மேலும் அறிய

Yashasvi Jaiswal Profile: டெஸ்ட்டில் அறிமுகமான அதிரடி நாயகன்.. யார் இந்த யாஷஸ்வி ஜெய்ஸ்வால்

Yashasvi Jaiswal Profile சாதாரண குடும்பத்திலிருந்து, போட்டி நிறைந்த மும்பை சீனியர் அணியில் நுழைந்தது நெகிழ்ச்சியடைவைக்கும் கதைதான். 

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலம் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தை தொடங்குகிறார்.

 டொமினிகாவில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில், அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவுடன் சேர்ந்து தொடர்க்க ஆட்டக்காரராக களமிறங்குகிறார். இளம்வயதிலேயே திறமையுடன் விளையாடி சாதனை புரிந்துள்ள, யாஷஸ்வியின் கிரிக்கெட் பயணம் குறித்த கதையின் தொகுப்பு இது. 

இரானி கோப்பை - இளம் வயதில் இரட்டைச் சதம் 

2019, அக்டோபர் - இரானி கோப்பை

இரானி கோப்பை போட்டியில், மும்பை அணிக்காக களமிறங்கினார். 154 பந்துகளில் 203 ரன் எடுத்து சாதனை படைத்தார். 17 பவுண்டரிகள், 12 சிக்சர்கள் விளாசியிருந்தார். அப்போது அவருக்கு 20 வயது. மிக இளம் வயதில் கிஸ்ட் ஏ பிரிவில் இரட்டைச் சதம் எடுத்த வீரர் என்ற வரலாற்றினைப் படைத்தார். இடது கை வீரரான ஜெய்ஸ்வால், அந்தப் போட்டுயில் ஜார்கண்ட் அணியில் ஒருகாலத்தில் அதிவேகப் பந்துவீச்சாளராக திகழ்ந்த வருண் ஆரோன் இருந்தார். அப்படியிருந்த அணியில், அதிரடியாக விளையாடி 200 என் எடுத்திருக்கிறார். அப்போது,  20- வயது 275 நாட்களில் லிஸ்ட் ஏ இரட்டைச் சதம் எடுத்த தென் ஆப்பிரிக்க வீரர் ஆலன் பாரோவின் சாதனையை முறியடித்தார்.

சாதாரண குடும்பத்திலிருந்து, போட்டி நிறைந்த மும்பை சீனியர் அணியில் நுழைந்தது நெகிழ்ச்சியடைவைக்கும் கதைதான். 2018-ம் ஆண்டு டாக்காவில் நடந்த யு-19 (19-வயதுக்குட்டப்பட்டோருக்கான போட்டி) ஆசியக் கோப்பையில் முதன் முதலாக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடினார். இந்தத் தொடரின், இறுதிப் போட்டியில் இலங்கையை 144 ரன்களில் வீழ்த்தி இந்தியா அணி கோப்பையைக் கைப்பறியது. அதற்கு, ஜெய்ஸ்வால் 113 பந்துகளில் 85 ரன் எடுத்தது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. அந்தத் தொடரில், 318 ரன்கள் எடுத்து முதலிடம் பிடித்தார். 

அதே ஆண்டு., இங்கிலாந்தில் நடந்த யு-19 முத்தரப்பு தொடரில் 7 இன்னிங்ஸ்களில் 294 ரன்களை எடுத்தார். 4 அரைசதங்கள் இதில் இறுதிப் போட்டியில் 72 பந்துகளில் அரைசதம் அடித்தார். 

உத்தரப்பிரதேச மாநிலம் பாதோஹியில் சிறு கடை வைத்திருந்த தந்தைக்கு மகனாக பிறந்தவர் ஜெய்ஸ்வால். கிரிக்கெட் மீதிருந்த அதீத காதலால் அவர் மும்பைக்கு வந்துவிட்டார். அப்போது, இரவு நேரங்களில் பால்பொருள் விற்பனை கடைகளில் படுத்து உறங்கியிருக்கிறார். இன்று முதல் முதலாக இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டியில் விளையாட இருப்பது மிகவும் பாராட்டிற்குரியது. 

