Brian Lara: ஒரே இன்னிங்ஸில் 400 ரன்கள்.. என்னுடைய சாதனையை முறியடிக்க இரண்டு இந்திய வீரர்களால்தான் முடியும்! மனம் திறந்த லாரா!
டெஸ்ட் போட்டியில் 400 ரன்கள் என்ற என்னுடைய சாதனையை முறியடிக்கும் சக்தி இந்திய வீரர்கள் யஜஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில்லுக்கு மட்டும் தான் இருக்கிறது என்று பிரையன் லாரா கூறியிருக்கிறார்.
முறியடிக்கப்படாத சாதனை:
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 ரன்கள் குவித்த ஒரே வீரர் பிரையன் லாரா மட்டும் தான். வெஸ்ட் இண்டீஸ் நாட்டைச் சேர்ந்த ஜாம்பவான் வீரரான இவர் 20 வருடங்களுக்கு முன்பாக இந்த சாதனையை படைத்தார். அதாவது கடந்த 2004 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் 400 ரன்களை குவித்தார். இப்போது வரை இந்த சாதனையை எந்த வீரர்களாலும் முறியடிக்க முடியவில்லை.
இந்திய வீரர்களுக்குத்தான் அந்த சக்தி உள்ளது:
இந்நிலையில் தான் தன்னுடைய இந்த சாதனையை முறியடிக்கும் சக்தி உலகில் இந்திய வீரர்கள் இருவருக்கு மட்டும் தான் உள்ளது என்று பிரையன் லாரா கூறியுள்ளார். அதாவது டெஸ்ட் போட்டியில் 400 ரன்கள் என்ற என்னுடைய சாதனையை முறியடிக்கும் சக்தி இந்திய வீரர்கள் யஜஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில்லுக்கு மட்டும் தான் இருக்கிறது என்று பிரையன் லாரா கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக பேசிய அவர், "இதற்கு முன்னதாக சோபர்ஸ் அடித்த சாதனையை 1970 மற்றும் 80களில் யாருமே முறியடிக்கவில்லை. அதுவும் விவியன் ரிச்சர்ட்ஸ் போன்ற வீரர்கள் விளையாடும் போதும் அதை தொட முடியவில்லை.
இதைப்போன்று என்னுடைய காலகட்டத்தில் சேவாக், கிறிஸ் கெயில், ஜெயசூர்யா, இன்சமாம், மேத்யூ ஹெய்டன் உள்ளிட்ட பல வீரர்கள் கடும் சவால் அளித்தார்கள். இன்னும் சொல்லப்போனால் இந்த வீரர்கள் எல்லாம் 300 ரன்கள் மேல் அடித்தார்கள். அவர்கள் எல்லாம் அதிரடி வீரர்களாக இருந்தது இன்னொரு காரணம். ஆனால் தற்போது எத்தனை பேர் அதிரடியாக விளையாடுகிறார்கள். இங்கிலாந்து அணியில் ஜாக் கிராலி மற்றும் ஹாரி புருக் ஆகியோர் அதிரடியாக விளையாடுகிறார்கள்.
இந்திய அணியை பொறுத்தவரை ஜெய்ஸ்வால் மற்றும் கில் மட்டும்தான் அதிரடியாக விளையாடுகிறார்கள். இந்த இருவரும் சரியான சூழலில் சரியான நேரத்தில் விளையாடினால் நிச்சயம் 400 ரன்கள் என்ற என்னுடைய சாதனையை முறியடிக்க முடியும்" என்று பிரையன் லாரா கூறியுள்ளார்.
மேலும் படிக்க: Gautam Gambhir: கோடிகளில் சம்பளம் மட்டுமல்ல..! பயிற்சியாளர் கம்பீருக்கு சலுகைகளை அள்ளி வீசும் பிசிசிஐGautam Gambhir: கோடிகளில் சம்பளம் மட்டுமல்ல..! பயிற்சியாளர் கம்பீருக்கு சலுகைகளை அள்ளி வீசும் பிசிசிஐ
மேலும் படிக்க: ICC Champions Trophy: நாங்க பாகிஸ்தானுக்கு வரல; இதுவேனா ஓகே: ஐடியா கொடுக்கும் பிசிசிஐ! ஏற்குமா ஐசிசி?