறார் என்று ஆண்டர்சன் மீது குற்றசாட்டு எழுந்தநிலையில், இவர் வீழ்த்திய 6 விக்கெட்கள் இவரை தனித்துவமாக்கியது .
கைல் ஜெமிசன் (5/31 vs இந்தியா, சௌதம்டன்)
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவிற்கு எதிராக கைல் ஜெமிசன் 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இவரின் இந்த தனித்துவமான பந்து வீச்சு தான் நியூசிலாந்து அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தது.
ஜஸ்பிரித் பும்ரா (5/64 vs இங்கிலாந்து, நாட்டிங்ஹாம்)
இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியதை தொடர்ந்து டிரெண்ட் பிரிட்ஜில் உள்ள மரியாதைப் பலகையில் அவரது பெயர் இடம் பெற்றது. இது இங்கிலாந்தில் பும்ராவின் 2வது 5 விக்கெட்கள் ஆகும். இந்த போட்டியில் பும்ரா, இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், டோம் சிப்லி, சாக் க்ராலி, சாம் கர்ரன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகியவர்களின் விக்கெட்களை வீழ்த்தி இங்கிலாந்து அணியினருக்கு அச்சறுத்தலாக இருந்தார்.
அஸ்வின் (6/61 vs இங்கிலாந்து, சென்னை)
இங்கிலாந்துக்கு எதிரான சென்னை டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணிக்காக ரவிச்சந்திரன் அஸ்வின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 6 விக்கெட்களை வீழ்த்தினார். இந்திய அணிக்காக டெஸ்டில் அஸ்வின் 28வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார், ஆசியாவில் இது 26வது முறையாகும். இதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் அதிக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சனின் சாதனையை அஷ்வின் சமன் செய்தார்.
ஒல்லி ராபின்சன் (5/65 vs இந்தியா, ஹெடிங்லி)
ஹெடிங்லியில் நடந்த தொடரின் மூன்றாவது டெஸ்டில், இந்தியாவை 151 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்த ஒல்லி ராபின்சன் எடுத்த 5 விக்கெட் முக்கிய காரணமாக இருந்தது. இரண்டு இன்னிங்சிலும் 2/16 மற்றும் 5/65 என்ற தனது சிறப்பான புள்ளிகளுக்காக ராபின்சன் 'மேட்ச் ஆஃப் தி மேட்ச்' விருதைப் பெற்றார்.
அஜாஸ் பட்டேல் (10/113 vs இந்தியா, மும்பை)
Incredible achievement as Ajaz Patel picks up all 10 wickets in the 1st innings of the 2nd Test.
— BCCI (@BCCI) December 4, 2021
He becomes the third bowler in the history of Test cricket to achieve this feat.#INDvNZ @Paytm pic.twitter.com/5iOsMVEuWq
நியூசிலாந்து வீரர் அஜாஸ் பட்டேல் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது ஒரே பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றார். மும்பையில் நடந்த இந்தியாவுக்கு எதிரான தொடரின் இரண்டாவது டெஸ்டில் இந்த சாதனையை நிகழ்த்தினார். ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது சுழற்பந்து வீச்சாளராக இங்கிலாந்தின் ஜிம் லேக்கர் மற்றும் இந்தியாவின் அனில் கும்ப்ளே ஆகியோருடன் பட்டேல் இணைந்தார்.