முஸ்லீம் யுனைடெட் கிளப் மைதான ஊழியர்களுடன் ஆசாத் மைதானத்தில் டெண்ட்களில் வாழ்க்கையை கழித்தார். கிரிக்கெட் பயிற்சியுடன் பானிபூரி விற்றுள்ளார். தெருவில் உள்ள சிற்றுண்டிக் கடைகளில் பணியாற்றியுள்ளார்.உள்ளூர் கிரிக்கெட் போட்டுகளில் விளையாட வாய்ப்பு கிடைப்பதற்கு முன்பு, கடுமையாக நாட்களை சந்தித்துள்ளார். மும்பை கிரிக்கெட் க்ளப் நிறுவனர், கிரிக்கெட் பயிற்சியாளர் ஜவாலா சிங், ஜெய்ஸ்வால் திறமையாக கிரிக்கெட் விளையாடுவதை கண்டுள்ளார். அவருக்கு பயிற்சி அளித்துள்ளார். இவரே ஜெய்ஸ்வால் தங்குவதற்கு இடம் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.

இன்றைய போட்டியிலும் தனது திறமையை வெளிப்படுத்துவார் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

NEET Counselling: அப்படி போடு..! மருத்துவ இடங்கள், சிறப்பு நீட் கவுன்சிலிங் நடத்துங்க - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
NEET Counselling: அப்படி போடு..! மருத்துவ இடங்கள், சிறப்பு நீட் கவுன்சிலிங் நடத்துங்க - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
Erode East : “காங்கிரஸ்க்கு பதில் இந்த முறை திமுக” ஈரோடு கிழக்கில் போட்டி..?
Erode East : “காங்கிரஸ்க்கு பதில் இந்த முறை திமுக” ஈரோடு கிழக்கில் போட்டி..?
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
Donald Trump: முதல் நாள் முதல் கையெழுத்து ”திருநங்கைகளுக்கு உரிமைகள் இல்லை” -  ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
Donald Trump: முதல் நாள் முதல் கையெழுத்து ”திருநங்கைகளுக்கு உரிமைகள் இல்லை” - ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Christmas Celebration | ’’ஐயோ..ஐயோ..கதறும் பெண்கள்’’தவெக விழாவில் பரபரப்பு | Vijay | Bussy AnandTN Local Body Election | உள்ளாட்சி தேர்தல் கேம் ஓவர்! ஸ்டாலினின் பழைய ப்ளான் குமுறலில் கவுன்சிலர்கள்Surmount Logistics Rewards | ஊழியர்களுக்கு பைக், கார் பரிசுகெத்து காட்டும் நிறுவனம்  அட நம்ம சென்னையில பா!Chennai Food Festival : ’’பீப் ஏன் இடம்பெறல?’’பொங்கி எழுந்த நீலம்! OFF செய்த அரசு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET Counselling: அப்படி போடு..! மருத்துவ இடங்கள், சிறப்பு நீட் கவுன்சிலிங் நடத்துங்க - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
NEET Counselling: அப்படி போடு..! மருத்துவ இடங்கள், சிறப்பு நீட் கவுன்சிலிங் நடத்துங்க - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
Erode East : “காங்கிரஸ்க்கு பதில் இந்த முறை திமுக” ஈரோடு கிழக்கில் போட்டி..?
Erode East : “காங்கிரஸ்க்கு பதில் இந்த முறை திமுக” ஈரோடு கிழக்கில் போட்டி..?
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
Donald Trump: முதல் நாள் முதல் கையெழுத்து ”திருநங்கைகளுக்கு உரிமைகள் இல்லை” -  ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
Donald Trump: முதல் நாள் முதல் கையெழுத்து ”திருநங்கைகளுக்கு உரிமைகள் இல்லை” - ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
SA vs PAK : பவுமா பாய்ஸ்சை பந்தாடிய பாகிஸ்தான்! முதல் முறையாக தென்னாப்பிரிக்கா ஒயிட் வாஷ்...
SA vs PAK : பவுமா பாய்ஸ்சை பந்தாடிய பாகிஸ்தான்! முதல் முறையாக தென்னாப்பிரிக்கா ஒயிட் வாஷ்...
Breaking News LIVE: திமுக அரசு மீது விசிக-வுக்கு எந்த அதிருப்தியும் இல்லை  - திருமாவளவன்
Breaking News LIVE: திமுக அரசு மீது விசிக-வுக்கு எந்த அதிருப்தியும் இல்லை - திருமாவளவன்
"2025ல முடியாதுங்க" குடியரசுத் தின அணிவகுப்பில் தமிழக அரசு ஊர்தி ஏன் பங்கேற்காது?
"பிராமணர்களே மற்றவர்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தந்தனர்" புகழ்ந்து தள்ளிய தி.மு.க. எம்.எல்.ஏ.
Embed widget